அன்பார்ந்த உசன் மக்களே!
ஒரு கிராமத்தின் பெருமை அதன் வளர்ச்சியில் தங்கியுள்ளது. அந்த வளர்ச்சி கிராமத்தின் கட்டுமாணத்தில் தங்கியுள்ளது. பாடசாலை, கோவில், கடைகள், வீதிகள், போக்குவரத்து போன்றவற்றோடு வாசிகசாலை அல்லது நூலகம் என்பதும் கிராம வளர்ச்சியில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.
இதனை அடிப்படையாக வைத்து உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையோடு ஆரம்பிக்கப்பட்ட நூலக வேலைகள் 2014 ஆம் ஆண்டு தை மாதம் "பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம்" என்ற பெயருடன் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது. அமரர் பண்டிதர் சரவணமுத்து அவர்களின் மக்கள் சுசீலாதேவி சுகுணேஸ்வரன் அவர்கள் தனது வீட்டை நூலகத்துக்காக வழங்கியிருந்தார். இந்த நூலகத்தைச் சிறப்பாக நடத்துவதற்காகப் பலரும் நூல்களை அன்பளிப்பாக வழங்கியிருந்தனர். பின்னர் மின்னிணைப்பு, இணையத் தொடர்பு என்பன ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. நூலகத்தைச் சரிவர நடத்தவும், அது அமைந்துள்ள வீட்டைப் பராமரிக்கவும் என உசன் சனசமூக நிலையம் உருவாக்கப்பட்டு அதன் கீழ் இந்த நூலகம் பதிவு செய்யப்பட்டது. கூடவே இரு பணியாளர்களும் அமர்த்தப்பட்டனர்.
இவற்றுக்கான செலவு மாதமொன்றுக்கு CDN $300.00 ஆக இருக்கிறது. இதன் மிகப் பெரும் பகுதியை குறிப்பிட்ட கனடா வாழ் உசன் மக்கள் வருடந்தோறும் வழங்கி வந்தனர். தொடர்ந்தும் இந்தச் செலவை அவர்கள் மேல் சுமத்துவது நாகரீகமாகாது என்ற நிலையில் இந்தச் செலவுக்கான வருமானத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்தது. அதனடிப்படையில் உசன் சனசமூக நிலைய நிர்வாகத்தினரின் ஆலோசனைக்கிணங்க மாதம் CDN $300.00 வட்டியாக வரக்கூடிய பணத்தைச் சேகரித்து நிரந்தர வைப்பிலிடுவது என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தனியே நூலகச் செலவுக்காகப் பணத்தைச் சேகரிக்காமல் எதிர்கால உசன் அபிவிருத்திக்குமாகப் பணத்தைச் சேகரிப்பது சிறந்தது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
இதனடிப்படையில் CDN $50,000.00 ஐ இலக்காகக் கொண்டு நிதி சேகரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பலரும் முன்வந்து தமது பங்களிப்பைச் செய்து வருகின்றனர். இந்த நிதி சேகரிப்பின் முதற்கட்டமாக Rs. 1,000,000.00 (அண்ணளவாக CDN $10,000.00) சேகரிக்கப்பட்டு உசன் சனசமூக நிலையத்திடம் கடந்த சனிக்கிழமை அன்று கையளிக்கப்டுள்ளது. இலக்கை எட்டுவதற்கான மிகுதி பணத்தை அனைத்துலக வாழ் உசன் மக்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். கூடிய விரைவில் இந்த இலக்கை எட்டவேண்டிய தேவை உள்ளதால் உங்கள் பங்களிப்பை உடனடியாக எதிர்பார்க்கிறோம்.
இந்த நிதி சேகரிப்புக்குப் பொறுப்பாக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா சார்பில் பத்மகாந்தன் சரவணமுத்து அவர்கள் நியமிக்கப்பட்டுளார். அவரோடு pathman.s1@hotmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது +1-647-219-2027 என்ற செல்லிடப்பேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு உங்களின் பங்கைளிப்பை வழங்குமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு வேண்டி நிற்கிறது. மேலதிகமாக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் தலைவர் பாஸ்கரன் சுப்பிரமணியம் அவர்களோடு president@usan.ca என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது +1-647-448-7434 என்ற செல்லிடப்பேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். இந்த இரண்டு இலக்கங்களிலும் Viber அல்லது WhatsApp மூலமாகவும் தொடர்பு கொள்ள முடியும்.
உங்களின் பங்களிப்புக்கு பற்றுச் சீட்டு வழங்கப்படும். உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா Ontario மாகாணத்தில் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகம் வாழ் அன்பார்ந்த உசன் மக்களே தேவையறிந்து இந்த உதவியைச் செய்ய முன் வருமாறு உசன் சனசமூக நிலையம் மற்றும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா ஆகியன கேட்டுக்கொள்கின்றன.