கடந்த January மாதம் நடைபெற்ற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் "உசன் உறவுகள் 2015" நிகழ்வில் ஒரு சிறப்பு மதிப்பளிப்பு இடம்பெற்றது. ஒன்றியத்தின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் தனது ஆத்மார்த்தமான ஆதரவை வழங்கி வரும் திரு. நல்லதம்பி பத்மநாதன் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இந்தச் சிறப்பு நிகழ்வை Total Debt Free Credit Solution ஐச் சேர்ந்த Certified Insolvency Counselor, இளங்கீரன் தங்கவேலாயுதம் அவர்கள் ஒழுங்கு செய்திருந்தார்.
ஒவ்வொரு கோடைகால ஒன்றுகூடலிலும் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தனது தன்னலமற்ற சேவையினால் சுவைமிகு உணவைத் தயாரித்து வழங்குபவர் நல்லதம்பி பத்மநாதன் அவர்கள். BBQ விற்குத் தேவையான கோழிகளை வாங்கி, அவற்றைப் பதப்படுத்தி, நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு எடுத்துவந்து, அதை தரமான முறையிலே வேகவைத்து, நிகழ்வு தொடங்கி முடியும்வரை BBQ பகுதியிலேயே நின்று வயது வேறுபாடின்றி வந்திருக்கும் ஒவ்வொருவரையும் உபசரித்து மகிழும் இவரது சேவையைப் பார்த்து வியந்துபோன கீரன் அவர்கள் இந்தச் சேவையைப் பாராட்டியே ஆகவேண்டும் என்று எண்ணம் கொண்டார். ஒன்றியத்தை அணுகித் தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இந்தப் பாராட்டு தெரிவிக்கும் நிகழ்வை மிகவும் இரகசியமான முறையில் செயற்படுத்த வேண்டிக்கொண்டார். அவரது வேண்டுதலுக்கு மதிப்பளித்து, இந்தச் சிறப்பு மதிப்பளித்தல் நிகழ்வு கடந்த குளிர்கால ஒன்றுகூடலில் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வை அங்கு வந்திருந்த அனைவரும் வாழ்த்தி வரவேற்றனர்.
தனது சேவையால் உசன் மக்களை மகிழவைத்துக்கொண்டிருக்கும் பத்மநாதன் அவர்களுக்கும், அவருக்கு தமது ஆதரவை வழங்கும் மனைவி மற்றும் மகளுக்கும், இந்தச் சேவையைப் பாராட்ட முன்வந்த கீரன் அவர்களுக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.