Saturday, December 31, 2016
Thursday, December 22, 2016
"நினைவுகளைக் கையளித்தல்"
அமரர் "சிற்பி" அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுப் பகிர்வு நிகழ்வு
உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் அதிபர் சி. சிவசரவணபவன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுப் பகிர்வு சனிக்கிழமை, 24/12/2016 அன்று நடைபெறவுள்ளது. நீராவியாடியில் அமைந்திருக்கும் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் பிற்பகல் 3 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமாகும்.
"நுணுக்கரிய நுண்ணுணர்வே" மற்றும் "கலைச் செல்விக் காலம்" ஆகிய இரு நூல்கள் இந்த நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட இருக்கின்றன.
அன்னாரின் குடும்பத்தினர் உங்கள் அனைவரதும் வருகையை அன்புடன் எதிர்பார்க்கின்றனர்.

President
|
|
Thursday, December 15, 2016
வாழும்போதே மதிப்பளித்தல் - உசனில் சிறப்பு நிகழ்வு
1995 ஆம் ஆண்டு உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் G. C. E. O/L பரீடசைக்குத் தோற்றிய பழையமாணவர்கள் அனைத்துலகிலும் இருந்து இணைந்து உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் ஒரு முன்மாதிரி நிகழ்வை நடத்தவுள்ளனர்.
உசன் பாடசாலையில் கல்வி கற்பித்து ஓய்வுபெற்ற, இடமாற்றம் பெற்ற மற்றும் இயலாநிலையில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும், பல இடங்களிலும் சிதறி வாழும் வகுப்பு மாணவர்களையும் மீண்டும் உசன் பாடசாலைக்கு வரவழைத்து, ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து, அவர்களுக்கு வாழும் போதே மதிப்பளிக்கவுள்ளனர். தொடர்ந்து மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மதிய உணவு பரிமாறவுள்ளனர். அதைவிட உலகெங்கும் பரந்து வாழும் 1995 ஆம் ஆண்டு G. C. E. O/L பரீடசைக்கு தோற்றிய பழையமாணவர்கள் இணைந்து பாடசாலைக்கு ஒலிபெருக்கி சாதனங்களை அன்பளிப்பாக வழங்கவுள்ளனர்.
அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறார்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்.
December 18 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. இதனை ஒழுங்கு செய்த பழைய மாணவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. இந்தப் பழைய மாணவர்களை ஆளாக்கிய ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கு நன்றியை நவில்கின்றது.
தலைவர்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா

Saturday, December 10, 2016
திரு கந்தையா நல்லையா
(ஓய்வுபெற்ற திருமணப் பதிவாளர்)
(ஓய்வுபெற்ற திருமணப் பதிவாளர்)
யாழ்., மிருசுவில், உசனைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, இயக்கச்சி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நல்லையா அவர்கள் 09-12-2016 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
பாஸ்கரன், மனோகரன், பவானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிவாஜினி, சியாமளா, ரூபன்(Y.K நாதன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வாசவன், விபீஷன், வைஷ்னா, மனஷா, மதுஷா, மதுஷன், ஹர்ஷா, வர்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான சின்னம்மா, பொன்னையா, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், வள்ளிப்பிள்ளை, பொன்னுத்துரை, தங்கராசா, நேசமணி செல்வராணி, மற்றும் சின்னையா(ஓவசியர்- இலங்கை), வள்ளிநாயகி, மகாலிங்கம், தெய்வநாயகி(அவுஸ்திரேலியா), பொன்மணி, கந்தசாமி(அவுஸ்திரேலியா), பாக்கியலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவயோகநாதன்(கனடா), சிவானந்தன், சிவநேசன்(அமெரிக்கா) ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,
அருட்சோதிலிங்கம்(கனடா), ஞானசுந்தரராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
ரூபன்(Y.K நாதன்)
பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 10/12/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Highland Funeral Home - Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/12/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Highland Funeral Home - Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 12/12/2016, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Highland Funeral Home - Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 12/12/2016, 11:30 மு.ப
முகவரி: Forest Lawn Mausoleum & Cremation Centre, 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
தொடர்புகளுக்கு
புஷ்பராணி — கனடா
செல்லிடப்பேசி: +14163320671
பாஸ்கரன் — கனடா
தொலைபேசி: +19054282736
மனோகரன் — கனடா
செல்லிடப்பேசி: +14163028696
பவானி ரூபன் — கனடா
செல்லிடப்பேசி: +14163471250
President
|
|
Thursday, December 8, 2016
கவிதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா
கவிஞர் சூரியநிலாவின் கவிதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா ஞாயிறுக் கிழமை, 11.12.2016 அன்று இடம்பெறவுள்ளது. "யாழ் கவி" மற்றும் "அழகு" ஆகிய இரு கவிதைத் தொகுதிகளுமே வெளியிட்டு வைக்கப்படவுள்ளன. கவிஞர் சூரியநிலாவின் இயற்பெயர் ஆ. ஜென்சன் ரொனால்ட். இவர் ஒரு பட்டதாரி ஆவார்.
இந்த நிகழ்வு பிற்பகல் 2 மணிக்கு பருத்தித்துறை வீதி, கொடிகாமத்தில் அமைந்திருக்கும் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெறும்.
பிரதம விருந்தினராக ஓய்வுநிலை அதிபர், யா/டிறிபேக் கல்லூரி, க. அருந்தவபாலன் அவர்கள் கந்துகொள்கிறார். இந்த நிகழ்வுக்கு யா/ உசன் இராமநாதன் மகா வித்தியாலய அதிபர் த. சோதிலிங்கம் அவர்கள் தலைமை தாங்குகிறார். சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர் திருமதி மு. கோடீஸ்வரன் மற்றும் கைத்தடி சித்த ஆயுள்வேத வைத்தியசாலை வைத்தியர் ஐ. ஜெபநாமகணேசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பிக்கின்றனர்.
உசன் கந்தசாமி கோவில் பிரதம குரு பிரம்மஸ்ரீ இ. கேதீஸ்வரக் குருக்கள் ஆசியுரை வழங்குவார்.
இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு நூல் ஆசிரியர், கவிஞர் சூரியநிலா அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்.
நிகழ்ச்சி நிரல் கீழே உள்ள இணைப்பில் உள்ளது.

Tuesday, December 6, 2016
புதிய பரிமாணத்தில் "உசன் உறவுகள்"
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வருடாந்தம் வழங்கும் உள்ளரங்க நிகழ்வான "உசன் உறவுகள்" நிகழ்வு என்றுமில்லாதவாறு புதிய பரிமாணத்துடன் இந்தமுறை நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம். அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் எம்மவர்களின் நிகழ்ச்சிகளுடன் கனடாவின் முன்னணி தளவாத்திய இசைக்குழுவான RA Rhythm இசைக் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் உங்கள் அனைவரினதும் உள்ளங்களைக் கொள்ளைகொள்ள இருக்கின்றது.
எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு January மாதம் 21 ஆம் திகதி சனிக்கிழமை Baba Banquet Hall இல் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், கனடா வாழ் உசன் இளைய சமுதாயத்தினரின் இசைத் திறமை வெளிவர உள்ளது. உசனை சேர்ந்த கனடா வாழ் பாடகர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக அவர்களுக்கு மேடையில் இசை வாத்தியங்களுடன் பாடும் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. உசன் பாடகர்களுடன் கனேடிய முன்னணிப் பாடகர்களும் இணைந்து இசை நிகழ்ச்சி மண்டபத்தை அமர்களப்படுத்த உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இசைக்குழுவினரோடு சேர்ந்து பாட ஆர்வமுள்ளோர் தலைவர் பாஸ்கரனோடு தொடர்பு கொள்ளவும். முதலிலே குரல் வளம் பரீட்சிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவோர் இசைக் குழுவினரோடு சேர்ந்து பயிற்சி பெறுவார்கள். வழங்கப்படும் அத்தனை பயிற்சியிலும் கலந்துகொண்டு திறமையாகப் பாடுவோருக்கு "உசன் உறவுகள்" நிகழ்ச்சியில் பாடச் சந்தர்ப்பம் வழங்கப்படும். உங்கள் திறமையை வெளிப்படுத்த இந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆர்வமுள்ளோர் சனிக்கிழமை, December 10 ஆம் திகதிக்கு முன்பு தொடர்புகொள்ளவும் அல்லது president@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரியில் உங்கள் விருப்பதைத் தெரிவிக்கலாம்.
இசை நிகழ்ச்சியில் அதிக பாடல்களைச் சேர்த்துக்கொள்ளும் வகையில் "உசன் உறவுகள்" நிகழ்வுக்கு மாலை 5 மணிக்கே வருகை தருமாறு அன்போடு வேண்டுகிறோம்.
இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்க விரும்புவோர் பாஸ்கரனோடு தொடர்பு கொள்ளவும்.
நன்றி.
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா
"USAN URAVUKAL"
The upcoming "USAN URAVUKAL", an annual event, proudly presented by United People Association of Usan in Canada will be an extravaganza event. It will be entirely in a different format. You will be entertained to the ultimate. This event will be at Baba Banquet Hall on Saturday, January 21, 2017.
With the performances of Usan people you will be thrilled to listen to the live music of "RA Rhythm", a leading Canadian music group. Along with Usan singers, Canadian artists will be on the stage.
Anyone interested in singing in this event with live music, specially the younger generation, please contact to Baskaran, President of United People Association of Usan in Canada. After the voice test, selected candidates will practice with the music group. All those who participate in all the practice sessions and perform very well will be on the stage at "Usan Uravukal". Please express your desire before the end of Saturday, December 10, 2016 via email at president@usan.ca
In order to accommodate as many songs as possible, please be present at the hall at 5 p.m. on January 21, 2017.
Well wishers who would like to sponsor this event, please contact Baskaran.
Thank you.
United People Association of Usan in Canada.
President
|
|
Sunday, December 4, 2016
உசன் பழைய மாணவர்களின்
"வாழும் போதே மதிப்பளிப்போம்"
சிறப்பு நிகழ்வு
"வாழும் போதே மதிப்பளிப்போம்"
சிறப்பு நிகழ்வு
1995 ஆம் ஆண்டு உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்விகற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து பாடசாலைக்கு வழங்கும் சேவையைப் பின்பற்றி , 1995 ஆம் ஆண்டு உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் G. C. E. O/L பரீடசைக்குத் தோற்றிய பழையமாணவர்கள் அனைத்துலகிலும் இருந்து இணைந்து உசன் பாடசாலையில் ஒரு முன்மாதிரி நிகழ்வை நடத்தவுள்ளனர்.
உசன் பாடசாலையில் கல்வி கற்பித்து ஓய்வுபெற்ற, இடமாற்றம் பெற்ற மற்றும் இயலாநிலையில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும், பல இடங்களிலும் சிதறி வாழும் வகுப்பு மாணவர்களையும் மீண்டும் உசன் பாடசாலைக்கு வரவழைத்து, ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து, அவர்களுக்கு வாழும் போதே மதிப்பளிக்கவுள்ளனர். தொடர்ந்து மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மதிய உணவு பரிமாறவுள்ளனர். அதைவிட உலகெங்கும் பரந்து வாழும் 1995 ஆம் ஆண்டு G. C. E. O/L பரீடசைக்கு தோற்றிய பழையமாணவர்கள் இணைந்து பாடசாலைக்கு ஒலிபெருக்கி சாதனங்களை அன்பளிப்பாக வழங்கவுள்ளனர்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பழையமாணவர்களால் நடத்தப்படவிருக்கும் இந்த முன்மாதிரி சிறப்பு நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெறும். பிரதம விருந்தினராக 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாடசாலை அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற அதிபர் ஐ. வரதராஜா அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்.
நாட்டின் பலபகுதிகளிலும் வாழ்ந்துவரும் ஆசிரியர்கள் மீண்டும் உசனில் கூடவுள்ள இந்த நாளில் அனைத்துப் பழைய மாணவர்களையும், பெற்றோர், நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்து இந்த நிகழ்வைச் சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். நீண்ட காலத்தின் பின் முன்னாள் ஆசிரியர்களைச் சந்தித்து அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் பழைய நினைவுகளை இரைமீட்கும் ஒரு நல்ல சந்தர்ப்பமாக
இருக்கப் போகும் இந்த நிகழ்வை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.
நன்றி
1995 ஆம் ஆண்டு G. C. E. O/L மாணவர்கள்.
Anonymous
|
|
Subscribe to:
Posts (Atom)