உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா ஒழுங்கு செய்திருக்கும் "உசன் உறவுகள்" நிகழ்வு நாளை நடைபெற உள்ளது என்பதை நினைவூட்ட விரும்புகின்றோம்.
இந்நிகழ்வு என்றுமில்லாதவாறு புதிய பரிமாணத்துடன் இந்தமுறை நடைபெற உள்ளது. அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் உசன் கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் கனடாவின் முன்னணி தளவாத்திய இசைக்குழுவான RA Rhythm இசைக் குழுவினரின் "இசை மழை" நிகழ்ச்சியும் உங்கள் அனைவரினதும் உள்ளங்களைக் கொள்ளைகொள்ள இருக்கின்றது. உசன் பாடகர்களும் "இசை மழை" நிகழ்ச்சியில் பாடி மகிழ்விக்க இருக்கிறார்கள்.
3300 McNicoll Avenue, Scarborough, ON M1V 5J6, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Baba Banquet Hall இல் மாலை 5 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமாகும்.
நாளை Toronto வின் காலநிலை சாதகமாவே உள்ளது. நாளை பகல்பொழுது 7 degree Celsius ஆகவும் இரவுநேர ஆகக் குறைந்த வெப்பநிலை 3 degree Celsiusஆகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பனிமழையோ அல்லது மழையோ இருக்காது என்றும் காற்று மிதமாக இருக்கும் என்றும் எதிர்வுகூறப்படுள்ளது.
தை மாதத்தை தமிழர் மரபுரிமை நாளாக கனடிய மத்திய அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. இதனைப் பிரதிபலிக்கும் வகையில் ஆண்கள் பட்டு வேட்டி, பட்டு நஷனல், பட்டு சால்வை அணிந்து வந்தால் சிறப்பாக இருக்கும்.
ஊரோடு உறவாடி கொண்டாடி மகிழ உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறது.