உசன் இராமநாதன் மகா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு எதிர்வரும் February 2, 2018, வெள்ளிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெற உள்ளது.
வித்தியாலய முதல்வர் த. சோதிலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெறும் இந்த நிகழ்வில் தென்மராட்சி கல்வி வலைய கல்வி முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் நா. கந்ததாசன் அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்து சிறப்பிக்க உள்ளார்.
Hatton National Bank இன் வடபிராந்திய முகாமையாளர் சி. சுந்தரேஸ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், தென்மராட்சி கல்வி வலைய உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ந. சிறீகாந்தா அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கின்றனர்.
உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர்கள் சங்கம் இந்த நிகழ்வை முன்னின்று நடத்துகிறது.
இந்த நிகழ்வில் கலந்து விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துமாறு பெறோர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாணவர்களின் விளையாட்டுத் திறமையை வெளிக்கொணரும் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.