அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, December 30, 2017

உசனை சேர்ந்த மாணவர்கள் சிறந்த பெறுபேறு

அண்மையில் வெளியாகிய க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளில் உசனைச் சேர்ந்த மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற்று உசன் மண்ணுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

1. திரு. திருமதி மிகுந்தன் துஷி தம்பதிகளின் புதல்வன் செல்வன் வக்சலன் விஞ்ஞான பிரிவில் யாழ் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் 9 ம் இடத்தையும்,

2. திரு. திருமதி நவகுமார் தம்பதிகளின் புதல்வி செல்வி தாரங்கி விஞ்ஞான பிரிவில் 3 A சித்தி பெற்று யாழ் மாவட்ட ரீதியில் 8 ம் இடத்தையும்,

3. திரு. திருமதி.இரவீந்திரன் தம்பதிகளின் புதல்வி செல்வி ஜோகினி விஞ்ஞான பிரிவில் 2 A, B சித்தி பெற்று யாழ் மாவட்ட ரீதியில் 13 ம் இடத்தையும்,

4. திரு. திருமதி உருத்திரமூர்த்தி நங்கை தம்பதிகளின் புதல்வன் செல்வன் வினுஜன் கணித பிரிவில்  3 A சித்தி பெற்று யாழ் மாவட்ட ரீதியில் 37 ம் இடத்தையும்,

5. திரு. திருமதி மனோகரன்  தாரணி தம்பதிகளின் புதல்வி செல்வி லக்சி வர்த்தக பிரிவில் 2 A, C சித்தியையும்,

6. திரு. திருமதி சிவப்பிரகாசம் தம்பதிகளின் புதல்வி செல்வி கார்த்திகா விஞ்ஞான பிரிவில் 2 A, B  சித்தி பெற்று யாழ் மாவட்ட ரீதியில் 63 ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை வாழ்த்துவதோடு தொடர்ந்து அவர்கள் கல்விப்பயணத்தில் பிரகாசிக்க வாழ்த்துகிறோம்.

உசனைப் பூர்விகமாகக் கொண்ட மாணவர்கள் நல்ல பெறுபேற்றைப் பெற்றிருந்தாலோ அல்லது வேறு துறையில் திறமை பெற்றிருந்தாலோ www.usan.ca இணையத் தளத்தோடு பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வர முடியும்.

தொடர்புகளுக்கு: உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா
https://www.facebook.com/usanpeople
president@usan.ca
aju@usan.ca



Wednesday, December 13, 2017

திரு.இளையதம்பி அவர்கள் இறைவனடி சேர்ந்தார்

உசனை சேர்ந்தவரும் உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் ஆசிரியருமான திருமதி விஜயராணி அவர்களின் அன்பு கணவர்
திரு.இளையதம்பி அவர்கள் , கொழும்பில் காலமானார் ,
அன்னார் திரு.திருமதி ஒப்பிலாமணி அவர்களின் மருமகனாவார் .
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம் .
மேலதிக தகவல் பின்னர் அறியத்தரப்படும் .

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதுடன் அன்னாரின் பிரிவால் தவிக்கும் குடும்பத்தினருக்கு கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது .

தகவல்
விஜயலட்சுமி கனடா      -905-303-4866
விஜயகுமாரி கனடா -416-845-8795
விஜயகுலன் கனடா - 416-720-5215
விஜய ரூபன் கனடா -416-271-1763




Sunday, December 3, 2017

"உசன் உறவுகள்"


அன்பார்ந்த உசன் மக்களே!

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வருடாந்தம் வழங்கும் உள்ளரங்க நிகழ்வான  "உசன் உறவுகள்" நிகழ்வு கடந்த காலங்களை விட மேலும் சிறப்பாக இந்தமுறை நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம்.  கனடா வாழ் உசன் மக்களின் தரமான நிகழ்வுகள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்த உள்ளன. 

கடந்த வருடம் RA Rhythm இன் "இன்னிசை மழை" மிகவும் வரவேற்பைப் பெற்றிருந்தது.  எனவே இந்த முறையும் அந்த நிகழ்வு மீண்டும் ஒழுங்கு செய்யப்பட்டுள்து என்ற மகிழ்ச்சியான தகவலைப் பரிமாறிக்கொள்ள விரும்புகிறோம்.  நேரடி இசையோடு பாடி அசத்த விரும்புவோர் December 10, 2017 ஆம் திகதிக்கு முன்பாக செயலாளர் விஜயகுமாரிரோடு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.  பயிற்சிகளை விரைவாக ஆரம்பிக்கவேண்டியுள்ளதால் காலதாமதம் செய்ய வேண்டாம்.

தவிர, "உசன் உறவுகள்" நிகழ்வில் பலவிதமான நிகழ்ச்சிகள் மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்த விரும்புவோரும் செயலாளரோடு விரைவில் தொடர்புகொண்டு விபரங்களை வழங்கவும்.

இந்த நிகழ்வை மேலும் சிறபாக்க உங்கள் ஆலோசனைகளைத் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்க விரும்பும் தொழில் அதிபர்கள் மற்றும் தனிப்பட்டோர் செயலாளர் விஜயகுமாரியோடு தொடர்பு கொள்ளவும்.

வெளிநாடு வாழ் உசன் மக்களே கனடாவின் குளிரை அனுபவிப்பதோடு, உங்கள் உறவுகள் அனைவரையும் ஒன்றுசேரச் சந்திப்பதற்கு இந்த நிகழ்வைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு January மாதம்  20 ஆம் திகதி, சனிக்கிழமை Baba Banquet Hall இல் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.  இந்தத் திகதியை குறித்து வைத்து நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அனைவரையும் அன்போடு அழைக்கிறது.