அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, September 6, 2015

குமாரசாமி இரவீந்திரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

குமாரசாமி இரவீந்திரா அவர்கள் யா/ கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி அதிபராகப் பதவி உயர்வு பெற்றுக்கொண்டதற்காக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அவருக்குத் தனது வாழ்த்துக்ககளைத் தெரிவித்துக்கொள்கிறது.

உசன் முன்னாள் கிராமசேவகர் காலஞ்சென்ற கதிரித்தம்பி குமாரசாமி, உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் ஆசிரியை காலஞ்சென்ற திருமதி புவனேஸ்வரி குமாரசாமி ஆகியோரின் மகனான இவர் தனது ஆரம்பக் கல்வியை யா/ உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் கற்றார். தனது இரண்டாம் நிலைக் கல்வியை யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், யா/ பரியோவான் கல்லூரியிலும் மேற்கொண்ட இவர் யாழ் பல்கலைக் கழகத்தில் BSc பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

முதன் முதலில் யா/ பரியோவான் கல்லூரியில் உயர் தர வகுப்பு ஆசிரியராகத் தனது பணியை ஆரம்பித்த இவர் தொடர்ந்து யா/ மிருசுவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மற்றும் யா/ உசன் இராமநாதன் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கணித ஆசிரியராகப் பணி புரிந்தார். அதனைத் தொடர்ந்து யா/ சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் உயர் தர வகுப்பு மாணவர்களுக்கு கல்வியறிவூட்டிய இவர் யா/ சாவகச்சேரி அமிர்தாம்பிகை வித்தியாலய அதிபராகப் பதவி உயர்வு பெற்றுப் பெருமை சேர்த்துக்கொண்டார்.

தற்போது யா/ கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி அதிபராக மிகக் குறுகிய காலத்தில் பதவி உயர்வைப் பெற்றுக் கொண்டது இவரது நிர்வாகத் திறனையும், கடமை உணர்வையும் தெளிவாகக் காட்டுகின்றது.