"உசன் உறவுகள் 2015" கடந்த சனிக்கிழமை, January 16 ஆம் திகதி Scarborough நகரில் அமைந்திருக்கும் Baba Banquet Hall மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. மண்டபம் நிறைந்த உசன் மக்களோடு மனதுக்கு இதம் தரும் கலை நிகழ்சிகளோடு விழா களைகட்டியிருந்தது. உசன் மண்ணைச் சேர்ந்த New Market Taxi & Limo நிறுவன அதிபர் திரு ,திருமதி நடராசா வசந்தராசா மனைவியோடு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இளையவர்களின் இசை மற்றும் நடன நிகழ்வுகள் கூடியிருந்தோரைக் கொள்ளைகொண்டன. உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் அதிபர் மறைந்த மதிப்புக்குரிய சிவசரவணபவன் (சிற்பி) அவைகளை நினைவுகூர்ந்து அவரோடு நீண்ட நாள் கடமையாற்றிய முன்னாள் ஆசிரியர் திரு ஸ்ரீகாந்தன் அவர்கள் உரை ஆற்றினார். அண்மையில் உசன் மண்ணுக்குச் சென்று வந்த வைத்திய கலாநிதி இந்திரன் ஆசிர்வாதம் அவர்கள் அங்கு நடப்பவற்றைப் பற்றி எடுத்துச் சொன்னார். குறிப்பாக அவரின் அனுசரணையோடு நடாத்தப்படும் இலவச ஆங்கில வகுப்பு எப்படி நடக்கிறது என்றும், எதிர்காலத்தில் எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார்.
Photos By :E.Nagulan Varshan
Photos By:E.NagulanVarshan |