அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, November 22, 2016

உசன் உறவுகள் 2016

அன்பார்ந்த உசன் மக்களே!

நீங்கள் உங்கள் உறவுகளையும், நட்புக்களையும் சந்தித்து மகிழும் நேரம் அண்மித்துக்கொண்டிருக்கிறது. உழைத்துக் களைத்த உள்ளங்களுக்கு உற்சாகம் கொடுக்கும் ஓர் இரவு நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆடல், பாடல், அறுசுவை உணவோடு சிரித்திருக்கும் நேரம் அதிக தூரத்தில் இல்லை.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வருடந்தோறும் உசன் மக்களை ஒன்றுகூட்டி நடாத்தும் "உசன் உறவுகள்" நிகழ்வு 2017 ஆம் ஆண்டு January மாதம் 21 ஆம் திகதி, சனிக்கிழமை நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு அறியத் தருகிறோம். Middlefield Road மற்றும் McNicoll Avenue சந்திக்கு அருகாமையில் 3300 McNicoll Avenue எனும் முகவரியில் அமைந்திருக்கும் Baba Banquet Hall இல் இந்நிகழ்வு இடம்பெறும்.

நீங்கள் இதுவரை கண்டிராத வகையில் புதிதாக வடிவமைக்கப்பட்டு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. அனைத்து வயதினரும் மகிழ்ந்திருக்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளன. இந்த நிகழ்வில் உங்கள் திறமைகளையும் வெளிப்படுத்த ஒன்றியத்தின் செயலாளரோடு தொடர்பு கொள்ளுங்கள்.

பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதால் சரியாக மாலை 6 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்.

எம் மத்தியில் இருக்கும் தொழில் அதிபர்களே, உங்கள் தொழிலை எம் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் அனுசரணை இந்த நிகழ்வை மேலும் சிறப்பாக்கும். உங்கள் பங்களிப்பை வழங்க ஒன்றியத்தின் செயலாளரோடு தொடர்பு கொள்ளுங்கள்.

வெளிநாடு வாழ் உசன் மக்களே கனடாவின் குளிரை அனுபவிப்பதோடு, உங்கள் உறவுகள் அனைவரையும் ஒன்றுசேரச் சந்திப்பதற்கு இந்த நிகழ்வைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மறந்துவிடாமல் January 21ஆம் திகதியைக் குறித்துவைத்து, தவறாமல் "உசன் உறவுகள் 2016" நிகழ்வில் கலந்து மகிழுமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறது.