அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Monday, May 30, 2016

கனடாவாழ் உசன் மக்களின் கோடைகால ஒன்றுகூடலும், புதிய நிர்வாகசபை தெரிவும் -2016


கனடா வாழ் உசன் மக்களை ஒன்று சேர்க்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா நடாத்தும் வருடாந்த  கோடை கால ஒன்றுகூடலும், வருடாந்தப் பொதுக் கூட்டமும் ஜூன்  மாதம் 26ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ளது.

வழமைக்கு மாறாக இந்தவருடம் Scarborough, Canada வில் McCowan  Road  மற்றும் Steeles Avenue  சந்திக்கு அருகாமையில் அமைந்திருக்கும் Milliken Park , Picnic Area-B   இல் இந்த நிகழ்வு இடம்பெறும்.

நடைமுறையில் இருக்கும் நிர்வாகசபையின் பதவிகாலம் நிறைவு பெறுவதால் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்படவுள்ளது.

இந்தப் பொதுகூட்டத்தில் கனடா வாழ் உசன் மக்களையும் உசன் இராமநாதன் மஹா வித்தியாலய பழைய மாணவர்களையும் கலந்து புதிய நிர்வாக சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வேண்டுகிறோம்.

அனைத்து வயதினருக்குமான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறும் இந்த நிகழ்வில் பல சுவை உணவு வகைகளும் பரிமாறப்படும். சிறப்பு கயிறுழுத்தல் போட்டி நடைபெறுவதுடன், வெற்றியாளர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படவுள்ளது

 இந்த நிகழ்வில் உங்களின் அன்புக்குரியவர்களின் நினைவாக கேடையங்கள் வழங்க விரும்புபவர்களும், நிகழ்வுக்கு அனுசரணை வழங்க விரும்பும் நிறுவனங்களும் ஒன்றியத்தின் செலயலாளரோடு secretary@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.

உங்கள் உள்ளங்களில் புத்துணர்வைக் கொண்டுவரும் இந்த வருடாந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு அழைக்கின்றது.

***** வழமைக்கு மாறாக இந்தவருடம் Scarborough, Canada வில் McCowan  Road  மற்றும் Steeles  சந்திக்கு அருகாமையில் அமைந்திருக்கும் Milliken Park , Picnic Area-B   இல் இந்த நிகழ்வு இடம்பெறும்.*****



Saturday, May 21, 2016

திரு சுவாமிநாதர் சிவபாதசுந்தரம்

யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், வரணி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுவாமிநாதர் சிவபாதசுந்தரம் அவர்கள் 17-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேந்திரன்(சுரேன், சுரேஷ்) அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி, இராஜநாதன், புவனேஸ்வரி, மற்றும் தங்கராஜா(லண்டன்), மகேஸ்வரன்(கனடா), விமலேஸ்வரி(சாவகச்சேரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜேஸ்வரி(வசந்தா) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கணேசலிங்கம்(முன்னாள் பொது முகாமையாளர்- பல நோக்கு கூட்டுறவு சங்கம், கொடிகாமம்) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை, May 21, 2016 அன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada என்ற முகவரியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும். கிரியைகள் அதே முகவரியில் ஞாயிற்றுக்கிழமை, May 22, 2016 அன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை நடைபெற்று, Highland Hills Memorial Gardens, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada என்ற முகவரிக்கு பூதவுடல் தகனம் செய்யப்படுவதற்காக எடுத்துச் செல்லப்படும். காலை 11:45 மணிக்கு அன்னாரின் பூதவுடல் தீயுடன் சங்கமமாகும்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கிறது.


Wednesday, May 18, 2016

திரு.சு.சிவபாதசுந்தரம் அவர்கள் காலமானார் .......


உசனை சேர்ந்த திரு.சுவாமிநாதர் சிவபாதசுந்தரம் அவர்கள் இன்று கனடாவில் காலமானார் , அன்னாரின் இறுதிகிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும் , இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு வேண்டுகிறோம் ,
அன்னாரின் ஆத்மசாந்தியடைய கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் பிராத்திக்கிறது .

தகவல்:
மகன் சிவா சுரேந்தர் -0016472616069