உசன் இராமநாதன் மஹா வித்தியாலயத்தில் இந்த வருடம் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீடசையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் முகமாக சிறப்பு பரிசில் வழங்கும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது , வருட இறுதி மதிப்பெண் அட்டை வழங்கும் நிகழ்வில் இந்த சிறப்பு கெளரவம் வழங்கப்பட்டது ,பாடாசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
உசன் பொது நூலக நிர்வாகசபை தலைவர் ,செயலாளர் கலந்து கொண்டு இந்த பரிசிலை வழங்கினர் , தொரடர்ந்து வரும் காலங்களில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெறும் மாணவர்களுக்கு , பெறுமதியான சிறப்பு பரில்களை வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்த கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம், நடவடிக்கைகளை ஒழுங்கமைத்துள்ளது .
பரீடசையில் சித்தியடைந்து பரிசினை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் ,