அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, February 23, 2016

உசனில் சிறப்பாக நடைபெற்ற மாசிமாத "முழுநிலாநாள் கருத்தரங்கு "...

உசன் கிராம அபிவிருத்தி சங்கமும் ,கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியமும் இணைந்து உசன் மக்களினதும் மற்றும் அயல் கிராமமக்களினதும் பயன் கருதி முழு நோன்மதி தினங்களிலே நடைபெற்றுவரும் தொடர் கருத்தரங்குகள் வரிசையில் கடந்த 22.02.2016 திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு உசன் இராமநாதன் மகா வித்தியாலய மண்டபத்திலே
 "அறிவு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் பெற்றோரின் பங்கு" எனும் தலைப்பில் ஆசிரியர் பயிற்சி கலாசாலை பிரதி அதிபர் செஞ்சொற்செல்வர் திரு ச.லலீசன் கருத்துரை வழங்கினார் ,

மிகவும் சிறப்புற நடைபெற்ற முழுநிலாநாள் தொடர் கருத்தரங்கின் இரண்டாவது அமர்வு செந்தமிழ் சொல்லருவி திரு ச.லலிசன் அவர்களின் ஆளாமான புலமையினூடு அழகொச்சும் கொஞ்சுதமிழிலே தனக்கே உரித்தான பாணியிலே சிம்மக்குரலில் விடயப்பரப்பை துளைத்தெடுத்து அறிவுமுத்துக்களை அனைவரும் விளங்கி கொள்ளும் வகையிலே பரவவிட்டிருந்தார்.
மக்களின் உற்சாகமான வரவு தொடர்ந்தும் இந்தமாதிரியான நிகழ்வுகளை நடாத்த உந்து சக்தியாக அமைந்திருந்தது , 
உசன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களின் சிந்தனையும் துரித செயல்பாடும் மற்றைய கிராம மக்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் ,
தொடர்ந்து நடைபெறும் கருத்தரங்கு மற்றும் செயல்பாடுகளுக்கு அனைத்து மக்களின் ஆதரவையும் வேண்டி நிக்கிறோம் ,