உசன் கிராம அபிவிருத்தி சங்கமும் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியமும் இணைந்து உசன் மக்களினதும் மற்றும் அயல் கிராமமக்களினதும் பயன் கருதி முழு நோன்மதி தினங்களிலே நடைபெற்றுவரும் தொடர் கருத்தரங்குகள் வரிசையில் வரும் 22.02.2016 திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு உசன் இராமநாதன் மகா வித்தியாலய மண்டபத்திலே
"அறிவு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் பெற்றோரின் பங்கு" எனும் தலைப்பில் ஆசிரியர் பயிற்சி கலாசாலை பிரதி அதிபர் செஞ்சொற்செல்வர் திரு ச.லலீசன் கருத்துரை வழங்கவுள்ளார்.இவர் தற்போது ஈழத்திலே உள்ள சிறந்த பேச்சாளர்களில் ஒருவர்.பல்துறை ஆழுமை கொண்டவர்.கம்பன்கழக பேராளர்களில் ஒருவர்.தென்மராட்சி மண்பெற்றெடுத்த தவப்புதல்வர்களில் ஒருவர்.என இவருடைய தன்னிகரில்லா சிறப்புகளை சொல்லிக் கொண்டே போகலாம்.அத்துடன் இன்நிகழ்வுக்குரிய அனுசரனையாளர்களாக எமக்கு உற்சாகம் வழங்கி வரும் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் நிகழ்வை மெருகூட்டுவதற்க்காக ஒலி பெருக்கி சாதனங்களை வழங்கி இருக்கிறார்கள். எனவே அனைத்து ஆர்வலர்களையும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.