உசன் வாழ் மக்களினதும் மற்றும் அயல் கிராம மக்களின் நலன் கருதி பல தசாப்தங்களுக்கு முன்னர் நடாத்தப்பட்டுவந்த "முழு நிலா கருத்தரங்கு "
மீண்டும் உசன் கிராமத்தில் நடைபெறவுள்ளது, உசன் கிராம அபிவிருத்திசங்க புதிய நிர்வாக அமைப்பும் , கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியமும் இணைந்து இந்த கருத்தரங்கை நடாத்தவுள்ளது ,
நடைமுறை உலக பண்பாட்டு விழுமியங்கள் , நவீன தொழில்நுட்ப அறிவியல் சார் விடையங்கள்,மருத்துவ அறிவியல் கருத்துக்கள் , தொழில் வாய்ப்பு அறிவுரைகள் , சட்டத்துறை சார்ந்த அறிவுரைகள் , தொழில் அதிபர்களின் அனுபவங்கள் , புலம்பெயர் உசன் மக்களின் அறிவியல் தொழில் துறை சார் அனுபவங்கள் என பல தரப்பட்ட விடையங்களை இந்த கருத்தரங்கின் மூலம் மக்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது ,
இந்த கருத்தரங்கு மாதம் தோறும் வருகின்ற பௌர்ணமி விடுமுறை தினத்தில் மாலை 4 மணிக்கு உசன் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது , இந்த கருத்தரங்கு தொடர்ந்து சிறப்பாக நடைபெற உசன் மற்றும் அயல்கிராம மக்களின் பங்களிப்பு முக்கியமாகிறது .
இந்த முயற்சிக்கான நவீன உபகரணங்கள் மற்றும் உதவிகளை கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் வழங்கவுள்ளது ,
அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து உசனுக்கு செல்லுகின்ற மக்கள் மற்றும் இளைய சமுதாய மாணவர்கள் உங்கள் அனுபவங்களை ,திறமைகளை எமது கிராம மக்களுடன் பகிர்ந்து கொள்ள வாய்ப்புக்கள் செய்யப்பட்டுள்ளது , இந்த முயற்சி வெற்றிகரமாக நகர்த்தி செல்வது உசன் மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது ,
உசன் கிராம அபிவிருத்தி சங்க நிர்வாகத்தின் சிறந்த திட்டமிடலில் முதல் நிகழ்வாக வரும் 23 ம் திகதி மாலை 4 மணிக்கு "நேர் மனப்பாங்குடன் வாழ்வோம் " எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெறவுள்ளது ,
இன் நிகழ்வில் மருதங்கேணி பிரதேச செயலாளர் ,கருத்தாளர் உயர் திரு.கனகேஸ்வரன் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார் ,
இன் நிகழ்வில் உசன் மற்றும் அயல் கிராம மக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம் .
இந்த கருத்தரங்கில் தொடர்பான உங்கள் கருத்துக்கள் ஆலோசனை, பங்களிப்புக்களை எதிர்பார்கிறோம் .
தொடர்புகளுக்கு :
உசன் கிராம அபிவிருத்தி சங்கம் - தலைவர் ரூபன் -0777276189
கனடா உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் - அஜந்தன் -0014168332120
email :aju@usan.ca