அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, April 22, 2016

மரண அறிவித்தல் - தயாவதி நவகுமாரன்

சரசாலை தெற்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் உசன் மற்றும் 17/45, பண்டாரிக்குளம் மேற்கு ஒழுங்கை நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட தயாவதி நவகுமாரன் 21.04.2016 வியாழக்கிழமையன்று காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற இந்துபோட் சு. இராஜரட்ணத்தின் பேத்தியும், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன் (முன்னாள் அதிபர், சாவகச்சேரி இந்துக் கல்லூரி), யோகாம்பாள் தம்பதியரின் கனிஷ்ட புத்திரியும், உசனைச் சேர்ந்த காலஞ்சென்ற நவரத்தினம் மற்றும் உமாமகேஸ்வரியின் அன்பு மருமகளும், நவகுமாரனின் (ஓய்வுநிலை வங்கி உத்தியோகத்தர், கொமர்சல் வங்கி, யாழ்ப்பாணம்) அன்பு மனைவியும், மாதங்கி (மூன்றாம் வருட மருத்துவபீட மாணவி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), கிருத்திகன் (சம்பத் வங்கி, ஊர்காவற்றுறை), தாரங்கி (தரம் 13 மாணவி, யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை), தனுரங்கி (தரம் 10 மாணவி, வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும், யசோதாவின் அன்புச் சகோதரியும் கிருஷ்ணமூர்த்தி, சரோஜினி, சாந்தினி, சிவகுமார், ரவிகுமார், றஜனி, நளாயினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 24.03.2016 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் சரசாலை தெற்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பிற்பகல் 3 மணியளவில் தகனக் கிரியைகளுக்காக வேம்பிராய் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தகவல்
சாந்தினி சிவானந்தன் (+1 905-554-2014)
ந.நவகுமாரன் (Rtd. Banker, Commercial Bank, Jaffna)

முகவரி
பருத்தித்துறை வீதி, சரஸ்வதி வித்தியாலயம் அருகில், சரசாலை தெற்கு, சாவகச்சேரி.


Tuesday, April 12, 2016

புதிய சிந்தனையில் உசன் பாடசாலைக்கு உதவிய பழைய மாணவர்களை பாராட்டுவோம் ....

உசன் இராமநாதன் மஹா வித்தியாலயத்தில் 1995 ம் ஆண்டு , தரம் 5 ல் கல்வி கற்று புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய வகுப்பை சேர்ந்த பழைய மாணவாகள் சிலர் ஒன்றிணைந்து .தாம் கல்விகற்ற எமது உசன் பாடசாலையில் ஒரு முன்மாதிரி நிகழ்வை நடத்தியுள்ளனர் . தற்போது இலங்கையில் பொது உளச்சார்பு மற்றும் பொது அறிவு சம்பந்தப்பட போட்டிபரீட்சையானது எல்லோருக்கும் மிகவும் முக்கியமான ஒரு தடைதாண்டல் பரீட்சையாக விளங்கி வருகிறது.
இந்த பரீட்சையை உசன் பாடசாலை மாணவர்கள் இலகுவாக எதிர்கொள்ள சபதம் கொண்ட இவர்கள் உலக பரப்பில் வாழும் அனைவருடன் தொடர்பை ஏற்படுத்தி இந்த திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர்  ,  தரம் 4 முதல் 13 ம் ஆண்டு வரையுள்ள மாணவர்களுக்கு இரு முறை போட்டி பரீட்சை வைத்து அதை தாமே தயாரித்து , மதிப்பீடு செய்து பெறுமதியான பரிசில்கள் வழங்கியுள்ளனர் , இதை தொடர்ந்து ஒவோருவருடம் செய்ய தீர்மானித்துள்ளனர்.
இவர்களை பாராட்டுவதுடன் மட்டும் நின்றுவிடாது, இதே போன்று ஒவ்வொரு பழைய மாணவர்களும் தனியாகவோ குழுவாகவே செயல்படவேண்டும் , இந்த திட்டத்தை முன்னின்று அனைவரையும் ஒன்றிணைத்து  செயலாற்றிய  அனைவருக்கும் நன்றி







Monday, April 11, 2016

உசன் பாடசாலை பழைய மாணவர்களின் உற்சாகமான புதிய முயற்சி ......



உசன் இராமநாதன் மஹா வித்தியாலயத்தில் 1995 ம் ஆண்டு , தரம் 5 ல் கல்வி கற்று புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய வகுப்பை சேர்ந்த பழைய மாணவாகள் சிலர் ஒன்றிணைந்து .தாம் கல்விகற்ற எமது உசன் பாடசாலையில் ஒரு முன்மாதிரி நிகழ்வை நடத்தியுள்ளனர் . தற்போது இலங்கையில் பொது உளச்சார்பு மற்றும் பொது அறிவு சம்பந்தப்பட போட்டிபரீட்சையானது எல்லோருக்கும் மிகவும் முக்கியமான ஒரு தடைதாண்டல் பரீட்சையாக விளங்கி வருகிறது.
இந்த பரீட்சையை உசன் பாடசாலை மாணவர்கள் இலகுவாக எதிர்கொள்ள சபதம் கொண்ட 1995 ம் ஆண்டு , தரம் 5 ல் கல்வி கற்று புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய வகுப்பை சேர்ந்த பழைய மாணவாகள் ,  தரம் 4 முதல் 13 ம் ஆண்டு வரையுள்ள மாணவர்களுக்கு இரு முறை போட்டி பரீட்சை வைத்து அதை தாமே தயாரித்து , மதிப்பீடு செய்து பெறுமதியான பரிசில்கள் வழங்க தீர்மானித்துள்ளார்கள். 

மாணவர்களை மூன்று பிரிவாக பிரித்து ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று புள்ளிகளை பெறும் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படும். அந்த வகையில் இம் முறை அப் பரீட்சையை பாடசாலை சமூகத்தின் உதவியடன் நடத்தி மொத்தம் 15 மாணவர்களுக்கு இன்று பரிசில்கள் வழங்கி மாணவர்களை உற்சாகபபடுத்திஉள்ளோம். நிச்சயம் இம் முயற்சி மாணவர்களுக்கு போட்டி பரீட்சைகளுக்குரிய மிகவும் சிறந்த அடித்தளத்தை வழங்கும் என்பதில் ஐயமில்லை அதே நேரம் ஏனைய பழைய மாணவர்களையும் பாடசாலைக்கு பல வழிகளில் தமது பங்களிப்புக்களை வழங்குவதற்குரிய எடுத்துக்காட்டாகவும் இம் முயற்சி இருக்கும் . அது மட்டுமன்றி இவ்வாறான நிகழ்வை வருடத்தில் இரு தடவை நடத்தி பரிஸில் வழங்க இந்த இளையவர்கள் முன்வந்துள்ளனர் . இவர்களுக்கு னைவரும் இணைந்து பங்களிப்பு வழங்கி எமது பாடசாலை மாணவர்களை உட்சாகப்படுத்த வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு
இந்த அளப்பரிய முயற்சியை செய்து காட்டிய இந்த இளைய உணர்வுள்ள பழைய மாணவர்களை பாராட்டுவதில் , கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் பெருமை கொள்கிறது .
தொடர்ந்து வரும் இவர்களின் முயற்சிக்கு எமது ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளோம் .


மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் எமது [பாடசாலையை மீண்டும் நிமிர்த்த இதே போன்று பழைய மாணவர்கள் தாமாக ஒன்றிணைய வேண்டும் என வேண்டுகிறோம் ,
உங்களுக்கு சகல வழிகளிலும் உதவ .. கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றிய தயாராவே உள்ளது
உங்கள் தொடர்புகளுக்கு
செயலாளர் +16474487434
உசன் தொடர்பாளர் : +14168332120















Wednesday, April 6, 2016

திரு.இளையதம்பி ஐயாத்துரை அவர்கள் புவிவாழ்வை நிறைவு செய்துள்ளார்.....


உசனை சேர்ந்த திரு.இளையதம்பி ஐயாத்துரை அவர்கள் இன்று(06.04.2016) தனது 92வது வயதில் தனது புவிவாழ்வை நிறைவு செய்துள்ளார் ,அன்னார் உசன் கிராம அபிவிருத்தி ஆர்வலர் Dr . கணேஷன் அவர்களின் தந்தையாவார் அன்னாரின்  இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்திஅடைய அனைத்துலக உசன் மக்கள் சார்பாக பிரார்திக்கின்றோம்.
மேலதிக விபரம் பின்னர் அறியத்தரப்படும் .
கனடா உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் ,


Monday, April 4, 2016

"உசன் ஊர் பற்றி ஊடகங்களில் தவறான செய்தி......."


அண்மையில் உசன் கிராமத்தில் பெருமளவு கஞ்சா போதை பொருள் கைப்பற்றப்பட்டதாக சில ஊடகங்களில் செய்தி பிரசுரிக்கப்பட்டன . இந்த செய்தியில் எந்த வித்தத்திலும் உசன் ஊரோ அல்லது உசன் மக்களோ சம்பத்தப்படவில்லை , குறித்த சம்பத்தில் கைது செய்யப்படவர்கள் கொடிகாமம் போலிஸ் பிரிவுக்குட்டபட்ட தவசிகுளம் , போக்கட்டி மற்றும் கெற்பெலி பகுதியை சேர்ந்தவர்கள் , குறித்த வாகனம் கண்டி வீதி , மிருசுவில் சந்திக்கருகாமையில் கைப்பற்றப்பட்டுள்ளது , ஊடகங்களில் உசனில் போதை மருந்து கைப்பற்றப்பட்டது என்ற செய்தியானது தவறானது என்பதுடன் , இந்த செய்தி எமது உசன் மக்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது எமது உசன் ஊர் குறித்த தவறான செய்திக்கு அனைத்துலக உசன் மக்கள் சார்பாக கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் எமது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறோம் ,
,எனவே ஊடகங்கள் இந்த செய்தியை திருத்தி உண்மை செய்தியை பிரசுரிக்குமாறு வேண்டுகிறோம் .
நன்றி

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம்