அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Thursday, October 26, 2017

திரு. சுந்தரலிங்கம் கனகரட்ணம்



பிறப்பு  08-04-1949   -    இறப்பு 18-10-2017

சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், Toronto,கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. சுந்தரலிங்கம் கனகரட்ணம் October 18ம் திகதி புதன்கிழமை Toronto வில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கனகரட்னம் - சரஸ்வதி தம்பதியினரின் இளைய மகனும்,

காலஞ்சென்றவர்களான சுவாமிநாதன் வினாசித்தம்பி - சிவாகாமிப்பிள்ளை தம்பதியினரின் மருமகனும்,

உசன், மிருசுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட நிர்மலாதேவியின் அன்புக் கணவரும்,

கௌசிகன், நிரோசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தங்கவடிவேல், மகேஸ்வரி (இலங்கை) ஆகியோரின் சகோதரரும்,

அற்புதமணி, தியாகராஜா, நித்தியானந்தன், கருணானந்தன், சிவானந்தி, சயின்தாதேவி (இலங்கை) ஆகியோரின் மைத்துனருமாவார்.

அன்னாரின் நல்லுடல்,  8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 என்ற முகவரியில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல்  October 28ம் திகதி சனிக்கிழமை மாலை 5 மணி முதல் 9 மணிவரையும், October 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும் இறுதி வணக்கத்துக்காக வைக்கப்படும்.

பின்னர் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 10:30 மணிவரை இறுதிக் கிரியைகள் நடைபெற்று, பகல் 10:40 மணிக்கு அன்னாருடைய நல்லுடல் தகனத்துக்காக 12492 Woodbine Avenue, Gormley, ON L0H 5G0  என்ற முகவரியில் அமைந்துள்ள Highland Hills Crematorium க்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

தொடர்புகளுக்கு:
கருணானந்தன்: +1 416 894 3353
நிர்மலாதேவி: +1 416 303 7709
மேனகன்: +1 647 291 6362

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் முருகனைப் பிரார்த்திப்பதோடு, அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் அனைவருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.


Sunday, October 22, 2017

துயர் பகிர்வு


உசனைச் சேர்ந்த சிவதாஸ் குகதாஸ் அவர்களின் மனைவி லோகேஸ்வரி சிவதாஸ் அவர்கள் யாழ்ப்பாணம், இலங்கையில் சிவபதம் அடைந்தார்.  இவர் குகதாஸ் - சிவபாக்கியம் தம்பதிகளின் மருமகளும், நிலக்சனின் அன்புத் தாயாரும், கமலதாஸ், ஈஸ்வரதாஸ், விமலதாஸ் (தர்மகர்த்தா - உசன் கந்தசாமி கோவில், காப்பாளர் - உசன் சனசமூக நிலையம்) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இறுதிக் கிரியைகள் புதன்கிழமை, October 26, 2017 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறும்.

அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய உசன் முருகனைப் பிரார்த்திக்கும் அதேவேளை அன்னாரின் குடும்பத்தினருக்கு எமது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Saturday, October 14, 2017

இங்கிலாந்தில் உசன் உறவுகள் ஒன்றுகூடல்


இங்கிலாந்தில் வாழும் உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் கல்விபயின்ற மாணவர்களும் உசன் வாழ் மக்களும் ஒன்று கூடும் நிகழ்வொன்று நாளை நடைபெறவுள்ளது . உசன் பாடசாலையில் பயின்ற இளையவர்ககளின் நீண்ட  கால உழைப்பில் இந்த ஒன்று கூடல் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது .நீண்ட காலத்தின் பின் இங்கிலாந்து வாழ் உசன் உறவுகளை ஒரே இடத்தில் சந்தித்து குதூகலிக்கும் ஒரு நல்ல சந்தர்ப்பம் . இந்த நிகழ்வில் அனைத்து உசன் பாடசாலை மாணவர்கள் மற்றும் உசன் மக்களையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம் .இந்த ஒன்று கூடல் சிறப்பாக நடைபெற கனடா உசன் ஐக்கிய மக்கள்  ஒன்றியம் தமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .

இந்த நல்ல சந்தர்ப்பத்தில் இங்கிலாந்து வாழ் உசன் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தது . உறுதியான ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் வருடாந்தம் இங்கிலாந்து உசன் மக்கள் ஒன்றுகூடி உறவுகளை வார்ப்பதுடன்  உசன் கிராம அபிவிருத்திக்கும் , உசன் பாடசாலை வளர்ச்சிக்கும் பங்களிக்க கூடிய திட்ட்ங்களை நிறைவேற்ற வேண்டுகிறோம் . 
உங்கள் முயறசிக்கும் அமைப்புக்கும் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தை பங்களிப்பு என்றும் இருக்கும் .
இந்த நிகழ்வில் அனைத்து உசன் மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம் 

ஒன்று கூடல் நடைபெறும் இடம் : 
"Deep Bar and Resturent"
7 Foots Cray High Street
Sidcup
DA145HJ

காலம் :15-அக்டோபர் 2017 , ஞாயிற்றுக்கிழமை 
நேரம் : மாலை 3 மணி 

தொடர்புகளுக்கு 
ராஜ்குமார்    :07757303473
மோகன் :07581266180
முரளி :07860457316
விக்டர் :07738911189


Thursday, October 5, 2017

பிரணவி அரங்கேற்றம் - Live Stream

வருகின்ற சனிக்கிழமை, October 7, 2017 அன்று நடைபெற இருக்கும் செல்வி பிரணவி பிரபானந்தனின் பரதநாட்டிய அரங்கேற்றத்தை உலகெங்கும் இருந்து Live Stream மூலம் பார்த்து இரசிக்க ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. Toronto, Canada நேரப்படி மாலை 5 மணி அளவில் Live Stream ஆரம்பிக்க உள்ளது. கீழுள்ள இணைப்புக்குச் செல்வதன் மூலம் இந்த நிகழ்வை நீங்கள் பார்க்கத் தவறாதீர்கள். 
 


Tuesday, October 3, 2017

உசன் அபிவிருத்திக்கான நிதி சேகரிப்பு



அன்பார்ந்த உசன் மக்களே!

ஒரு கிராமத்தின் பெருமை அதன் வளர்ச்சியில் தங்கியுள்ளது.  அந்த வளர்ச்சி கிராமத்தின் கட்டுமாணத்தில் தங்கியுள்ளது.  பாடசாலை, கோவில், கடைகள், வீதிகள்,  போக்குவரத்து போன்றவற்றோடு வாசிகசாலை அல்லது நூலகம் என்பதும் கிராம வளர்ச்சியில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது.

இதனை அடிப்படையாக வைத்து உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகத்தின் அனுசரணையோடு ஆரம்பிக்கப்பட்ட நூலக வேலைகள் 2014 ஆம் ஆண்டு தை மாதம் "பண்டிதர் சரவணமுத்து பொது நூலகம்" என்ற பெயருடன் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.  அமரர் பண்டிதர் சரவணமுத்து அவர்களின் மக்கள் சுசீலாதேவி சுகுணேஸ்வரன் அவர்கள் தனது வீட்டை நூலகத்துக்காக வழங்கியிருந்தார்.  இந்த நூலகத்தைச் சிறப்பாக நடத்துவதற்காகப் பலரும் நூல்களை அன்பளிப்பாக வழங்கியிருந்தனர். பின்னர் மின்னிணைப்பு, இணையத் தொடர்பு என்பன ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.  நூலகத்தைச் சரிவர நடத்தவும், அது அமைந்துள்ள வீட்டைப் பராமரிக்கவும் என  உசன் சனசமூக நிலையம் உருவாக்கப்பட்டு அதன் கீழ் இந்த நூலகம் பதிவு செய்யப்பட்டது.  கூடவே இரு பணியாளர்களும் அமர்த்தப்பட்டனர்.

இவற்றுக்கான செலவு மாதமொன்றுக்கு CDN $300.00 ஆக இருக்கிறது.  இதன் மிகப் பெரும் பகுதியை குறிப்பிட்ட கனடா வாழ் உசன் மக்கள் வருடந்தோறும் வழங்கி வந்தனர்.  தொடர்ந்தும் இந்தச் செலவை அவர்கள் மேல் சுமத்துவது நாகரீகமாகாது என்ற நிலையில் இந்தச் செலவுக்கான வருமானத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்தது.  அதனடிப்படையில் உசன் சனசமூக நிலைய நிர்வாகத்தினரின் ஆலோசனைக்கிணங்க மாதம் CDN $300.00 வட்டியாக வரக்கூடிய பணத்தைச் சேகரித்து நிரந்தர வைப்பிலிடுவது என முடிவு செய்யப்பட்டது.  இந்த நிலையில் தனியே நூலகச் செலவுக்காகப் பணத்தைச் சேகரிக்காமல் எதிர்கால உசன் அபிவிருத்திக்குமாகப் பணத்தைச் சேகரிப்பது சிறந்தது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. 

இதனடிப்படையில் CDN $50,000.00 ஐ இலக்காகக் கொண்டு நிதி சேகரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  பலரும் முன்வந்து தமது பங்களிப்பைச் செய்து வருகின்றனர்.  இந்த நிதி சேகரிப்பின் முதற்கட்டமாக Rs. 1,000,000.00 (அண்ணளவாக CDN $10,000.00) சேகரிக்கப்பட்டு உசன் சனசமூக நிலையத்திடம் கடந்த சனிக்கிழமை அன்று  கையளிக்கப்டுள்ளது.  இலக்கை எட்டுவதற்கான மிகுதி பணத்தை அனைத்துலக வாழ் உசன் மக்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.  கூடிய விரைவில் இந்த இலக்கை எட்டவேண்டிய தேவை உள்ளதால் உங்கள் பங்களிப்பை உடனடியாக எதிர்பார்க்கிறோம்.

இந்த நிதி சேகரிப்புக்குப் பொறுப்பாக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா சார்பில் பத்மகாந்தன் சரவணமுத்து அவர்கள் நியமிக்கப்பட்டுளார்.  அவரோடு pathman.s1@hotmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது +1-647-219-2027 என்ற செல்லிடப்பேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு உங்களின் பங்கைளிப்பை வழங்குமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு வேண்டி நிற்கிறது.  மேலதிகமாக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் தலைவர் பாஸ்கரன் சுப்பிரமணியம் அவர்களோடு president@usan.ca என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது +1-647-448-7434 என்ற செல்லிடப்பேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.  இந்த இரண்டு இலக்கங்களிலும் Viber அல்லது WhatsApp மூலமாகவும் தொடர்பு கொள்ள முடியும். 

உங்களின் பங்களிப்புக்கு பற்றுச் சீட்டு வழங்கப்படும்.  உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா Ontario மாகாணத்தில் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உலகம் வாழ் அன்பார்ந்த உசன் மக்களே தேவையறிந்து இந்த உதவியைச் செய்ய முன் வருமாறு உசன் சனசமூக நிலையம் மற்றும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா ஆகியன கேட்டுக்கொள்கின்றன.



Monday, October 2, 2017

பரதநாட்டிய அரங்கேற்றம்

பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரத கலா வித்தகர், நாட்டிய சிரோன்மணி திருமதி சியாமா தயாளன் அவர்களின் மாணவிகள்  செல்வி Kashvie Shankar மற்றும் செல்வி Ashmie Shankar ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் October மாதம் 8 ஆம் திகதி, 2017 ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமை அன்று 50 Hallcrown Place, Toronto, Ontario, M2J 1P6, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Armenian Youth Centre இல் மாலை 5:00 மணிக்கு இடம்பெற உள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு திருமதி சியாமா தயாளன் அவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறார்.


இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது.