அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, January 29, 2017

உசன் பாடசாலை விளையாட்டு போட்டியை சிறப்பாக நடாத்தி வீர /வீராங்கனைகளை ஊக்குவிக்க .......

உசன் பாடசாலை விளையாட்டு போட்டியை சிறப்பாக நடாத்தி வீர /வீராங்கனைகளை ஊக்குவிக்க
கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் ,உசன் பழைய மாணவர் சங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளது
உங்கள் குடும்ப அங்கத்தகவர்கள் நினைவாக  கேடயங்கள் மற்றும் பரிசு அன்பளிப்புகள் வழங்க விரும்பின்
தயவு செய்து உங்கள் விபரங்களை எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .
தொடர்புகளுக்கு
கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -பாஸ்கரன் -0016474487434
உசன் பாடசாலை பழையமாணவர்  சங்கம் -கஜீவன் -0094773090783
                                                                                          சீலன் -0094779396044


திரு.தில்லை .சரவணமுத்து அவர்களின் மரண அறிவித்தல்


உசனைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு தில்லையம்பலம் சரவணமுத்து (தில்லை சரவணமுத்து ) அவர்கள் உசனில் காலமானார்.

அன்னார் திரு திருமதி. தில்லையம்பலம் அவர்களின் மகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்பு கணவனும்,

யோகராசா (முரசுமோட்டை ), சிவசாரசா, சிவநிதி முருகேசு (உசன்), செல்வராசா (றட்ணா அண்ணா -லண்டன் ), ஜெயராசா (ரஞ்சன் மாவீரர் ), காலம் சென்ற கருணாநிதி (இலங்கை இராணுவ தாக்குதலில் உசனில் காலமானவர்), காலம்சென்ற ஜெயராசா, சிறிஸ்கந்தராஜா (மாவீரர், 2ம் லெப், ஜெரால்ட் ), சுவேந்திரராஜா (சுரேன்) ஆகியோரின் அன்பு தந்தையுமாவார்.

அன்னாரின் ஈமைக்கிரிககைகள் 31.01.2017 திங்கள்கிழமை உசனில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, உசன் ஈச்சங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.  இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

தொடர்புகளுக்கு:
செல்வராசா - றட்ணா(மகன், London ): +442083089670
நிதி (மகள், இலங்கை): +94774535346
தகவல்: மாலினி (மருமகள், லண்டன்) : +447938189117
மேலதிக தகவல்: அஜந் - கனடா: +14164276000

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்திக்கிறது.



Friday, January 27, 2017

உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் உருவாகியது புதிய தலைமுறை பழைய மாணவர் சங்கம்
அனைத்துலக பழைய மாணவர்களின் உதவி நாடப்படுகிறது.


நீண்ட வருடங்களின் பின்னர்  உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்துக்கு பழைய மாணவர் சங்கம் 18.12.2016 அன்று மீண்டும் உருவாக்கப்பட்டது. ஒரு பாடசாலையின் முன்னேற்றத்துக்கு பழையமாணவர் சங்கம் மிகவும் முக்கியமானது.  இலங்கை கல்வி சட்டவரைவுக்கு அமைவாக சில முக்கிய விடயங்களை அந்தப் பாடசாலையின் பழைய மாணவர் சங்கமே முக்கியமாகக் கவனிக்க வேண்டியுள்ளது.  துர்ப்பாக்கிய நிலைமை காரணமாக 1996 ம் ஆண்டுக்குப் பிறகு உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் செயலற்றுப் போனது.  தொடர்ந்து பலரது முயற்சியின் விளைவாக  உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் அனுசரணையுடன் ஆரோக்கியம் மிக்க இளைய தலைமுறையைக் கொண்ட பழைய மாணவர் சங்க அமைப்பொன்று கடந்த 18.12.2016 அன்று  உருவாக்கப்பட்டுள்ளது.  உலகெங்கும் பரந்துபட்டு வாழும் பழைய மாணவர்கள் இந்தச் சங்கத்துக்கும், பாடசாலை அபிவிருத்திக்கும் உதவுவதன் மூலம் உங்கள் பாடசாலைக்கு நன்றிக் கடனைச் செலுத்த முன்வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புதிய இளம் தலைமுறை பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் விபரம் வருமாறு:
தலைவர் - அதிபர் திரு த. சோதிலிங்கம்
செயலாளர் - திரு க. திவ்வியசீலன்
உப செயலாளர் - திருமதி ந. சோபனா
பொருளாளர் - செல்வன் அ. கஜீவன்

நிர்வாகசபை உறுப்பினர்கள் -
திரு ஐ. முருகதாஸ்
திரு கு. மதிவதனன்
திரு செ. செந்தூரன்
செல்வன் த. சத்தியன்
செல்வி ப. தண்மதி
செல்வி யோ. துஷானி
செல்வி த. பவப்பிரியா

புலம் பெயர் உசன் உறவுகள் கனடா ஐக்கிய மக்கள் ஒன்றியத்திடம் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள  முடியும்.

பழைய மாணவர் சங்கம் உருவாக்கம் செய்யப்பட்ட அன்று எடுக்கப்படட பதிவுகள்.













Thursday, January 26, 2017

உசனில் இருந்து உருவாகினார் இளம் சட்ட வழக்கறிஞர் -பாராட்டுங்கள்

உசனில் வந்து குடியேறி, உசன் மக்களோடு ஒன்றாய் கலந்து வாழ்ந்த திரு திருமதி சிவராசா செல்வராணி தம்பதிகளின் புதல்வி செல்வி ரம்யா தனது கனவுக் கல்வியான சட்டத் துறைக் கல்வியை  பல்கலைக்கழகதில்
வெற்றிகரமாக நிறைவு செய்து சட்ட வழக்கறிஞர் (Attorney At Law) ஆக வெளியேறியுள்ளார்.
உசனில் இருந்து அடுத்த சட்டதரணி  உருவானதால் அனைத்துலக உசன் மக்கள் சார்பில்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பெருமகிழ்வு கொள்கிறது.  வாழ்க்கையை வெற்றிகொள்ள குடும்பநிலை முக்கியமில்லை, முயற்சி தான் வெற்றி என நிரூபித்துக் காட்டிய எமது பாடசாலை மாணவியை பெருமிதமாக வாழ்த்துவோம்.  செல்வி ரம்யாவுக்கும் அவர் பெற்றோர்க்கும் எமது வாழ்த்துக்கள் ....





உசன் இராமநாதன் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு


உசன் இராமநாதன் மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 31/01/2017 செவாய்க்கிழமை அன்று நடைபெற உள்ளதாக பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் அறிவித்துள்ளது.  பிற்பகல் 1:30 மணிக்கு பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இந்த நிகழ்வு இடம்பெறும்.

இம்முறை இந்த இந்த நிகழ்வு பழைய மாணவர் சங்கத்தினூடாக ஒழுங்கமைக்கப்பட்டு வருவதாக அச் சங்கம் தெரிவித்துள்ளது.

வித்தியாலய முதல்வர் த. சோதிலிங்கம் அவர்களின் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வுக்கு தென்மராட்சிக் கல்வி வலைய திட்டமிடல் பிரதிக் கல்விப்பணிப்பாளர் சிவஞானம் மகேஸ்வரன் அவர்கள் முதன்மை விருந்தினாராகக் கலந்து சிறப்பிக்க உள்ளார்.   உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு, மக்கள் வங்கி ஓய்வுநிலை முகாமையாளர் கந்தையா பாலச்சந்திரன் சிறப்பு விருந்தினராகவும், முன்னைநாள் ஆசிரியர் திருமதி புஸ்பராணி நவரத்தினம் அவர்கள் கெளரவ விருந்தினராகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு உசன் இராமநாதன் மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அனைவரையம் அன்புடன் அழைக்கிறது.

இந்த மெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு சிறப்பாக அமைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை,  இந்த நிகழ்வை முன்னின்று நடாத்தும் பழைய மாணவர் சங்கத்துக்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.


Friday, January 20, 2017

"உசன் உறவுகள்"


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா ஒழுங்கு செய்திருக்கும் "உசன் உறவுகள்" நிகழ்வு நாளை நடைபெற உள்ளது என்பதை நினைவூட்ட விரும்புகின்றோம்.

இந்நிகழ்வு என்றுமில்லாதவாறு புதிய பரிமாணத்துடன் இந்தமுறை நடைபெற உள்ளது.  அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் உசன் கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் கனடாவின் முன்னணி தளவாத்திய இசைக்குழுவான RA Rhythm இசைக் குழுவினரின் "இசை மழை" நிகழ்ச்சியும் உங்கள் அனைவரினதும் உள்ளங்களைக் கொள்ளைகொள்ள இருக்கின்றது.  உசன் பாடகர்களும் "இசை மழை" நிகழ்ச்சியில் பாடி மகிழ்விக்க இருக்கிறார்கள்.

3300 McNicoll Avenue, Scarborough, ON M1V 5J6, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Baba Banquet Hall இல் மாலை 5 மணிக்கு இந்நிகழ்வு ஆரம்பமாகும்.

நாளை Toronto வின் காலநிலை சாதகமாவே உள்ளது.  நாளை பகல்பொழுது 7 degree Celsius ஆகவும் இரவுநேர ஆகக் குறைந்த வெப்பநிலை 3 degree Celsiusஆகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.  பனிமழையோ அல்லது மழையோ இருக்காது என்றும் காற்று மிதமாக இருக்கும் என்றும் எதிர்வுகூறப்படுள்ளது.

தை மாதத்தை தமிழர் மரபுரிமை நாளாக கனடிய மத்திய அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.  இதனைப் பிரதிபலிக்கும் வகையில் ஆண்கள் பட்டு வேட்டி, பட்டு நஷனல், பட்டு சால்வை அணிந்து வந்தால் சிறப்பாக இருக்கும்.

ஊரோடு உறவாடி கொண்டாடி மகிழ உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறது.


Monday, January 9, 2017

திரு கார்த்திகேசு வேலாயுதபிள்ளை


உசனைச் சேர்ந்த இளையதம்பி அவைகளின் சகோதரன், முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் திரு மணியம் (சுப்பிரமணியம்) அவர்களின் மகள் சூட்டியின் மாமனார் கார்த்திகேசு வேலாயுதபிள்ளை அவர்கள் 05-01-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவர் யாழ். சண்டிலிப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், Toronto கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குட்டித்தம்பி இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

தேவராஜா(பிரித்தானியா), சந்திரகுமார்(பிரான்ஸ்), பிரேமகுமார்(கனடா), சசிகலா(லண்டன்), உதயகுமார்(கனடா), நந்தகுமார்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, முத்தம்மா, விசாலாட்சி, கந்தையா, பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தி, சிவானி, சூட்டி, ஸ்ரீராமன், கமலா, ஈஸ்வரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மகேஸ்வரி (அவுஸ்திரேலியா), பரராஜசிங்கம் (இலங்கை), ஜெயராஜசிங்கம் (பிரான்ஸ்), தேவராஜசிங்கம் (இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மினி செந்தூரன், கார்த்திகா ஆரூரன், தனுஷா துஷியந்தன், தனுஷன், பிரகாஸ், சேகரன், மயூரா, தர்சிகா, லக்ஸ்மன், விதுரன், ஜனனி, ஆகாஷ், அருண், டனியா, சேயோன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

கிசான் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 09/01/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

பார்வைக்கு
திகதி: செவ்வாய்க்கிழமை 10/01/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

கிரியை
திகதி: புதன்கிழமை 11/01/2017, 08:00 மு.ப — 10:00 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada

தகனம்
திகதி: புதன்கிழமை 11/01/2017, 10:45 மு.ப — 11:45 மு.ப
முகவரி:   St. John's Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada

தொடர்புகளுக்கு
தேவராஜா — பிரித்தானியா
தொலைபேசி: +441243261129

ஜெயராஜசிங்கம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33611993724

சந்திரகுமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33619486132

பிரேமகுமார் — கனடா
தொலைபேசி: +19052945360
செல்லிடப்பேசி: +16472046477

சசிகலா — பிரித்தானியா
தொலைபேசி: +442085505085

உதயகுமார் — கனடா
தொலைபேசி: +14506895018

நந்தகுமார் — டென்மார்க்
தொலைபேசி: +4575921513

சிவபாக்கியம்(மனைவி) — கனடா
தொலைபேசி: +14164396773

(இந்த அறிவித்தல் www.kallarai.com என்ற இணையத் தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்டு சிறிய மாற்றத்துடன் பிரசுரிக்கப்படுகிறது.)



Sunday, January 8, 2017

திரு கந்தையா தங்கராசா


யாழ். சாவகச்சேரி சங்கத்தானையைப் பிறப்பிடமாகவும், மிருசுவில், உசன், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தங்கராசா அவர்கள் 07-01-2017 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், சண்முகம்(மாணிக்கம்), பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கௌரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுதர்னியா, கௌசல்யா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற இராசதுரை(பொலிஸ் உத்தியோகத்தர்), சிவசம்பு(குமாரசாமி- லிகிதர், சாவகச்சேரி இந்துக்கல்லூரி), இராமநாதன்(டென்மார்க்) ஆகியோரின் சகோதரரும்,

சுதன் குணநாயகம், சுதன் பொன்னப்பா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான புஷ்பராஜா(உசன்), ராஜநாயகம், மற்றும் புவனேஸ்வரி(அவுஸ்திரேலியா), புஸ்பராணி(கனடா), தயானந்தசோதி(கனடா), சிவதாஸ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் மைத்துனரும்,

ஷியாரா, ஜசான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/01/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre,8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 09/01/2017, 01:00 பி.ப — 03:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre,8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
திகதி: திங்கட்கிழமை 09/01/2017, 03:00 பி.ப — 04:00 பி.ப
முகவரி: Chapel Ridge Funeral Home & Cremation Centre,8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
திகதி: திங்கட்கிழமை 09/01/2017, 05:00 பி.ப — 06:00 பி.ப
முகவரி: Highland Hills Crematorium,12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சுதன் சுதர்னியா — கனடா
தொலைபேசி: +14164316459
செல்லிடப்பேசி: +16474024639
சுதன் கௌசல்யா — கனடா
தொலைபேசி: +16474473323
தயானந்தசோதி — கனடா
செல்லிடப்பேசி: +14168858494
சிவசம்பு(குமாரசாமி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94772845596

(இந்த அறிவித்தல் www.kallarai.com என்ற இணையத் தளத்திலிருந்து பிரதி செய்யப்பட்டு பிரசுரிக்கப்படுகிறது.)


Wednesday, January 4, 2017

மரண அறிவித்தல்

யாழ். சரசாலையைப் பிறப்பிடமாகவும், உசன், லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி கணேஸ் அவர்கள் 03-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் நாகமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

 காலஞ்சென்றவர்களான கனகசபை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணேஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

தாமரா, அனுரா, உத்தரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற குமாரசாமி, புவனேஸ்வரி, ஸ்ரீனிவாசன், காலஞ்சென்ற ஜெயலட்சுமி, ராஜமோகன், மகேந்திரன், காலஞ்சென்ற சிவராஜா, பாக்கியலட்சுமி, ஜெகதீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்ரீதரன், ராகினி, அனுஷலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

விமுக்தி, சாருத்தி, மிதுரா, ராகுல், ஷாகரி, அபினன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: திரு.ஸ்ரீகாந்தன் (ஆசிரியர்) கனடா

தொடர்புகளுக்கு
சிறிதரன் — பிரித்தானியா
தொலைபேசி:+442036382209
செல்லிடப்பேசி:+447723545256
அனுரா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447572506469
உத்தரா — பிரித்தானியா
செல்லிடப்பேசி:+447950913707