உசன் மக்களின் குளிர் கால ஒன்றுகூடலான "உசன் உறவுகள்" நிகழ்வு சனிக்கிழமை January 20, 2018 அன்று நடைபெற உள்ளது என்பதை நினைவூட்ட விரும்புகின்றோம்.
அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் உசன் கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் கனடாவின் முன்னணி தாளவாத்திய இசைக்குழுவான RA Rhythm இசைக் குழுவினரின் "இசை மழை" நிகழ்ச்சியும் உங்கள் அனைவரினதும் உள்ளங்களைக் கொள்ளைகொள்ள இருக்கின்றது. உசன் பாடகர்களும் "இசை மழை" நிகழ்ச்சியில் பாடி மகிழ்விக்க இருக்கிறார்கள்.
3300 McNicoll Avenue, Scarborough, ON M1V 5J6, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Baba Banquet Hall இல் மாலை 6 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமாகும்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவில் அங்கத்தவர்களாக உள்ளவர்களுக்கு மேலதிக நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லை. அங்கத்தவர்கள் அல்லாதவர்களுக்கு, தனி ஒருவருக்கு $30.00, இருவருக்கு $60.00, 4 பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்கு $100.00 நுழைவுக் கட்டணமாக அறவிடப்படும். இந்த நிகழ்வில் வைத்து அங்கத்தவர்களாகச் சேர்ந்துகொள்ள விரும்புபவர்கள் VOID Cheque ஒன்று கொண்டு வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உசன் உறவுகள் நிகழ்வில் கலந்து சிறப்பித்து மகிழ உசன் மக்களையும், உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர்களையும், அயற்கிராம மக்களையும், மற்றும் அனைவரையும் அன்போடு அழைக்கிறது உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா.