உசன் கந்தசுவாமி கோவிலில் 108 கலசாபிஷேக ஸ்கந்த ஹோம பெருவிழா ஞாயிற்றுக்கிழமை, February 18, 2018 அன்று நடைபெற உள்ளது. உசன் கந்தசுவாமி கோவில் பிரதம குரு அருள்வாக்குச் சித்தர் குகஸ்ரீ இரத்தின கேதீஸ்வர சுவாமிகள் தலைமையில் பல சிவாச்சாரியார்கள் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
இந் நிகழ்வின் ஆரம்பமாக சனிக்கிழமை, February 17, 2018 அன்று மாலை 5 மணிக்கு கிரியா கிரமம் இடம்பெறும்.
ஹோம பூசையில் இணைந்துகொள்ள விரும்பும் அடியார்கள் பிரதம குரு மற்றும் தர்மகர்தாவுடன் தொடர்பு கொண்டு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யலாம். பிரதம குருவின் தொலைபேசி இலக்கம் +94777238561.
அடியார்கள் அன்னதானத்துக்குரிய பொருட்களை உபகரிக்கலாம்.
மாற்று வலுவுள்ளோருக்கான உதவிகளும் வழங்கப்படும்.
அன்றைய தினம் யாழ்ப்பாணம் - உசன் - யாழ்ப்பாணம் பாதையில் இ. போ. ச. மற்றும் தனியார் வண்டிகள் விசேட போக்குவரத்துச் சேவையில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
இந்த நிகழ்வுகளை www.facebook.com/usankanthan என்ற இணையத் தளத்தில் நேரடியாகப் பார்க்கலாம்.