உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வருடாந்தம் வழங்கும் உள்ளரங்க நிகழ்வான "உசன் உறவுகள்" நிகழ்வு என்றுமில்லாதவாறு புதிய பரிமாணத்துடன் இந்தமுறை நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம். அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் எம்மவர்களின் நிகழ்ச்சிகளுடன் கனடாவின் முன்னணி தளவாத்திய இசைக்குழுவான RA Rhythm இசைக் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் உங்கள் அனைவரினதும் உள்ளங்களைக் கொள்ளைகொள்ள இருக்கின்றது.
எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு January மாதம் 21 ஆம் திகதி சனிக்கிழமை Baba Banquet Hall இல் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், கனடா வாழ் உசன் இளைய சமுதாயத்தினரின் இசைத் திறமை வெளிவர உள்ளது. உசனை சேர்ந்த கனடா வாழ் பாடகர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக அவர்களுக்கு மேடையில் இசை வாத்தியங்களுடன் பாடும் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. உசன் பாடகர்களுடன் கனேடிய முன்னணிப் பாடகர்களும் இணைந்து இசை நிகழ்ச்சி மண்டபத்தை அமர்களப்படுத்த உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இசைக்குழுவினரோடு சேர்ந்து பாட ஆர்வமுள்ளோர் தலைவர் பாஸ்கரனோடு தொடர்பு கொள்ளவும். முதலிலே குரல் வளம் பரீட்சிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவோர் இசைக் குழுவினரோடு சேர்ந்து பயிற்சி பெறுவார்கள். வழங்கப்படும் அத்தனை பயிற்சியிலும் கலந்துகொண்டு திறமையாகப் பாடுவோருக்கு "உசன் உறவுகள்" நிகழ்ச்சியில் பாடச் சந்தர்ப்பம் வழங்கப்படும். உங்கள் திறமையை வெளிப்படுத்த இந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆர்வமுள்ளோர் சனிக்கிழமை, December 10 ஆம் திகதிக்கு முன்பு தொடர்புகொள்ளவும் அல்லது president@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரியில் உங்கள் விருப்பதைத் தெரிவிக்கலாம்.
இசை நிகழ்ச்சியில் அதிக பாடல்களைச் சேர்த்துக்கொள்ளும் வகையில் "உசன் உறவுகள்" நிகழ்வுக்கு மாலை 5 மணிக்கே வருகை தருமாறு அன்போடு வேண்டுகிறோம்.
இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்க விரும்புவோர் பாஸ்கரனோடு தொடர்பு கொள்ளவும்.
நன்றி.
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா
"USAN URAVUKAL"
The upcoming "USAN URAVUKAL", an annual event, proudly presented by United People Association of Usan in Canada will be an extravaganza event. It will be entirely in a different format. You will be entertained to the ultimate. This event will be at Baba Banquet Hall on Saturday, January 21, 2017.
With the performances of Usan people you will be thrilled to listen to the live music of "RA Rhythm", a leading Canadian music group. Along with Usan singers, Canadian artists will be on the stage.
Anyone interested in singing in this event with live music, specially the younger generation, please contact to Baskaran, President of United People Association of Usan in Canada. After the voice test, selected candidates will practice with the music group. All those who participate in all the practice sessions and perform very well will be on the stage at "Usan Uravukal". Please express your desire before the end of Saturday, December 10, 2016 via email at president@usan.ca
In order to accommodate as many songs as possible, please be present at the hall at 5 p.m. on January 21, 2017.
Well wishers who would like to sponsor this event, please contact Baskaran.
Thank you.
United People Association of Usan in Canada.