அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, September 26, 2017

கனடாவில் செல்வி பிரணவி பிரபானந்தன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் ....

உசனைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. திருமதி வெற்றிவேலு தம்பதிகளின் பேத்தியும், கனடா வாழ் திரு. திருமதி பிரபானந்தன் இந்திரா தம்பதிகளின் ஏக புதல்வியுமான செல்வி பிரணவி பிரபானந்தன் பரதக்கலையை முறையே பயின்று அரங்கேற்றம் செய்யவுள்ளார்.

செல்வி பிரணவி கனடாவில் பிறந்து பலவருடங்களாகப் பரதக்கலையை முறைப்படி பயின்று வருகிறார். Toronto வில் பிரபலமான, முதன்மை பரதநாட்டிய நிலையமான "சதங்கை நர்த்தனாலயத்தில்"
பரதக்கலை வித்தகர் வாசு சின்னராசா அவர்களைக் குருவாக ஏற்று பரதக் கலையைப் பயின்று வந்துள்ளார்.

பரதநாட்டியக் கலையை முழுமையாகப் பயின்ற பூரிப்பில் தனது நாட்டியத் திறமையைக் குருவுக்கும், பெற்றோருக்கும், கலை இரசிகர்களுக்கும், பெரியோர்களுக்கும் வெளிப்படுத்தும் விதத்தில் தனது குருவின் ஆசியுடன் இசைக் கலைஞர்கள் புடை சூழ அரங்கேற்றம் செய்யவுள்ளார்.

October மாதம் 7 ம்  திகதி 2017 ஆம் ஆண்டு, சனிக்கிழமை, மாலை 5 மணிக்கு, Toronto வில் சிறந்த ஒலி, ஒளி அமைப்புமிக்க அரங்கமாக விளங்கும், 10268 Yonge St, Richmond Hill, ON L4C 3B7 என்ற முகவரியில் அமைத்துள்ள,  Richmond Hill Center For The Performing Arts அரங்கத்தில் இந் நிகழ்வு நடைபெறவுள்ளது. செல்வி பிரணவியின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வில் கனடா வாழ் அனைத்து உசன் மக்களையும், உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவர்களையும், பரதக்கலை இரசிகர்களையும் கலந்துகொண்டு செல்வியை ஆசீர்வதிக்குமாறு பெற்றோர்களான திரு. திருமதி பிரபானந்தன் இந்திரா தம்பதிகள் அன்புடன் அழைக்கின்றனர்.

கனடாவில் பரதக்கலை பயின்று அரங்கேற்றம் காணும் இன்னுமொரு உசன் பரத தாரகையை வாழ்த்துவதில் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பெருமை கொள்கிறது.

கனடா வாழ் உசன் மக்கள் அனைவரையும் இந்த அரகேற்ற நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.

இந்த அரங்கேற்றம் சிறப்பாக நடக்க எமது வாழ்த்துக்களும், உசன் முருகன் அருளும் கிடைக்க வேண்டுகிறோம்.


தொடர்புகளுக்கு :
பிரபா  - +16472217307
இந்திரா - +14168847307