அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, February 18, 2018

உசன் இராமநாதன் மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு

உசன் இராமநாதன் மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு February 2, 2018, வெள்ளிக்கிழமை அன்று பாடசாலை மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

வைத்தியலிங்கம் இல்லம், நடேசன் இல்லம் மற்றும் சிற்றம்பலம் இல்லம் ஆகியவற்றுக்கிடையே போட்டிகள் இடம்பெற்றன.

வைத்தியலிங்கம் இல்லம் 324 புள்ளிகளைப் பெற்று முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டது.  நடேசன் இல்லம் 303 புள்ளிகளையும், சிற்றம்பலம் இல்லம் 235 புள்ளிகளையும் பெற்று இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.


 அணிநடைப் போட்டியில் வைத்தியலிங்கம் இல்லம் முதலாம் இடத்தையும், நடேசன் இல்லம் இரண்டாம் இடத்தையும், சிற்றம்பலம் இல்லம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.


ஆண்களுக்கான சிறந்த அஞ்சலோட்டக் குழுக்களில் வைத்தியலிங்கம் இல்லம் முதலாம் இடத்தையும், நடேசன் இல்லம் இரண்டாம் இடந்த்தையும் சிற்றம்பலம் இல்லம் மூன்றாம் இடைத்ததையும் பெற்றுக்கொண்டன.

பெண்களுக்கான சிறந்த அஞ்சலோட்டக் குழுக்களில் சிற்றம்பலம் இல்லமும், வைத்தியலிங்கள் இல்லமும் தலா 17 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பகிர்ந்துகொண்டன.










இடம்பெற்ற போட்டிகளில் அதி சிறந்த வீரர்களாகப் (Champions) பின்வருவோர் வெற்றியீட்டினர்:


12 வயது ஆண்கள் - நடேசன் இல்லத்தைச் சேர்ந்த சி. சீராளன்
12 வயது பெண்கள் - வைத்தியலிங்கம் இல்லத்தைச் சேர்ந்த செ. சங்கவி

14 வயது ஆண்கள் - நடேசன் இல்லத்தைச் சேர்ந்த சி. சிந்துஜன்
14 வயது பெண்கள் - நடேசன் இல்லத்தைச் சேர்ந்த ப. வினோஜா

16 வயது ஆண்கள் - வைத்தியலிங்கம் இல்லத்தைச் சேர்ந்த சு. சந்தோஸ்
16 வயது பெண்கள் - சிற்றம்பலம் இல்லத்தைச் சேர்ந்த சி. பவித்திரா

18 வயது ஆண்கள் - வைத்தியலிங்கம் இல்லத்தைச் சேர்ந்த கு. லக்சன்
18 வயது பெண்கள் - வைத்தியலிங்கம் இல்லத்தைச் சேர்ந்த க. சாயித்தியா
18 வயது பெண்கள் - நடேசன் இல்லத்தைச் சேர்ந்த இ. தவநந்தினி

20 வயது ஆண்கள் - சிற்றம்பலம் இல்லத்தைச் சேர்ந்த சு. கீர்த்தனன்
20 வயது பெண்கள் - நடேசன் இல்லத்தைச் சேர்ந்த ம. கம்சினி

இந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு சிறப்பாக நடைபெற அதிபர் த. சோதிலிங்கம் அவர்கள் ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார். உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவர்கள் சங்கம் முன்னின்று நிகழ்வு சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்தது.  சுவேந்திரநாதன் அஜந்தகுமார் மற்றும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் நிதி உதவியோடு இந்த நிகழ்வு இடம்பெற்றது.





















நன்றி: தகவல் மற்றும் படங்கள் - கஜீவன்.