கனடா வாழ் உசன் மக்களின் ஆணிவேராக இயங்கும் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்துக்கும்
நிதி உதவி வழங்கிவரும் சமூக ஆர்வலர் Dr.இந்திரன் ஆசிர்வாதம் அவர்களின் தயாரிப்பில் .வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நகைச்சுவை திரைப்படம் ஒன்று தயாராகியுள்ளது .
" ஏண்டா தலையில எண்ணெய் வைக்கல " என்னும் திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார் , படத்துக்கு A.R .ரகுமான் அவர்களின் .சகோதரி A.R .ரெஹானா அவர்கள் இசையமைத்துள்ளார் .
இந்த திரைப்படம் இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவரும் நிலையில் சர்வதேச ரீதியில் தமிழர்கள் வாழும் இடங்களிலும் வெளியிடப்படவுள்ளது .
கனடாவில் வரும் சனி ஞாயிறு திங்களில் woodside சினிமாவில் காண்பிக்கப்படவுள்ளது .
எமது உசன் ஊரை பூர்வீகமாக கொண்டு எமக்கு அதிகளவில் நிதியுதவி வழங்கி எமது உசன் ஊரை வளர்த்துவரும் Dr.இந்திரன் அவர்களின் இந்த திரைப்படம் வெற்றியடைய அனைத்துலக உசன் மக்களும் உங்கள் நன்றி உணர்வை வெளிப்படுத்த வேண்டிய சந்தர்ப்பம் இது .
உங்களுக்கு அருகில் திரையிடப்படும் இந்த திரைப்படத்தை அனைவரும் கண்டுகளித்து . திரைப்படத்தை வெற்றியடைய வைக்குமாறு கனடா உசன் மக்கள் ஒன்றியம் வேண்டி நிக்கிறது .
கனடா வாழ் உசன் மக்கள் உங்கள் தார்மீக நன்றி உணர்வை வெளிப்படுத்த திரைப்பட Ticket தொடர்புகளுக்கு
தலைவர் : திரு. பாஸ்கரன் சுப்பிரமணியம் அவர்களையே அல்லது Dr.இந்திரன் ஆசிர்வாதம் அவர்களையோ தொடர்பு கொள்ளலாம் .
எதிர்வரும் சனி ஞாயிறு திங்களில் woodside சினிமாவில் கனடா வாழ் உசன் மக்கள் அனைவரையும் திரளாக வருமாறு வேண்டுகிறோம் .
"உசன் மண்ணின் மைந்தனின் திறமை உலகெல்லாம் பரவ ஒத்துழைப்போம்"
நன்றியுடன்
கனடா உசன் மக்கள் ஒன்றியம் .