உலகெங்கும் வாழும் உசன் கந்தசுவாமி அடியார்களே!
தெய்வீகம் சுரக்கும் யாழ்ப்பாண தென்மராட்சி பிரதேசத்தின் உசன் புண்ணிய பதியில் அருளாட்சி நல்கும் ஸ்ரீ சுப்பிரமண்ய சுவாமி தேவஸ்தானத்தின் பாலஸ்தாபன நிகழ்வுகள் நடைபெற்று இப்போது ஆலய புனர்நிர்மாணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பயங்கர யுத்த சூழலிலும் உசன் கிராமத்துக்கும், மக்களுக்கும் பாதிப்புகளின்றிக் காப்பாற்றி, புலம் பெயர் தேசங்களிலும் உங்களைச் செல்வச் செழிப்போடு காத்தருளும் எம் பெருமான் முருகனுக்குத் தனிச் சிறப்பு மிகு இராஜகோபுரம் அமைக்கும் பணி நீண்ட காலமாகத் தடைப்பட்டு இருந்தது நீங்கள் யாவரும் அறிந்ததே. இப்பொழுது உசன் கிராமத்தில் தலை நிமிர்ந்து அருள்பாலிக்க எம்பெருமானின் அனுக்கிரகம் கைகூடி இராஜகோபுரம் அமைக்கும் திருப்பணி ஆரம்பமாகி நடைபெற்று வருவதுடன், ஆலய புனருத்தாரண வேலைகளும், புது பொலிவூட்ட வர்ண பூச்சு வேலைகளும்
நடைபெற்று வருகிறன. இந்தியாவிலிருந்து வரவளைக்கப்பட்ட தேர்ச்சி மிக்க ஆச்சாரியர்களால் திருப்பணி நடைபெற்று வருகின்றது.
உசன் முகனின் ஆசியுடன் வாழும் உங்களின் பங்களிப்பும் இந்த இராஜகோபுர பணியில் கலந்திட நீங்கள் விருப்பம் கொண்டால் தாராளாமாக இந்த திருப்பணியில் இணைந்து கொள்ள முடியும். உங்களின் கரங்களால் எந்த விதமான காணிக்கை செலுத்தினாலும் அது எம்பெருமானின் புனருத்தாரணப் பணிக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
மிக வேகமாக நடைபெற்று வரும் திருப்பணி பூர்த்தியடைந்து எதிர்வரும் பங்குனி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற ஆசி கூடியுள்ளது. முருகனின் இராஜகோபுரம் உயர்வது போன்று உங்கள் வாழ்க்கையும் உயர எம்பெருமான் ஆசி உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறோம்.
மேலதிக விபரங்கள் தேவைப்படின் ஆலய தர்மகர்த்தாவைத் தொடர்புகொள்ளவும்.
திரு.கு.விமலதாஸ் -0094773474767
Commercial Bank A/C# 8600930636
Chvakachcheri Branch
கனடாவில் இருந்து இத் திருப்பணியில் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்துடன் தொடர்பு கொள்ள முடியும். சேவைக் கட்டணமின்றி பணம் அனுப்ப ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு:
திருமதி சி.சாந்தினி -905-554-2014