அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, August 28, 2016

துயர் பகிர்வு

திருமதி சின்னத்தங்கம் சரவணமுத்து (பண்டிதர் அம்மா) அவர்கள் இன்று, August 28, 2016, காலை 9:20 மணிக்கு இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற துயரச் செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். சரியாக 84 ஆவது வயதில் தனது பிறந்த தினத்திலேயே அவர் இவ்வுலகைவிட்டுப் பிரிந்திருக்கிறார்.

அன்னாரது இறுதிக் கிரியைகள் கனடாவில் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபரம் பின்னர் அறியத் தரப்படும்.

அன்னாரின் பிரிவால் துயரில் ஆழ்ந்து போயிருக்கும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் ஆகியோருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ளும் அதே வேளை பண்டிதர் அம்மாவின் ஆன்மா சாந்தியடைய உசன் முருகனைப் பிரார்த்திக்கிறது.


Wednesday, August 24, 2016

உசன் பாடசாலை பழைய மாணவனுக்கு கண்ணீர் அஞ்சலி ....

விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும் உசனில் வாழ்ந்து வந்தவரும் உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவனுமான திரு,கதீஸ்வன் ஜெயராஜா அவர்கள் , லண்டனில் அகாலமரணமானார் , அன்னார் வைதேகியின்  பாசமிகு கணவரும், ஓவிகா, டெனிசன் ஆகியோரின் பரிவான தந்தையும், ஜெயராஜா -சற்குணேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும், தர்மலிங்கம் – பாமினி தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.
அத்துடன் ஜெயசாந்தி, தர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும், கஜேந்திரன் வைஷ்ணவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அனைத்துலக உசன் சார்பாக கனடா உசன் ஐக்கிய மக்கள்  ஒன்றியம்-கனடா சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு கதீஸ்வரன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் முருகனை பிரார்த்திக்கின்றோம்.உசன் இராமநாதன் மகா வித்தியாலய மாணவர்கள் /பழைய மாணவர்கள் சார்பாக எமது ஆழ்ந்த அஞ்சலிகள்

தொடர்புகளுக்கு:- லண்டன்:- 442035565370; 447404889510; 447948618039
ஜெயராஜா,இலங்கை;- 94774350181
தர்சினி; பிரான்ஸ்:- 33649786663.


Wednesday, August 10, 2016

கனடா வாழ் விடத்தற்பளை மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு!!!

எதிர்வரும் ஆவணி மாதம் 14 ஆம் திகதி 2016, ஞாயிற்றுக்கிழமை, காலை 10.30 மணியில் இருந்து மாலை 7 மணிவரை, L'Amoreaux Sports Complex- Area A & Shelter 80 ( 100, Silver Springs Blvd , Toronto, Ontario, M1V 1S4) இல் விடத்தற்பளை மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற இருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். அதற்கு விடத்தற்பளை மக்கள், விடத்தற்பளைக் கமலாசனி வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள், மற்றும் விடத்தற்பளையின் அயல் கிராம உறவினர்கள், நண்பர்கள், விடத்தற்பளை நலன் விரும்பிகள் அனைவரையும் வருகை தந்து நிகழ்வினைச் சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்!!!

தகவல்:
விடத்தற்பளை மக்கள் ஒன்றியம்- கனடா

இந்த நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.