அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, September 30, 2017

மிருசுவிலை சேர்ந்த திரு.தட்சணாமூர்த்தி குமாரசுவாமி அவர்களின் மரண அறிவித்தல்.

மிருசுவிலைப் பிறப்பிடமாகவும்,  கனடா ஒட்டாவா மற்றும் மிசிசாகாவை வதிமிடமாகவும் கொண்ட திரு. தட்சணாமூர்த்தி குமாரசுவாமி அவர்ககள் செப்ரெம்பர். 30ம் திகதி சனிக்கிழமை கனடாவில் சிவபதம் எய்தினார்.

அன்னர் காலஞ்சென்ற குமாரசுவாமி மற்றும் காலஞ்சென்ற உமையம்மாவின் அன்பு மகனும், காலஞ்சென்ற வினாயகமூர்த்தி, சதாசிவமூர்த்தி சாகச்சேரி இலங்கை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வைத்தியர் பூமகளின் அன்புக் கணவரும், சதீஸ், துஷ்யந்தி, மைதிலி, சங்கீதாவின் அன்புத் தந்தையும், பிரணவன், நாவலன், சாகரி, சாயித்திரி, கவின், கஜானனன் மற்றும் சேஷானின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரின் பூதவுடல், ஓக்டோபர் முதலாம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 9 மணி வரை, இலக்கம் 121 City View Dr Etobicoke, ON M9W 5A8 முகவரியில் அமைந்துள்ளள "லோட்டஸ் Funeral Home "ல் பார்வைக்கு வைக்கப்பட்டு, மறுநாள் திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை அதே இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதேநாள் காலை 10 மணி முதல் 12 மணிவரை தகனக் கிரியைகள் செய்யப்பட்டடு தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அன்னாரின் பிரிவால் துயருறும்  குடும்பத்தாருக்கு கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தமது ஆழ்த்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன் .
அன்னாரின் ஆத்மா உசன் முருகன் பாதங்களில் சாந்தியடைய பிரார்த்திக்கிறோம் . இந்த தகவலை உசன் மக்களிடம் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம் .

தகவல் :
சங்கீதா மகள், சங்கர் மருமகன்
சதீஸ்மகன், றோகினி மருமகள்
துஷ்யந்தி மகள்,  றவி மருமகன்
மைதிலி மகள்,  கஜன் மருமகன்


Tuesday, September 26, 2017

கனடாவில் செல்வி பிரணவி பிரபானந்தன் அவர்களின் பரதநாட்டிய அரங்கேற்றம் ....

உசனைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு. திருமதி வெற்றிவேலு தம்பதிகளின் பேத்தியும், கனடா வாழ் திரு. திருமதி பிரபானந்தன் இந்திரா தம்பதிகளின் ஏக புதல்வியுமான செல்வி பிரணவி பிரபானந்தன் பரதக்கலையை முறையே பயின்று அரங்கேற்றம் செய்யவுள்ளார்.

செல்வி பிரணவி கனடாவில் பிறந்து பலவருடங்களாகப் பரதக்கலையை முறைப்படி பயின்று வருகிறார். Toronto வில் பிரபலமான, முதன்மை பரதநாட்டிய நிலையமான "சதங்கை நர்த்தனாலயத்தில்"
பரதக்கலை வித்தகர் வாசு சின்னராசா அவர்களைக் குருவாக ஏற்று பரதக் கலையைப் பயின்று வந்துள்ளார்.

பரதநாட்டியக் கலையை முழுமையாகப் பயின்ற பூரிப்பில் தனது நாட்டியத் திறமையைக் குருவுக்கும், பெற்றோருக்கும், கலை இரசிகர்களுக்கும், பெரியோர்களுக்கும் வெளிப்படுத்தும் விதத்தில் தனது குருவின் ஆசியுடன் இசைக் கலைஞர்கள் புடை சூழ அரங்கேற்றம் செய்யவுள்ளார்.

October மாதம் 7 ம்  திகதி 2017 ஆம் ஆண்டு, சனிக்கிழமை, மாலை 5 மணிக்கு, Toronto வில் சிறந்த ஒலி, ஒளி அமைப்புமிக்க அரங்கமாக விளங்கும், 10268 Yonge St, Richmond Hill, ON L4C 3B7 என்ற முகவரியில் அமைத்துள்ள,  Richmond Hill Center For The Performing Arts அரங்கத்தில் இந் நிகழ்வு நடைபெறவுள்ளது. செல்வி பிரணவியின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்வில் கனடா வாழ் அனைத்து உசன் மக்களையும், உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவர்களையும், பரதக்கலை இரசிகர்களையும் கலந்துகொண்டு செல்வியை ஆசீர்வதிக்குமாறு பெற்றோர்களான திரு. திருமதி பிரபானந்தன் இந்திரா தம்பதிகள் அன்புடன் அழைக்கின்றனர்.

கனடாவில் பரதக்கலை பயின்று அரங்கேற்றம் காணும் இன்னுமொரு உசன் பரத தாரகையை வாழ்த்துவதில் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பெருமை கொள்கிறது.

கனடா வாழ் உசன் மக்கள் அனைவரையும் இந்த அரகேற்ற நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.

இந்த அரங்கேற்றம் சிறப்பாக நடக்க எமது வாழ்த்துக்களும், உசன் முருகன் அருளும் கிடைக்க வேண்டுகிறோம்.


தொடர்புகளுக்கு :
பிரபா  - +16472217307
இந்திரா - +14168847307