அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, December 31, 2016

திரு.கதிரித்தம்பி ஆசிரியர் அவர்கள் காலமானார்


உசனை  சேர்ந்த திரு.கதிரித்தம்பி ஆசிரியர் அவர்கள் (ஓய்வு பெற்ற அதிபர். விடத்தற்பளை  கமலாசினி வித்தியாலயம் )

இன்று உசனில் இறைபதம் அடைந்தார் . அன்னாரின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கிறோம் .
மேலதிக தகவல் பின்னர் அறியத்தரப்படும் .


Thursday, December 22, 2016

"நினைவுகளைக் கையளித்தல்"

அமரர் "சிற்பி" அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுப் பகிர்வு நிகழ்வு

உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் அதிபர் சி. சிவசரவணபவன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுப் பகிர்வு சனிக்கிழமை, 24/12/2016 அன்று நடைபெறவுள்ளது.  நீராவியாடியில் அமைந்திருக்கும் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் பிற்பகல் 3 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமாகும். 

"நுணுக்கரிய நுண்ணுணர்வே" மற்றும் "கலைச் செல்விக் காலம்" ஆகிய இரு நூல்கள் இந்த நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட இருக்கின்றன.

அன்னாரின் குடும்பத்தினர் உங்கள் அனைவரதும் வருகையை அன்புடன் எதிர்பார்க்கின்றனர்.
 
 





Thursday, December 15, 2016

வாழும்போதே மதிப்பளித்தல் - உசனில் சிறப்பு நிகழ்வு


 1995 ஆம் ஆண்டு உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் G. C. E. O/L பரீடசைக்குத் தோற்றிய பழையமாணவர்கள் அனைத்துலகிலும் இருந்து இணைந்து உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் ஒரு முன்மாதிரி நிகழ்வை நடத்தவுள்ளனர்.

உசன் பாடசாலையில் கல்வி கற்பித்து ஓய்வுபெற்ற, இடமாற்றம் பெற்ற மற்றும் இயலாநிலையில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும், பல இடங்களிலும் சிதறி வாழும் வகுப்பு மாணவர்களையும் மீண்டும் உசன் பாடசாலைக்கு வரவழைத்து, ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து, அவர்களுக்கு வாழும் போதே மதிப்பளிக்கவுள்ளனர். தொடர்ந்து மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மதிய உணவு பரிமாறவுள்ளனர். அதைவிட உலகெங்கும் பரந்து வாழும் 1995 ஆம் ஆண்டு G. C. E. O/L பரீடசைக்கு தோற்றிய பழையமாணவர்கள் இணைந்து பாடசாலைக்கு ஒலிபெருக்கி சாதனங்களை அன்பளிப்பாக வழங்கவுள்ளனர்.

அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறார்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்.

December 18 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது. இதனை ஒழுங்கு செய்த பழைய மாணவர்களுக்கு நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. இந்தப் பழைய மாணவர்களை ஆளாக்கிய ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கு நன்றியை நவில்கின்றது.

தலைவர்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Saturday, December 10, 2016

திரு கந்தையா நல்லையா
(ஓய்வுபெற்ற திருமணப் பதிவாளர்)



யாழ்., மிருசுவில், உசனைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, இயக்கச்சி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா நல்லையா அவர்கள் 09-12-2016 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஷ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

பாஸ்கரன், மனோகரன், பவானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவாஜினி, சியாமளா, ரூபன்(Y.K நாதன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

வாசவன், விபீஷன், வைஷ்னா, மனஷா, மதுஷா, மதுஷன், ஹர்ஷா, வர்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான சின்னம்மா, பொன்னையா, தங்கம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், வள்ளிப்பிள்ளை, பொன்னுத்துரை, தங்கராசா, நேசமணி செல்வராணி, மற்றும் சின்னையா(ஓவசியர்- இலங்கை), வள்ளிநாயகி, மகாலிங்கம், தெய்வநாயகி(அவுஸ்திரேலியா), பொன்மணி, கந்தசாமி(அவுஸ்திரேலியா), பாக்கியலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிவயோகநாதன்(கனடா), சிவானந்தன், சிவநேசன்(அமெரிக்கா) ஆகியோரின் அன்பு சித்தப்பாவும்,

அருட்சோதிலிங்கம்(கனடா), ஞானசுந்தரராஜா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ரூபன்(Y.K நாதன்)

பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 10/12/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Highland Funeral Home - Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada

பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/12/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Highland Funeral Home - Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada

கிரியை
திகதி: திங்கட்கிழமை 12/12/2016, 09:00 மு.ப — 11:00 மு.ப
முகவரி: Highland Funeral Home - Scarborough Chapel, 3280 Sheppard Ave E, Scarborough, ON M1T 3K3, Canada

தகனம்
திகதி: திங்கட்கிழமை 12/12/2016, 11:30 மு.ப
முகவரி: Forest Lawn Mausoleum & Cremation Centre, 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு
புஷ்பராணி — கனடா
செல்லிடப்பேசி: +14163320671
பாஸ்கரன் — கனடா
தொலைபேசி: +19054282736
மனோகரன் — கனடா
செல்லிடப்பேசி: +14163028696
பவானி ரூபன் — கனடா
செல்லிடப்பேசி: +14163471250


Thursday, December 8, 2016

கவிதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா

கவிஞர் சூரியநிலாவின் கவிதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா ஞாயிறுக் கிழமை, 11.12.2016 அன்று இடம்பெறவுள்ளது.  "யாழ் கவி" மற்றும் "அழகு" ஆகிய இரு கவிதைத் தொகுதிகளுமே வெளியிட்டு வைக்கப்படவுள்ளன.  கவிஞர் சூரியநிலாவின் இயற்பெயர் ஆ. ஜென்சன் ரொனால்ட்.  இவர் ஒரு பட்டதாரி ஆவார்.

இந்த நிகழ்வு பிற்பகல் 2 மணிக்கு பருத்தித்துறை வீதி, கொடிகாமத்தில் அமைந்திருக்கும் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெறும்.

பிரதம விருந்தினராக ஓய்வுநிலை அதிபர், யா/டிறிபேக் கல்லூரி, க. அருந்தவபாலன் அவர்கள் கந்துகொள்கிறார்.  இந்த நிகழ்வுக்கு யா/ உசன் இராமநாதன் மகா வித்தியாலய அதிபர் த. சோதிலிங்கம் அவர்கள் தலைமை தாங்குகிறார்.  சாவகச்சேரி பிரதேச சபை செயலாளர் திருமதி மு. கோடீஸ்வரன் மற்றும் கைத்தடி சித்த ஆயுள்வேத வைத்தியசாலை வைத்தியர் ஐ. ஜெபநாமகணேசன்  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பிக்கின்றனர்.

உசன் கந்தசாமி கோவில் பிரதம குரு பிரம்மஸ்ரீ இ. கேதீஸ்வரக் குருக்கள் ஆசியுரை வழங்குவார்.

இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு நூல் ஆசிரியர், கவிஞர் சூரியநிலா அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்.

நிகழ்ச்சி நிரல் கீழே உள்ள இணைப்பில் உள்ளது.




Tuesday, December 6, 2016

புதிய பரிமாணத்தில் "உசன் உறவுகள்"



உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வருடாந்தம் வழங்கும் உள்ளரங்க நிகழ்வான  "உசன் உறவுகள்" நிகழ்வு என்றுமில்லாதவாறு புதிய பரிமாணத்துடன் இந்தமுறை நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம்.  அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் எம்மவர்களின் நிகழ்ச்சிகளுடன் கனடாவின் முன்னணி தளவாத்திய இசைக்குழுவான RA Rhythm இசைக் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியும் உங்கள் அனைவரினதும் உள்ளங்களைக் கொள்ளைகொள்ள இருக்கின்றது.



எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு January மாதம்  21 ஆம் திகதி சனிக்கிழமை Baba Banquet Hall இல் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், கனடா வாழ் உசன் இளைய சமுதாயத்தினரின் இசைத் திறமை வெளிவர உள்ளது.  உசனை சேர்ந்த கனடா வாழ் பாடகர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக அவர்களுக்கு மேடையில் இசை வாத்தியங்களுடன் பாடும் சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.  உசன் பாடகர்களுடன் கனேடிய முன்னணிப் பாடகர்களும் இணைந்து இசை நிகழ்ச்சி மண்டபத்தை அமர்களப்படுத்த உள்ளது.



இந்த நிகழ்ச்சியில் இசைக்குழுவினரோடு சேர்ந்து பாட ஆர்வமுள்ளோர் தலைவர் பாஸ்கரனோடு தொடர்பு கொள்ளவும்.  முதலிலே குரல் வளம் பரீட்சிக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவோர் இசைக் குழுவினரோடு சேர்ந்து பயிற்சி பெறுவார்கள்.  வழங்கப்படும் அத்தனை பயிற்சியிலும் கலந்துகொண்டு திறமையாகப் பாடுவோருக்கு "உசன் உறவுகள்" நிகழ்ச்சியில் பாடச் சந்தர்ப்பம் வழங்கப்படும்.  உங்கள் திறமையை வெளிப்படுத்த இந்தச் சந்தர்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆர்வமுள்ளோர் சனிக்கிழமை, December 10 ஆம் திகதிக்கு முன்பு தொடர்புகொள்ளவும் அல்லது president@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரியில் உங்கள் விருப்பதைத் தெரிவிக்கலாம்.



இசை நிகழ்ச்சியில் அதிக பாடல்களைச் சேர்த்துக்கொள்ளும் வகையில்  "உசன் உறவுகள்" நிகழ்வுக்கு மாலை 5 மணிக்கே வருகை தருமாறு அன்போடு வேண்டுகிறோம்.

இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்க விரும்புவோர் பாஸ்கரனோடு தொடர்பு கொள்ளவும்.

நன்றி.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா




"USAN URAVUKAL"


The upcoming "USAN URAVUKAL", an annual event, proudly presented by United People Association of Usan in Canada will be an extravaganza event.  It will be entirely in a different format. You will be entertained to the ultimate.  This event will be at Baba Banquet Hall on Saturday, January 21, 2017.

With the performances of Usan people you will be thrilled to listen to the live music of "RA Rhythm", a leading Canadian music group.  Along with Usan singers, Canadian artists will be on the stage.



Anyone interested in singing in this event with live music, specially the younger generation, please contact to Baskaran, President of United People Association of Usan in Canada.  After the voice test, selected candidates will practice with the music group.  All those who participate in all the practice sessions and perform very well will be on the stage at "Usan Uravukal".  Please express your desire before the end of Saturday, December 10, 2016 via email at president@usan.ca



In order to accommodate as many songs as possible, please be present at the hall at 5 p.m. on January 21, 2017.

Well wishers who would like to sponsor this event, please contact Baskaran.

Thank you.

United People Association of Usan in Canada.




Sunday, December 4, 2016

உசன் பழைய மாணவர்களின்
"வாழும் போதே மதிப்பளிப்போம்"
சிறப்பு நிகழ்வு


1995 ஆம் ஆண்டு உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்விகற்ற பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து பாடசாலைக்கு வழங்கும் சேவையைப் பின்பற்றி , 1995 ஆம் ஆண்டு உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் G. C. E. O/L  பரீடசைக்குத் தோற்றிய பழையமாணவர்கள் அனைத்துலகிலும் இருந்து இணைந்து உசன் பாடசாலையில்  ஒரு முன்மாதிரி நிகழ்வை நடத்தவுள்ளனர்.  

உசன் பாடசாலையில் கல்வி கற்பித்து ஓய்வுபெற்ற, இடமாற்றம் பெற்ற மற்றும் இயலாநிலையில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும், பல இடங்களிலும் சிதறி வாழும் வகுப்பு மாணவர்களையும் மீண்டும் உசன் பாடசாலைக்கு வரவழைத்து, ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்து, அவர்களுக்கு வாழும் போதே மதிப்பளிக்கவுள்ளனர்.  தொடர்ந்து மாணவர்கள் ஆசிரியர்களுக்கு மதிய  உணவு பரிமாறவுள்ளனர்.  அதைவிட உலகெங்கும் பரந்து வாழும் 1995 ஆம் ஆண்டு G. C. E. O/L  பரீடசைக்கு தோற்றிய பழையமாணவர்கள் இணைந்து பாடசாலைக்கு ஒலிபெருக்கி சாதனங்களை அன்பளிப்பாக வழங்கவுள்ளனர்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு பழையமாணவர்களால் நடத்தப்படவிருக்கும் இந்த முன்மாதிரி சிறப்பு நிகழ்வு  பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெறும். பிரதம விருந்தினராக 1995 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பாடசாலை அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற அதிபர் ஐ. வரதராஜா அவர்கள் கலந்துகொள்ளவுள்ளார்.  

நாட்டின் பலபகுதிகளிலும் வாழ்ந்துவரும் ஆசிரியர்கள் மீண்டும் உசனில் கூடவுள்ள இந்த நாளில் அனைத்துப்  பழைய மாணவர்களையும், பெற்றோர், நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்து இந்த நிகழ்வைச் சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.  நீண்ட காலத்தின் பின்  முன்னாள் ஆசிரியர்களைச் சந்தித்து அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் பழைய நினைவுகளை இரைமீட்கும் ஒரு நல்ல சந்தர்ப்பமாக 
இருக்கப் போகும்  இந்த நிகழ்வை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

நன்றி 

1995 ஆம் ஆண்டு G. C. E. O/L  மாணவர்கள்.


Tuesday, November 29, 2016

உசன் பழைய மாணவர்களின் முன்மாதிரியான செயல்

1995 ஆம் ஆண்டு உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்விகற்ற பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து தற்போது தரம் 4 முதல் 13 வரை கல்வி கற்கும் மாணவர்களை ஊக்குவிக்குமுகமாக அவர்களுக்கு பொது உளச்சார்பு மற்றும் பொதுஅறிவு ஆகியவற்றில் பரீட்சை நடாத்தி பரிசளிப்பு நடத்தியுள்ளனர். இந்த முன்மாதிரியான செயலை அவர்கள் கடந்த வருடம் ஆரம்பித்தனர். தொடர்ந்தும் இந்த ஊக்குவிப்புப் பரீட்சைகளை அவர்கள் நடத்த உள்ளனர். இந்தப் பழைய மாணவர்களுக்கும், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களுக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

இந்த நிகழ்வில் பிடிக்கப்பட்ட சில படங்கள். நன்றி FaceBook - Usan RMV OldStudents


Wednesday, November 23, 2016

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா
நிர்வாகசபை மறுசீரமைப்பு

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் நிர்வாகசபை கடந்த சனிக்கிழமை, November 19 ஆம் திகதி கூடியது. அப்போது நிர்வாகசபை மறுசீரமைப்புக் குறித்துக் கலந்துரையாடப்பட்டது. கடந்த ஆறு வருடங்களாகத் தலைமைப் பதவியில் இருந்து சிறப்பான நிர்வாகத்தை நடத்திய தலைவர் கனகசபை நகுலன் அவர்கள், தான் தொடர்ந்தும் தலைவராக இருப்பது சரியானதல்ல என்றும், புதியவர்களுக்கு இடம் கொடுப்பதன் மூலம் ஒன்றியம் புதிய, உத்வேகத்தோடு வீறுநடை போட முடியும் என்றும் கூறி தலைமைப் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்வதாகக் கூறினார். பலத்த வாதப் பிரதிவாதங்களுக்குப் பின் அவரின் இந்த முடிவை நிர்வாகசபை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டது.

தலைவர்: சுப்பிரமணியம் பாஸ்கரன்
பிரேரித்தவர்: கனகசபை நகுலன்
வழிமொழிந்தவர்: சிதம்பரப்பிள்ளை வரதகுமார்

உபதலைவர்: நவரட்ணம் சிவகுமார்
பிரேரித்தவர்: சுப்பிரமணியம் பாஸ்கரன்
வழிமொழிந்தவர்: கனகசுந்தரம் அச்சுதன்

செயலாளர்:பிரியலதா சற்குணநாதன்
பிரேரித்தவர்: சரவணமுத்து பத்மகாந்தன்
வழிமொழிந்தவர்: சிதம்பரப்பிள்ளை தயாபரன்

உபசெயலாளர்: சாந்தினி சிவானந்தம்
பிரேரித்தவர்: கனகசபை நகுலன்
வழிமொழிந்தவர்: கனகசுந்தரம் அச்சுதன்

பொருளாளர்: கனகசுந்தரம் அச்சுதன்
பிரேரித்தவர்: சின்னத்துரை கருணாகரன் (கண்ணன்)
வழிமொழிந்தவர்: நவரட்ணம் சிவகுமார்

உபபொருளாளர்: கனகசபை நகுலன்
பிரேரித்தவர்: சிதம்பரப்பிள்ளை தயாபரன்
வழிமொழிந்தவர்: சரவணமுத்து பத்மகாந்தன்

பின்வருவோர் நிர்வாகசபை உறுப்பினர்களாகக் கடமையாற்றுவார்கள்:
சின்னத்துரை கருணாகரன்
சிதம்பரப்பிள்ளை வரதகுமார்
ஒப்பிலாமணி விஜயரூபன்
இராஜரட்ணம் உமாபதி
வெற்றிவேலு அஜந்தன்

பத்மகாந்தன் மற்றும் தயாபரன் இருவரும் தங்களின் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக உறுதி அளித்தனர்.

அடுத்த மூன்று வருடங்களுக்கு இந்தப் புதிய நிர்வாகசபை நல்ல முறையில் இயங்க உசன் மக்களின் ஆதரவை ஒன்றியம் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றது.

சுப்பிரமணியம் பாஸ்கரன்
தலைவர்
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Tuesday, November 22, 2016

உசன் உறவுகள் 2016

அன்பார்ந்த உசன் மக்களே!

நீங்கள் உங்கள் உறவுகளையும், நட்புக்களையும் சந்தித்து மகிழும் நேரம் அண்மித்துக்கொண்டிருக்கிறது. உழைத்துக் களைத்த உள்ளங்களுக்கு உற்சாகம் கொடுக்கும் ஓர் இரவு நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆடல், பாடல், அறுசுவை உணவோடு சிரித்திருக்கும் நேரம் அதிக தூரத்தில் இல்லை.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வருடந்தோறும் உசன் மக்களை ஒன்றுகூட்டி நடாத்தும் "உசன் உறவுகள்" நிகழ்வு 2017 ஆம் ஆண்டு January மாதம் 21 ஆம் திகதி, சனிக்கிழமை நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு அறியத் தருகிறோம். Middlefield Road மற்றும் McNicoll Avenue சந்திக்கு அருகாமையில் 3300 McNicoll Avenue எனும் முகவரியில் அமைந்திருக்கும் Baba Banquet Hall இல் இந்நிகழ்வு இடம்பெறும்.

நீங்கள் இதுவரை கண்டிராத வகையில் புதிதாக வடிவமைக்கப்பட்டு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. அனைத்து வயதினரும் மகிழ்ந்திருக்கும் வண்ணம் நிகழ்ச்சிகள் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளன. இந்த நிகழ்வில் உங்கள் திறமைகளையும் வெளிப்படுத்த ஒன்றியத்தின் செயலாளரோடு தொடர்பு கொள்ளுங்கள்.

பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதால் சரியாக மாலை 6 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்.

எம் மத்தியில் இருக்கும் தொழில் அதிபர்களே, உங்கள் தொழிலை எம் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் அனுசரணை இந்த நிகழ்வை மேலும் சிறப்பாக்கும். உங்கள் பங்களிப்பை வழங்க ஒன்றியத்தின் செயலாளரோடு தொடர்பு கொள்ளுங்கள்.

வெளிநாடு வாழ் உசன் மக்களே கனடாவின் குளிரை அனுபவிப்பதோடு, உங்கள் உறவுகள் அனைவரையும் ஒன்றுசேரச் சந்திப்பதற்கு இந்த நிகழ்வைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

மறந்துவிடாமல் January 21ஆம் திகதியைக் குறித்துவைத்து, தவறாமல் "உசன் உறவுகள் 2016" நிகழ்வில் கலந்து மகிழுமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறது.


Sunday, November 6, 2016

உங்களின் சேவையில் அஜு.

உங்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான அஜந்தன் வெற்றிவேலு அவர்கள் வீடு விற்பனைத் துறையில் கால் பதித்துள்ளார். Home Life Today Reality Ltd. Brokerage உடன் இணைந்து அவர் இந்தச் சேவையை வழங்க ஆரம்பித்துள்ளார்.

ஏன் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு, "இங்குள்ள அனைவரும் வாழ்வதற்கும், முதலீடு செய்வதற்கும் Real Estate சேவைகளைப் பெற்றுக்கொண்டே இருக்கப்போகிறார்கள். எனவே இந்தத் துறை எப்போதும் கைகொடுக்கும்" என்றார். ஏற்கனவே எமது சமூகத்தைச் சேர்ந்த பலர் இந்தத் துறையில் ஈடுபட்டடுக்கொண்டிருக்கும்போது உங்களை ஏன் அணுகவேண்டும் என்ற மற்றுமொரு கேள்விக்கு, "என்னை அணுகுவதன் மூலம் தேவையான, சரியான தகவல்களைப் பெற்றுக்கொண்டு முடிவுகளை எடுக்க முடியும். அத்தோடு அதி உயர் சேவையையும் பெற்றுக்கொள்ளமுடியும்" என்றார்.

நீங்களும் உங்கள் வீட்டை விற்கவோ அல்லது இன்னுமொரு வீட்டை வாங்கவோ உங்கள் நம்பிக்கைக்குரிய அஜந்தன் வெற்றிவேலுவை அணுகிப் பயன் பெறலாம். அஜுவோடு 416-427-6000 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளுங்கள்.

அஜந்தன் வெற்றிவேலு இந்தத் துறையில் கொடி கட்டிப் பறக்க உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்துகிறது.


Monday, October 31, 2016

பரத நாட்டிய அரங்கேற்றம்

பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரதகலா வித்தகர் ஸ்ரீமதி சியாமா தயாளன் அவர்களின் மாணவி செல்வி ஹரிணி சிவசுப்பிரமணியம் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றத்தில் கலந்து சிறப்பிக்குமாறு சியாமா தயாளன் அவர்கள் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றிய உறுப்பினர்களையும், உசன் மக்களையும், அயற்கிராம மக்களையும் அன்போடு அழைக்கிறார்.

திகதி: சனிக்கிழமை, November 5, 2016
இடம்: Armenian Youth Center,
50 Hallcrown Place, Toronto, ON M2J 1P6

நேரம்: மாலை 5 மணி (5 மணி முதல் 5:45 வரை வரவேற்பு. சரியாக 5:45 மணிக்கு ஆசனங்களில் அமருமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்)

செல்வி ஹரிணியின் பரத நாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடைபெறவும், அவர் கலைத் துறையில் மேலும் சிறந்து விளங்கவும், ஸ்ரீமதி சியாமா தயாளன் அவர்களின் கலைப் பணி தொடரவும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.


Thursday, October 13, 2016

திரு பெரியதம்பி சிவபாதசுந்தரம்
(சிவம்- பொலிஸ்)

யாழ். மிருசுவில், உசனைப் பிறப்பிடமாகவும், வதிரியை வசிப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வதிவிடமாகவும் கொண்ட பெரியதம்பி சிவபாதசுந்தரம் அவர்கள் 12-10-12016 புதன்கிழமை அன்று ஜெர்மனியில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பெரியதம்பி, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தங்கமணி அவர்களின் அன்புக் கணவரும்,

மணிமேகலா(மதி- கனடா), சிவரூபி(சுவிஸ்), முரளீதரன்(ஜெர்மனி), கெளரி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

துஷ்யந்தன்(கனடா), செயந்தன்(சுவிஸ்), தபோதினி(ஜெர்மனி), பிரதீபன்(கண்ணன்- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மாளவிகா, வசீகரன், வர்சிகா, சர்விகா, கெளதம், அஜேய், ஆதித், நவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் திங்கட்கிழமை 17/10/2016 அன்று 10:00 மு.ப முதல் 01:00 பி.ப வரை Haus Des Abschieds Unterer Dorrenberg 11, 42105 Wuppertal, Germany என்ற முகவரியில் இறுதி மரியாதைக்காக வைக்கப்படும்.

இறுதி நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை 18/10/2016 அன்று 11:00 மு.ப முதல் 02:00 பி.ப வரை Am Unterbarmer Friedhof 16, 42285 Wuppertal, Germany என்ற முகவரியில் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
முரளீதரன்(மகன்) — ஜெர்மனி
தொலைபேசி: +492024938117
செல்லிடப்பேசி:+4917656389905

நன்றி: www.kallarai.com


Wednesday, October 12, 2016

திரு.பெரியதம்பி சிவபாதசுந்தரம் (பொலிஸ் சிவம் )அவர்கள் காலமானார்....

உசனை சேர்ந்த திரு.பெரியதம்பி சிவபாதசுந்தரம் (பொலிஸ் சிவம் )அவர்கள்
ஜெர்மனியில் காலமானார் . இவ் அறிவித்தலை அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம் .அன்னாரின் ஆத்ம சாந்தியடைய அனைத்துலக உசன் மக்கள் சார்பாக கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் தமது ஆழ்ந்த இரங்கலை தெரித்துக்கொள்கிறது
மேலதிக தகவல் பின்னர் அறியத்தரப்படும் .
தகவல்
மகள்
மதி (கனடா ) 416-292-2466




Wednesday, October 5, 2016

செல்வன் சிவகுமார் மயூரிகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

இம்முறை நடைபெற்ற புலமைபரீட்சை பரீட்சையில் 165 புள்ளிகள் பெற்று எமது பாடசாலை மாணவன் செல்வன் சிவகுமார் மயூரிகன் சித்தியடைந்துள்ளார். மேலும் பரீட்சைக்கு தோற்றிய 23 மாணவர்களில் 20 மாணவர்கள் சாதாரணசித்தியடைந்துள்ளனர். மயூரிகனுக்கும், ஏனைய மாணவர்களுக்கும் மற்றும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் அனைத்துலக உசன் மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம் ,




Saturday, September 17, 2016

பரத நாட்டிய அரங்கேற்றம்

பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரதகலா வித்தகர் ஸ்ரீமதி சியாமா தயாளன் அவர்களின் மாணவி செல்வி சுருதி ஜனகன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம். இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு சியாமா தயாளன் அவர்கள் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றிய உறுப்பினர்களையும், உசன் மக்களையும், அயற்கிராம மக்களையும் அன்போடு அழைக்கிறார்.

திகதி: சனிக்கிழமை, September 24, 2016
இடம்: J. Clarke Richardson Collegiate Auditorium
1355 Harwood Avenue, Ajax, ON L1T 4G8

நேரம்: மாலை 5 மணி (5 மணி முதல் 5:45 வரை வரவேற்பு. சரியாக 5:45 மணிக்கு ஆசனங்களில் அமருமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்)

செல்வி சுருதியின் பரத நாட்டிய அரங்கேற்றம் சிறப்பாக நடைபெறவும், அவர் கலைத் துறையில் மேலும் சிறந்து விளங்கவும், ஸ்ரீமதி சியாமா தயாளன் அவர்களின் கலைப் பணி தொடரவும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.


Friday, September 2, 2016

திருமதி சின்னத்தங்கம் சரவணமுத்து

உசனைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்டு அமெரிக்காவில் வசித்துவந்த சமூக சேவகி திருமதி சின்னத்தங்கம் சரவணமுத்து அவர்கள் August 28, 2016, காலை 9:20 மணிக்கு தனது 84 வது பிறந்த தினத்தில் அமெரிக்காவில் இறைவனடி சேர்ந்துவிட்டார்.

இவர் உசன் தம்பியையா சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மகளும்,
விடத்தற்பளை சின்னத்தம்பி வாலைப்பிள்ளை தம்பதியரின் அன்பான மருமகளும்,
அமரத்துவமடைந்துவிட்ட உசன் பண்டிதர் சரவணமுத்து (முன்னாள் உப அதிபர், உசன் இராமநாதன் மகா வித்தியாலயம், முன்னாள் அதிபர் விடத்தற்பளை கமலாசனி வித்தியாலயம்) அவர்களின் பாசமிகு மனைவியாரும்,
சரோஜினிதேவி (கனடா), கணேசானந்தம் (லண்டன்), சுசீலாதேவி (அமெரிக்கா) ஆகியோரின் பாசமுள்ள தாயாரும்,
இராமநாதர் (கனடா), தமயந்தி (லண்டன்), சுகுணேஸ்வரன் (அமெரிக்கா) ஆகியோரின் பரிவான மாமியாரும்,
காலம்சென்றவர்களான பண்டிதர் சுப்பிரமணியம் வெற்றிவேலு,செல்லாச்சிபிள்ளை ,ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ,

சஞ்ஜீவ், ராஜீவ், ஜிகான், டிலான், ஆர்த்தி, அர்விந்த் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

கஜாளினி, அனுப்பிரியா ஆகியோரின் அருமைப் பாட்டியும்,

மிராயா, அஞ்சலி ஆகியோரின் பிரியமான பூட்டியுமாவார்.

அன்னாரின் பூதவுடல் 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Chapel Ridge Funeral Home & Cremation Centre இல் வெள்ளிக்கிழமை, September 2, 2016 அன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வவரையும், பின்னர் சனிக்கிழமை, September 3, 2016 அன்று காலை 9 மணிமுதல் 10:30 மணி வரையும் இறுதி மரியாதைக்காக வைக்கப்படும். இறுதிக் கிரியைகள் அதே தினம் காலை 10:30 மணி முதல் 12:30 மணி வரை அதே முகவரியில் இடம்பெறும். பின்னர் மதியம் 12:30 மணிக்கு பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு 12492 Woodbine Avenue, Gormley, ON L0H 1G0, Canada என்ற முகவரியில் அமைந்திருக்கும் Highland Crematorium இல் தகனம் செய்யப்படும்.

உற்றார், உறவினர், ஊர்மக்கள், நண்பர்கள் அனைவரும் இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்:
சரோஜினி இராமநாதர்

தொடர்புகளுக்கு:
சரோஜினி இராமநாதர்: +1-416-299-6763
கணேசானந்தம்: +44-1792895142
சுசீலாதேவி: +1-614-570-9727
சஞ்ஜீவ்: +1-416-562-0207
ராஜீவ்: +1-647-627-6773


Sunday, August 28, 2016

துயர் பகிர்வு

திருமதி சின்னத்தங்கம் சரவணமுத்து (பண்டிதர் அம்மா) அவர்கள் இன்று, August 28, 2016, காலை 9:20 மணிக்கு இறைவனடி சேர்ந்துவிட்டார் என்ற துயரச் செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம். சரியாக 84 ஆவது வயதில் தனது பிறந்த தினத்திலேயே அவர் இவ்வுலகைவிட்டுப் பிரிந்திருக்கிறார்.

அன்னாரது இறுதிக் கிரியைகள் கனடாவில் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபரம் பின்னர் அறியத் தரப்படும்.

அன்னாரின் பிரிவால் துயரில் ஆழ்ந்து போயிருக்கும் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் ஆகியோருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்ளும் அதே வேளை பண்டிதர் அம்மாவின் ஆன்மா சாந்தியடைய உசன் முருகனைப் பிரார்த்திக்கிறது.


Wednesday, August 24, 2016

உசன் பாடசாலை பழைய மாணவனுக்கு கண்ணீர் அஞ்சலி ....

விடத்தற்பளையைப் பிறப்பிடமாகவும் உசனில் வாழ்ந்து வந்தவரும் உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவனுமான திரு,கதீஸ்வன் ஜெயராஜா அவர்கள் , லண்டனில் அகாலமரணமானார் , அன்னார் வைதேகியின்  பாசமிகு கணவரும், ஓவிகா, டெனிசன் ஆகியோரின் பரிவான தந்தையும், ஜெயராஜா -சற்குணேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும், தர்மலிங்கம் – பாமினி தம்பதியினரின் அன்பு மருமகனும் ஆவார்.
அத்துடன் ஜெயசாந்தி, தர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும், கஜேந்திரன் வைஷ்ணவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அனைத்துலக உசன் சார்பாக கனடா உசன் ஐக்கிய மக்கள்  ஒன்றியம்-கனடா சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிப்பதோடு கதீஸ்வரன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய உசன் முருகனை பிரார்த்திக்கின்றோம்.உசன் இராமநாதன் மகா வித்தியாலய மாணவர்கள் /பழைய மாணவர்கள் சார்பாக எமது ஆழ்ந்த அஞ்சலிகள்

தொடர்புகளுக்கு:- லண்டன்:- 442035565370; 447404889510; 447948618039
ஜெயராஜா,இலங்கை;- 94774350181
தர்சினி; பிரான்ஸ்:- 33649786663.


Wednesday, August 10, 2016

கனடா வாழ் விடத்தற்பளை மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு!!!

எதிர்வரும் ஆவணி மாதம் 14 ஆம் திகதி 2016, ஞாயிற்றுக்கிழமை, காலை 10.30 மணியில் இருந்து மாலை 7 மணிவரை, L'Amoreaux Sports Complex- Area A & Shelter 80 ( 100, Silver Springs Blvd , Toronto, Ontario, M1V 1S4) இல் விடத்தற்பளை மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற இருக்கின்றது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். அதற்கு விடத்தற்பளை மக்கள், விடத்தற்பளைக் கமலாசனி வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள், மற்றும் விடத்தற்பளையின் அயல் கிராம உறவினர்கள், நண்பர்கள், விடத்தற்பளை நலன் விரும்பிகள் அனைவரையும் வருகை தந்து நிகழ்வினைச் சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம்!!!

தகவல்:
விடத்தற்பளை மக்கள் ஒன்றியம்- கனடா

இந்த நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.


Friday, July 29, 2016

திருமதி சரஸ்வதி சோமசுந்தரம் (இந்துக்கல்லூரி முன்னாள் ஆசிரியர்- சாவகச்சேரி)

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சரஸ்வதி சோமசுந்தரம் அவர்கள் 28-07-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தில்லை நடேசபிள்ளை(முன்னாள் ஆசிரியர்- கொடிகாமம்), அன்னம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும், காலஞ்சென்ற நடராசா(ஆசிரியர்- மீசாலை), வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சோமசுந்தரம் அவர்களின் அன்பு மிகு மனைவியும்,

ஸ்ரீமுருகன், ஸ்ரீகாந்தன் (முன்னாள் விஞ்ஞான ஆசிரியர், உசன் இராமநாதன் மகா வித்தியாலயம்), வேலும்மயிலும், சாந்தினி, ஸ்ரீகதிர்காமநாதன், நளாயினி ஆகியோரின் அருமைத் தாயாரும்,

சிவகுருநாதன், வல்லிபுரநாதன், நரேந்திரன், நல்லைநாதன், அண்ணாமலை, செல்வராணி, சற்குணம், விமலா, அருள்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பரமேஸ்வரி, கலாநிதி, நந்தினி, ஸ்ரீகணேசன், ரஞ்சனி, ஞானச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பரமானந்தம், குலசேகரம், வைத்தியநாதன் ஆகியோரின் பாசமுள்ள மைத்துனியும்,

பிரகாஸ், தர்சினி, செமிலா, பிரமிளா, சர்மிளா, றசிகலா, ஸ்ரீகரன், செந்தூரன், சிந்துயா, நர்மதன், மிதுன், துளசி, அபிரா, காயத்திரி, கிரிசாந், அனோச் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஹரிஸ்மன், அஜிஸ்மன், ஹரிஸ், சிறிராம், சரவணன், சாதனா, தூரிகன், கவிநிலா, ஆரன், நிரான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை, 30/07/2016 அன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada என்ற முகவரியில் இறுதி மரியாதைக்காக வைக்கப்படும்.

இறுதிக் கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை, 31/07/2016 முற்பகல் 10 மணி முதல் மதியம் 12 மணி வரை St John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada என்ற முகவரியில் இடம்பெற்று அதே முகவரியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சோமசுந்தரம்(கணவர்) — கனடா
செல்லிடப்பேசி: +19056968645

ஸ்ரீகாந்தன் — கனடா
தொலைபேசி: +16474498124

ஸ்ரீகாந்தன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94777491639

ஸ்ரீகதிர்காமநாதன் — கனடா
தொலைபேசி: +16473412030


Monday, July 18, 2016

உசனில் ஜூலை மாத "முழுநிலா கருத்தரங்கு"

உசன் கிராம அபிவிருத்தி சங்கம் மாதாந்தம் நடாத்தும் முழுநிலா கருத்தரங்கின் ஜூலை மாத கருத்தரங்கு எதிர்வரும் 19 ம் திகதி நடைபெறவுள்ளது .
இலங்கை மக்கள் ஆகிய நாங்கள் பல்வேறு வகையான சட்ட்ங்களால் ஆளப்பட்டு வருகின்றோம். அவற்றுள் தேசவழமை சடடமும் முக்கியமானதாகும் தேசவழமை என்பது யாழ்ப்பாணத்து தமிழர்களுக்கு ஏற்புடைய ஒரு வழமைச் சடடமாகும் டச்சு காரர் இலங்கையை ஆண்டுகொண்டு இருந்தபோது 1704 ம் ஆண்டிலேயே யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ் மக்களின் வழக்காறுகள் பற்றி விசாரணை செய்து அவற்றை தொகுக்கும்படி டச்சுகவர்னர் சைமன் அவர்கள் யாழ்ப்பாண பட்டினத்தில் திசாவையாக இருந்த கிளாஸ் ஐசக்ஸ் என்பவரை பணித்திருந்தார் அவரால் தொகுக்கப்படட இந்த ஆவணம் 1708 ம் ஆண்டு மொழிபெயர்க்கப்பட அதை 12 யாழ்ப்பாண முதலியார்மார் ஒப்புக்கொள்ள கவர்னரால் சடடமாக்கப்பட்ட்து. 1814 ம் ஆண்டில் பிரதம நீதியரசராக சேர் அலெக்சாண்டர் ஜோன்சன் அவர்கள் தேசவளமையை ஆங்கில த்திட்கு மொழி பெயர்த்தார் அக்காலத்திலிருந்து தேசவழமை சடடம் சடடநூலில் இருந்து வருகின்றது. 
இன்றைய காலகடடத்தில் பல பிணக்குகளை இணக்க வழி நகர்த்த நாமும் சிலவற்றையாவது அறிவோம் நாளை ...........
விசேடமாக தங்களது பெறுமதி மிக்க கேள்விகளுக்கு தெளிவான பதில்களும் ஆலோசனைகளும் வழங்கப்படும் அனைவரும் தவறாது அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பலனடைய அன்போடு அழைக்கின்றோம்.
19.07.2016 உசன் இராமநாதன் மகா வித்தியாலய பிரதான மண்டபம்# மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ள கருத்தரங்கில் அனைத்து மக்களையும் கலந்து பயன்பெறுமாறு வேண்டுகிறோம் . நிகழ்வை தொடர்ந்து முன்னெடுக்கும் கிராமங் அபிவிருத்தி சங்கம் மற்றும் உசன் ஸ்ரீமுருகன் விளையாட்டுக்கழக உறுப்பினர்களுக்கு கனடா உசன் ஒன்றியம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது .. 



Wednesday, June 22, 2016

Congratulations Kande!

Congratulation Balendran Kandeban for being selected to the Grand Jury Members for New York Festivals International Radio Program Awards for the 5th. consecutive year.

NYF International Radio Program Awards is a World renowned Awards ceremony which is judged online by award winning Directors, Producers, Writers, Reporters, Creative Directors, Program Directors, and various other radio industry experts from across the globe who volunteer their time.

Balendran Kandeban is the Director, Business Development, MBC Radio Networks, The Capital Maharaja Organisation Ltd SRI LANKA.

With over 15 years of experience in Electronic Media Business in Sri Lanka and India, having completed his MBA at Victoria University in Australia, Kandee was the former Director, Sales & Marketing at Sri Lanka’s most powerful news provider – News 1st, Channel Head of Shakthi FM, No.1 Tamil Radio Station in Sri Lanka with an audience that spans the world, and currently the Director, Business Development of MBC Radio Networks, the leading Sri Lankan broadcasting company which owns five national radio stations (Sirasa FM, Shakthi FM, Yes FM, Y FM & Legends). A renowned media personality and the host of Sri Lanka’s version of ‘Who Wants to be a Millionaire’ where he has hosted over 250 shows, also hosting a popular Socio-Political Saturday Radio Breakfast Show “The People’s Power”.

In 2015, he was recognized by the Australian Government as one of the “Most inspiring young global leaders of Australia” and was a recipient of “Young Achiever Award” of Victoria University, Australia and 2014 Australian Alumni Excellence Merit Award for Business Administration and Leadership, awarded by the Australian Trade Commission. He is also a visiting lecturer and course advisory board member of Victoria University, Australia.

As we represent the Usan community in Canada we are very proud of you. Once again our heartiest congratulations Kande for your achievement.

United People Association of Usan in Canada.

(Source of information: www.newyorkfestivals.com)


Monday, June 20, 2016

உசனில் முழு நிலா நாள் கருத்தமர்வு


நோய் வந்த பின் மருந்துக்காக அலைவதைவிட அந்த நோய் வராது தடுத்தல் தான் மிகவும் சிறந்த மருத்துவ முறையாகும்###
மனித சமுதாயத்தின் தோற்றத்துடன் தான் மனிதனை தாக்கும் நோய்களும் தோன்றியிருக்க வேண்டும். இயற்கையின் அற்புதங்க்களை அவதானித்து அவற்றின் உண்மைகளை தெளிந்து கொண்ட மனிதன் மனித சமுதாயத்தை தாக்கும் நோய் நொடிகளில் இருந்து தன்னை பாதுகாக்கும் வழிமுறைகளையும் தேடினான். இன்று அறிவியல் துறையும் மருத்துவத் துறையும் எவ்வளவோ தூரம் முன்னேறியுள்ளன எனினும் நவீன தொழில் நுட்ப வளர்ச்சியும் அறிவியல் அடைவுகளும் புதிய பல நோய்களை தோற்றுவித்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. இப்புதிய நோய்களில் பல எமது கவலையீனத்தால் விளைகின்றன இதில் இருந்து எம்மை பாதுகாக்க நாம் எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் போதிய தடுப்பு முறைகளும் வலியுறுத்தப்பட வேண்டியது இன்றைய சூழலில் மிகவும் அவசியமாகின்றது.
இம்மாத முழு நிலாவில் இணைவோம் எம் சுயத்திற்காய்..........
அனைவரையும் அன்பு பாராட்டி ஆரோக்கிய வாழ்விற்காய் அழைக்கின்றோம்.
# 19.06.2016 # ஞாயிற்றுக்கிழமை # மாலை 4.00 மணி # உசன் இராமநாதன் மகா வித்தியாலயம் #


Sunday, June 19, 2016

நிர்வாகசபை தெரிவு / Election of New Committee

அன்பார்ந்த உசன் மக்களே!

நிகழ்வு: உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா நடாத்தும் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும், பொதுச் சபைக் கூட்டமும், புதிய நிர்வாகசபைத் தெரிவும்.

திகதி: June 26, 2016 ஞாயிற்றுக் கிழமை

இடம்: Milliken Park (Picnic Area B, with shelter). வழமையான இடத்தில் அல்லாமல் புதிய இடத்தில் நிகழ்வு நடைபெறுவதைக் கவனிக்கவும். McCowan Road மற்றும் Midlefiled Road இரண்டுக்கும் இடையே Steeles Avenue East ல் McCowan Road இற்கு அண்மையில் நுழைவாயில் உள்ளது.

நடப்பு நிர்வாகசபையின் பதவிக் காலம் நிறைவடைவதால் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட வேண்டியுள்ளது. நேரகாலத்துக்கு வந்து நிர்வாகசபைக்குப் புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்து ஒன்றியம் மேலும் சிறப்பாக இயங்க உங்கள் பங்களிப்பை வழங்குமாறு அன்போடு வேண்டி நிற்கிறோம்.

குழை சாதம் சமைப்பதற்கும், BBQ chicken ஐ பக்குவமாக grill செய்வதற்கும் உதவியாளர்கள் தேவைப்படுகிறார்கள். மனமுள்ளவர்கள் உடனடியாக ஒன்றியத்தின் செயலாளர் பாஸ்கரனோடு தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள்.

நன்றி, நிர்வாகசபை
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா



Dear Usan People,

The committee of United People Association of Usan in Canada cordially invites you for the Summer Get Together of 2016.

Event: Annual Summer Get Together, General Meeting and Election of New Committee

Date: Sunday, June 26, 2016.

Location: Milliken Park, Picnic Area B with Shelter. (Please note the change of location from the usual location.) The entrance is closer to McCowan Road on Steeles Avenue East between McCowan Road and Middlefield Road.

As the life time of the current committee expires, a new committee will be elected. Please show up early to participate in the election of the new committee. New faces will bring new ideas. We request to elect new members to the committee for the betterment of the organisation.

We are looking for volunteers for grilling the BBQ and to cook the vegetable rice. Please contact the Secretary, Baskaran, as soon as possible to confirm your availability.

See you on the upcoming Sunday.

Thank you.

Committee
United People Association of Usan in Canada.


Sunday, June 5, 2016

விடத்தற்பளையில் இலவச கணனி கற்கை நெறி ஆரம்பம்



விடத்தற்பளை மக்கள் ஒன்றியம்- கனடா மக்களின் ஆதரவுடன் விடத்தற்பளை மாணவர்களுக்கான இலவச கணனி கற்கை நெறி 07-06-2016 செவ்வாய் கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு விடத்தற்பளை மற்றும்சுற்று கிராமமக்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் .
தொடங்க இருக்கும் இந்த சேவையில் அனைத்து மாணவர்களும் பயன்பெற்று
சிறப்பாக வளர கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் வாழ்த்துகிறது ,
இந்த செயல் திட்டத்திற்கு உதவி புரிந்த அனைத்து மக்களுக்கும் பாராட்டுக்கள்



Monday, May 30, 2016

கனடாவாழ் உசன் மக்களின் கோடைகால ஒன்றுகூடலும், புதிய நிர்வாகசபை தெரிவும் -2016


கனடா வாழ் உசன் மக்களை ஒன்று சேர்க்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா நடாத்தும் வருடாந்த  கோடை கால ஒன்றுகூடலும், வருடாந்தப் பொதுக் கூட்டமும் ஜூன்  மாதம் 26ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ளது.

வழமைக்கு மாறாக இந்தவருடம் Scarborough, Canada வில் McCowan  Road  மற்றும் Steeles Avenue  சந்திக்கு அருகாமையில் அமைந்திருக்கும் Milliken Park , Picnic Area-B   இல் இந்த நிகழ்வு இடம்பெறும்.

நடைமுறையில் இருக்கும் நிர்வாகசபையின் பதவிகாலம் நிறைவு பெறுவதால் புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்படவுள்ளது.

இந்தப் பொதுகூட்டத்தில் கனடா வாழ் உசன் மக்களையும் உசன் இராமநாதன் மஹா வித்தியாலய பழைய மாணவர்களையும் கலந்து புதிய நிர்வாக சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வேண்டுகிறோம்.

அனைத்து வயதினருக்குமான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறும் இந்த நிகழ்வில் பல சுவை உணவு வகைகளும் பரிமாறப்படும். சிறப்பு கயிறுழுத்தல் போட்டி நடைபெறுவதுடன், வெற்றியாளர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படவுள்ளது

 இந்த நிகழ்வில் உங்களின் அன்புக்குரியவர்களின் நினைவாக கேடையங்கள் வழங்க விரும்புபவர்களும், நிகழ்வுக்கு அனுசரணை வழங்க விரும்பும் நிறுவனங்களும் ஒன்றியத்தின் செலயலாளரோடு secretary@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.

உங்கள் உள்ளங்களில் புத்துணர்வைக் கொண்டுவரும் இந்த வருடாந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு அழைக்கின்றது.

***** வழமைக்கு மாறாக இந்தவருடம் Scarborough, Canada வில் McCowan  Road  மற்றும் Steeles  சந்திக்கு அருகாமையில் அமைந்திருக்கும் Milliken Park , Picnic Area-B   இல் இந்த நிகழ்வு இடம்பெறும்.*****



Saturday, May 21, 2016

திரு சுவாமிநாதர் சிவபாதசுந்தரம்

யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், வரணி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுவாமிநாதர் சிவபாதசுந்தரம் அவர்கள் 17-05-2016 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதர் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சரஸ்வதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேந்திரன்(சுரேன், சுரேஷ்) அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான விநாசித்தம்பி, இராஜநாதன், புவனேஸ்வரி, மற்றும் தங்கராஜா(லண்டன்), மகேஸ்வரன்(கனடா), விமலேஸ்வரி(சாவகச்சேரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜேஸ்வரி(வசந்தா) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற கணேசலிங்கம்(முன்னாள் பொது முகாமையாளர்- பல நோக்கு கூட்டுறவு சங்கம், கொடிகாமம்) அவர்களின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை, May 21, 2016 அன்று மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada என்ற முகவரியில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும். கிரியைகள் அதே முகவரியில் ஞாயிற்றுக்கிழமை, May 22, 2016 அன்று காலை 8 மணி முதல் 11 மணி வரை நடைபெற்று, Highland Hills Memorial Gardens, 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada என்ற முகவரிக்கு பூதவுடல் தகனம் செய்யப்படுவதற்காக எடுத்துச் செல்லப்படும். காலை 11:45 மணிக்கு அன்னாரின் பூதவுடல் தீயுடன் சங்கமமாகும்.

அன்னாரின் ஆன்மா சாந்தியடைய உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கிறது.


Wednesday, May 18, 2016

திரு.சு.சிவபாதசுந்தரம் அவர்கள் காலமானார் .......


உசனை சேர்ந்த திரு.சுவாமிநாதர் சிவபாதசுந்தரம் அவர்கள் இன்று கனடாவில் காலமானார் , அன்னாரின் இறுதிகிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும் , இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு வேண்டுகிறோம் ,
அன்னாரின் ஆத்மசாந்தியடைய கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் பிராத்திக்கிறது .

தகவல்:
மகன் சிவா சுரேந்தர் -0016472616069


Friday, April 22, 2016

மரண அறிவித்தல் - தயாவதி நவகுமாரன்

சரசாலை தெற்கு, சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும் உசன் மற்றும் 17/45, பண்டாரிக்குளம் மேற்கு ஒழுங்கை நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட தயாவதி நவகுமாரன் 21.04.2016 வியாழக்கிழமையன்று காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற இந்துபோட் சு. இராஜரட்ணத்தின் பேத்தியும், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன் (முன்னாள் அதிபர், சாவகச்சேரி இந்துக் கல்லூரி), யோகாம்பாள் தம்பதியரின் கனிஷ்ட புத்திரியும், உசனைச் சேர்ந்த காலஞ்சென்ற நவரத்தினம் மற்றும் உமாமகேஸ்வரியின் அன்பு மருமகளும், நவகுமாரனின் (ஓய்வுநிலை வங்கி உத்தியோகத்தர், கொமர்சல் வங்கி, யாழ்ப்பாணம்) அன்பு மனைவியும், மாதங்கி (மூன்றாம் வருட மருத்துவபீட மாணவி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), கிருத்திகன் (சம்பத் வங்கி, ஊர்காவற்றுறை), தாரங்கி (தரம் 13 மாணவி, யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை), தனுரங்கி (தரம் 10 மாணவி, வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை) ஆகியோரின் அன்புத் தாயாரும், யசோதாவின் அன்புச் சகோதரியும் கிருஷ்ணமூர்த்தி, சரோஜினி, சாந்தினி, சிவகுமார், ரவிகுமார், றஜனி, நளாயினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 24.03.2016 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் சரசாலை தெற்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பிற்பகல் 3 மணியளவில் தகனக் கிரியைகளுக்காக வேம்பிராய் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தகவல்
சாந்தினி சிவானந்தன் (+1 905-554-2014)
ந.நவகுமாரன் (Rtd. Banker, Commercial Bank, Jaffna)

முகவரி
பருத்தித்துறை வீதி, சரஸ்வதி வித்தியாலயம் அருகில், சரசாலை தெற்கு, சாவகச்சேரி.