அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, December 3, 2017

"உசன் உறவுகள்"


அன்பார்ந்த உசன் மக்களே!

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வருடாந்தம் வழங்கும் உள்ளரங்க நிகழ்வான  "உசன் உறவுகள்" நிகழ்வு கடந்த காலங்களை விட மேலும் சிறப்பாக இந்தமுறை நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம்.  கனடா வாழ் உசன் மக்களின் தரமான நிகழ்வுகள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்த உள்ளன. 

கடந்த வருடம் RA Rhythm இன் "இன்னிசை மழை" மிகவும் வரவேற்பைப் பெற்றிருந்தது.  எனவே இந்த முறையும் அந்த நிகழ்வு மீண்டும் ஒழுங்கு செய்யப்பட்டுள்து என்ற மகிழ்ச்சியான தகவலைப் பரிமாறிக்கொள்ள விரும்புகிறோம்.  நேரடி இசையோடு பாடி அசத்த விரும்புவோர் December 10, 2017 ஆம் திகதிக்கு முன்பாக செயலாளர் விஜயகுமாரிரோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.  பயிற்சிகளை விரைவாக ஆரம்பிக்கவேண்டியுள்ளதால் காலதாமதம் செய்ய வேண்டாம்.

தவிர, "உசன் உறவுகள்" நிகழ்வில் பலவிதமான நிகழ்ச்சிகள் மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்த விரும்புவோரும் செயலாளரோடு விரைவில் தொடர்புகொண்டு விபரங்களை வழங்கவும்.

இந்த நிகழ்வை மேலும் சிறபாக்க உங்கள் ஆலோசனைகளைத் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்க விரும்பும் தொழில் அதிபர்கள் மற்றும் தனிப்பட்டோர் செயலாளர் விஜயகுமாரியோடு தொடர்பு கொள்ளவும்.

வெளிநாடு வாழ் உசன் மக்களே கனடாவின் குளிரை அனுபவிப்பதோடு, உங்கள் உறவுகள் அனைவரையும் ஒன்றுசேரச் சந்திப்பதற்கு இந்த நிகழ்வைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு January மாதம்  20 ஆம் திகதி, சனிக்கிழமை Baba Banquet Hall இல் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.  இந்தத் திகதியை குறித்து வைத்து நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அனைவரையும் அன்போடு அழைக்கிறது.