இலங்கை, தென்மராட்சிப் பிரதேசத்தில் பின் தங்கிய கிராமங்களில் இருக்கும் மாணவர்களுக்கான கல்வி முன்னேற்றத்திற்கு ஆதரவு கொடுப்பதை முக்கியமான நோக்கமாகக் கொண்டு கனடாவில் தென்மராட்சி அபிவிருத்தி சங்கம் புதிய நிர்வாக அங்கத்தவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும்.
தென்மராட்சி அபிவிருத்தி சங்கத்தைப் பற்றி அறியவும், உங்கள் மகத்தான பங்களிப்புகளைக் கொடுத்து ஆதரவு அளிக்கவும் உங்களுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. தென்மராட்சி அபிவிருத்தி சங்கம் வழங்கும் "தென்மராட்சி விழா" வில் கலந்து சிறப்பிக்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகின்றனர் சங்கத்தின் நிர்வாகசபையினர்.
2030 Midland Avenue, Toronto, M1S 5G5, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் CICS Community Centerல், சனிக்கிழமை, April 21, 2018 அன்று இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
நுழைவுச் சீட்டுகளுக்கும், மேலதிக விபரங்களுக்கும் கீழ்வரும் சங்க நிர்வாக அங்கத்தினர்களை அணுகுங்கள்:
நெல் கேதார நாதன் 416-677-4707
ரமணன் ராமச்சந்திரன் 416-670-6467
"தென்மராட்சி விழா" பெருவெற்றிபெற உசன் மக்கள் அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்க வேண்டுமென்று உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு வேண்டி நிற்கிறது. சிவகுமார் நவரத்தினம், உமாபதி இராசரத்தினம் மற்றும் பாஸ்கரன் சுப்பிரமணியம் ஆகியோரோடு தொடர்பு கொண்டு நுழைவுச் சீட்டுகளை வாங்கிக்கொள்ளவும்.