நீண்ட வருடங்களின் பின்னர் உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்துக்கு பழைய மாணவர் சங்கம் 18.12.2016 அன்று மீண்டும் உருவாக்கப்பட்டது. ஒரு பாடசாலையின் முன்னேற்றத்துக்கு பழையமாணவர் சங்கம் மிகவும் முக்கியமானது. இலங்கை கல்வி சட்டவரைவுக்கு அமைவாக சில முக்கிய விடயங்களை அந்தப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கமே முக்கியமாகக் கவனிக்க வேண்டியுள்ளது. துர்ப்பாக்கிய நிலைமை காரணமாக 1996 ம் ஆண்டுக்குப் பிறகு உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் செயலற்றுப் போனது. தொடர்ந்து பலரது முயற்சியின் விளைவாக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் அனுசரணையுடன் ஆரோக்கியம் மிக்க இளைய தலைமுறையைக் கொண்ட பழைய மாணவர் சங்க அமைப்பொன்று கடந்த 18.12.2016 அன்று உருவாக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பரந்துபட்டு வாழும் பழைய மாணவர்கள் இந்தச் சங்கத்துக்கும், பாடசாலை அபிவிருத்திக்கும் உதவுவதன் மூலம் உங்கள் பாடசாலைக்கு நன்றிக் கடனைச் செலுத்த முன்வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
புதிய இளம் தலைமுறை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் விபரம் வருமாறு:
தலைவர் - அதிபர் திரு த. சோதிலிங்கம்
செயலாளர் - திரு க. திவ்வியசீலன்
உப செயலாளர் - திருமதி ந. சோபனா
பொருளாளர் - செல்வன் அ. கஜீவன்
நிர்வாகசபை உறுப்பினர்கள் -
திரு ஐ. முருகதாஸ்
திரு கு. மதிவதனன்
திரு செ. செந்தூரன்
செல்வன் த. சத்தியன்
செல்வி ப. தண்மதி
செல்வி யோ. துஷானி
செல்வி த. பவப்பிரியா
புலம் பெயர் உசன் உறவுகள் கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியத்திடம் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பழைய மாணவர் சங்கம் உருவாக்கம் செய்யப்பட்ட அன்று எடுக்கப்படட பதிவுகள்.