உலகத் தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையினால் நடாத்தப்படும் 6 வது சர்வதேச பூப்பந்து போட்டி டென்மார்க் நாட்டில் மார்ச் 30/31 ம் திகதிகளில் நடைபெறவுள்ளநிலையில் கனடா நாட்டில் இருந்து 50 க்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் கலந்து கொள்ள டென்மார்க் சென்றுள்ளனர்.
கனடா அணியில் உசன் மண்ணைச் சேர்ந்த 4 வீரர்கள் உள்ளடங்குகின்றனர். செல்வன் கோகுலன் சிவகுமார், திரு. உமாபதி இராசரத்தினம், திரு. சிவகுமார் நவரத்தினம், திரு. நகுலன் கனகசபை ஆகியோர் சர்வதேச பூப்பந்து போட்டியில் பங்குபற்ற டென்மார்க் சென்றுள்ளனர்.
இந்தப் போட்டியில் செல்வன் கோகுலன் சிவகுமார் பலதரப் போட்டிகளிலும் பங்குபற்றவுள்ளார். இவர் இந்தப் போட்டியில் மற்ற வீரர்களுக்குச் சவாலாக விளங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் போட்டியில் உசன் வீரர்கள் பங்குபற்றுவது மிகவும் மகிழ்ச்சி. வீரர்கள் வெற்றி பெற வாழ்த்துவதுடன், டென்மார்க் வாழ் உசன் மக்கள் இயலுமானவரை சென்று எமது உசன் வீரர்களுக்கு உற்சாகம் வழங்குமாறு வேண்டுகிறோம்.