உசன் சந்திக்கு அருகாமையில் மதுபான நிலையம் ஒன்றை அமைப்பதற்கான முஸ்தீபுகள் மிக வேகமாக நடைபெற்று வருவதை எமது சங்கம் அறிந்து அதிர்ச்சி அடைந்துசமூகத்தின் நலன்கருதி அதைநிறுத்துவதற்க்கு தன்னாலான முயற்ச்சிகளை உடனடியாகவே ஆரம்பித்தது.பொறுப்பு வாய்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் எமது ஆட்சேபனையை பதிவு செய்தோம். அதன் தொடர்ச்சியாக கடந்த 02.02.2016 அன்று யாழ் அரச அதிபரின் பணிப்பிற்க்கமைய தென்மராட்சிபிரதேசெயலாளர் குறித்தபகுதிக்கு கள ஆய்வுக்குவருகைதந்தார்.இதை அறிந்தநாம் மிகவேகமாகசெயற்பட்டு அயல்கிராமத்தைசேர்ந்தஅனைத்துபொதுஅமைப்புகளையும் ஒன்றிணைத்து பலமான எதிர்பைபதிவுசெய்தோம்.அத்துடன் நின்றுவிடாது நேற்றையதினம் இதனால் நேரடியாக பாதிக்கப்படபோகின்ற கிராமங்களின்பொதுஅமைப்புக்கள்(26அமைப்பு) மதத்தலைவர்களை ஒருங்கிணைத்து எமது சங்கமண்டபத்திலே அடுத்தகட்டநடவடிக்கைசம்பந்தமாக விரிவாக ஆராய்ந்து தீர்க்கமானமுடிவை எட்டியுள்ளோம்.எனவே இவறான சமுகவிரோத செயற்பாடுகளுக்கெதிராக எமது சங்கம் தொடர்ந்தும் விழிப்புடன் இருந்து காத்திரமான பங்களிப்பை வழங்கும் என உறுதிஅளிக்கிறது.