அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, December 4, 2016

உசன் பழைய மாணவர்களின்
"வாழும் போதே மதிப்பளிப்போம்"
சிறப்பு நிகழ்வு


1995 ஆம் ஆண்டு உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்விகற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து பாடசாலைக்கு வழங்கும் சேவையைப் பின்பற்றி , 1995 ஆம் ஆண்டு உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் G. C. E. O/L  பரீடசைக்குத் தோற்றிய பழையமாணவர்கள் அனைத்துலகிலும் இருந்து இணைந்து உசன் பாடசாலையில்  ஒரு முன்மாதிரி நிகழ்வை நடத்தவுள்ளனர்.  

உசன் பாடசாலையில் கல்வி கற்பித்து ஓய்வுபெற்ற, இடமாற்றம் பெற்ற மற்றும் இயலாநிலையில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும், பல இடங்களிலும் சிதறி வாழும் வகுப்பு மாணவர்களையும் மீண்டும் உசன் பாடசாலைக்கு வரவழைத்து, ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து, அவர்களுக்கு வாழும் போதே மதிப்பளிக்கவுள்ளனர்.  தொடர்ந்து மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மதிய  உணவு பரிமாறவுள்ளனர்.  அதைவிட உலகெங்கும் பரந்து வாழும் 1995 ஆம் ஆண்டு G. C. E. O/L  பரீடசைக்கு தோற்றிய பழையமாணவர்கள் இணைந்து பாடசாலைக்கு ஒலிபெருக்கி சாதனங்களை அன்பளிப்பாக வழங்கவுள்ளனர்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பழையமாணவர்களால் நடத்தப்படவிருக்கும் இந்த முன்மாதிரி சிறப்பு நிகழ்வு  பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெறும். பிரதம விருந்தினராக 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாடசாலை அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற அதிபர் ஐ. வரதராஜா அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்.  

நாட்டின் பலபகுதிகளிலும் வாழ்ந்துவரும் ஆசிரியர்கள் மீண்டும் உசனில் கூடவுள்ள இந்த நாளில் அனைத்துப்  பழைய மாணவர்களையும், பெற்றோர், நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்து இந்த நிகழ்வைச் சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.  நீண்ட காலத்தின் பின்  முன்னாள் ஆசிரியர்களைச் சந்தித்து அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் பழைய நினைவுகளை இரைமீட்கும் ஒரு நல்ல சந்தர்ப்பமாக 
இருக்கப் போகும்  இந்த நிகழ்வை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

நன்றி 

1995 ஆம் ஆண்டு G. C. E. O/L  மாணவர்கள்.