அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, May 30, 2016

கனடாவாழ் உசன் மக்களின் கோடைகால ஒன்றுகூடலும், புதிய நிர்வாகசபை தெரிவும் -2016


கனடா வாழ் உசன் மக்களை ஒன்று சேர்க்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா நடாத்தும் வருடாந்த  கோடை கால ஒன்றுகூடலும், வருடாந்தப் பொதுக் கூட்டமும் ஜூன்  மாதம் 26ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ளது.

வழமைக்கு மாறாக இந்தவருடம் Scarborough, Canada வில் McCowan  Road  மற்றும் Steeles Avenue  சந்திக்கு அருகாமையில் அமைந்திருக்கும் Milliken Park , Picnic Area-B   இல் இந்த நிகழ்வு இடம்பெறும்.

நடைமுறையில் இருக்கும் நிர்வாகசபையின் பதவிகாலம் நிறைவு பெறுவதால் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்படவுள்ளது.

இந்தப் பொதுகூட்டத்தில் கனடா வாழ் உசன் மக்களையும் உசன் இராமநாதன் மஹா வித்தியாலய பழைய மாணவர்களையும் கலந்து புதிய நிர்வாக சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வேண்டுகிறோம்.

அனைத்து வயதினருக்குமான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறும் இந்த நிகழ்வில் பல சுவை உணவு வகைகளும் பரிமாறப்படும். சிறப்பு கயிறுழுத்தல் போட்டி நடைபெறுவதுடன், வெற்றியாளர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படவுள்ளது

 இந்த நிகழ்வில் உங்களின் அன்புக்குரியவர்களின் நினைவாக கேடையங்கள் வழங்க விரும்புபவர்களும், நிகழ்வுக்கு அனுசரணை வழங்க விரும்பும் நிறுவனங்களும் ஒன்றியத்தின் செலயலாளரோடு secretary@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.

உங்கள் உள்ளங்களில் புத்துணர்வைக் கொண்டுவரும் இந்த வருடாந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு அழைக்கின்றது.

***** வழமைக்கு மாறாக இந்தவருடம் Scarborough, Canada வில் McCowan  Road  மற்றும் Steeles  சந்திக்கு அருகாமையில் அமைந்திருக்கும் Milliken Park , Picnic Area-B   இல் இந்த நிகழ்வு இடம்பெறும்.*****