அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, September 25, 2015

செல்வன்:கஜன் சுதோகுமார்(பாபு) அவர்களுக்கு வாழ்த்துக்கள்

உசனை சேர்ந்த வைத்தியர்  திரு,திருமதி .சுதோகுமார்(பாபு) சாந்தாமணிதேவிதம்பதிகளின் புதல்வன் செல்வன்,கஜன் அவர்கள் Electronic and Telecommunication Engineering துறையில் சிறப்பு தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றுள்ளார் ,இலங்கை Moratuwa பல்கலை கழகத்திலும் ,பின்னர் சிங்கப்பூர் 
தேசிய பல்கலை கழகத்தில் சிறப்பு பயிற்சி பெற்றதுடன் , ஜப்பானிலும் தேர்ச்சி பயிட்சிகளை பெற்று . முதல் தர பெறுபேற்றை பெற்று சாதனை படைத்துள்ளார், 
செல்வன் ,கஜன் அவர்கள் சிறு வயதிலிருந்தே சிறந்த பேறுபெற்ற பெற்றுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,
G.C.E O/L பரீட்சையில் 10 A பெறுபேற்றையும் ,G.C.E A/L பரீட்சையில் 3A பெறுபேற்றையும் பெற்றுள்ளார் .
செல்வன் .கஜன் அவர்கள் இன்னும் சாதனை படைக்க உசன் மக்கள் சார்பாக எமது வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம் .
செல்வன்.கஜன் அவர்களின் திறமை எமது உசன் கிராமத்துக்கும் கிடைக்கவும் 
அவரின் வெற்றிக்கு காரணமாய் அமைந்த பெற்றோருக்கும் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறது. 


Sunday, September 20, 2015

கனடாவில் உசன் மக்களின் "பூபந்து பயிற்சி வகுப்பு ஆரம்பம் "

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின்  "Usan Sports Club" ஒழுங்கமைக்கப்பட்ட முறையிலான பூப்பந்து (Badminton) எதிர்வரும் செவ்வாய்கிழமை (September 22 ம் திகதி ). கடந்த வருடம் நடைபெற்ற அதே இடத்தில்  Markham Road மற்றும் Elson Street சந்திக்கருகில் 18 Coxworth Ave, Markham என்ற முகவரியில் உள்ள Parkland Public School ல் ஆரம்பமாகவுள்ளது  பயற்சியில் சிறுவர்கள், பெரியோர்கள், இளையவர்கள் என பலரும் குடும்பமாகவும் கலந்துகொள்ளமுடயும் . அனுமதி பெற்ற பயிற்சியாளர்கள் சிறந்த முறையில் உடல் பயிற்சியுடன், பூபந்து பயிற்சியும் வழங்கவுள்ளனர் .
கடந்த வருடம் தொடங்கிய இந்த பயற்சியில் கலந்த வீரர்கள் குறுகிய காலத்திலேயே கனடாவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும் , உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் மிக குறைந்த கட்டணத்துடன் உசன் மக்களுக்கு வழங்கும் சேவையாக இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் இன்னும் 15 இடங்கள் உள்ளன. எதிர்வரும் வாரத்துக்கிடையில் உசன் மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறினால் ஏனையவர்களும் இந்தப் பயிற்சியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். எனவே நீங்களும் இந்த சந்தர்ப்பத்தை உடனடியாகப் பயன்படுத்திக் கொள்ளவும் .

தொடர்புகளுக்கு :
உமாபதி -647-869-2441
சிவா -416-908-6919
அஜந் -416-833-2120





Sunday, September 6, 2015

குமாரசாமி இரவீந்திரா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

குமாரசாமி இரவீந்திரா அவர்கள் யா/ கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி அதிபராகப் பதவி உயர்வு பெற்றுக்கொண்டதற்காக உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அவருக்குத் தனது வாழ்த்துக்ககளைத் தெரிவித்துக்கொள்கிறது.

உசன் முன்னாள் கிராமசேவகர் காலஞ்சென்ற கதிரித்தம்பி குமாரசாமி, உசன் இராமநாதன் மகா வித்தியாலய முன்னாள் ஆசிரியை காலஞ்சென்ற திருமதி புவனேஸ்வரி குமாரசாமி ஆகியோரின் மகனான இவர் தனது ஆரம்பக் கல்வியை யா/ உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் கற்றார். தனது இரண்டாம் நிலைக் கல்வியை யா/ சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும், யா/ பரியோவான் கல்லூரியிலும் மேற்கொண்ட இவர் யாழ் பல்கலைக் கழகத்தில் BSc பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.

முதன் முதலில் யா/ பரியோவான் கல்லூரியில் உயர் தர வகுப்பு ஆசிரியராகத் தனது பணியை ஆரம்பித்த இவர் தொடர்ந்து யா/ மிருசுவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மற்றும் யா/ உசன் இராமநாதன் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் கணித ஆசிரியராகப் பணி புரிந்தார். அதனைத் தொடர்ந்து யா/ சாவகச்சேரி டிறிபேர்க் கல்லூரியில் உயர் தர வகுப்பு மாணவர்களுக்கு கல்வியறிவூட்டிய இவர் யா/ சாவகச்சேரி அமிர்தாம்பிகை வித்தியாலய அதிபராகப் பதவி உயர்வு பெற்றுப் பெருமை சேர்த்துக்கொண்டார்.

தற்போது யா/ கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி அதிபராக மிகக் குறுகிய காலத்தில் பதவி உயர்வைப் பெற்றுக் கொண்டது இவரது நிர்வாகத் திறனையும், கடமை உணர்வையும் தெளிவாகக் காட்டுகின்றது.


Tuesday, September 1, 2015

"பரத சந்த்யா" நடன நிகழ்வு

உசனைப் பூர்வீகமாகக் கொண்ட பரத கலா வித்தகர், நாட்டிய சிரோன்மணி, திருமதி. சியாமா தயாளன் அவர்களின் பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி பெருமையுடன் வழங்கும் "பரத சந்த்யா" நடன நிகழ்வு September 12, 2015, சனிக்கிழமை அன்று இடம்பெற உள்ளது. 1355 Harwood Avenue North, Ajax நகரில் அமைந்திருக்கும் J. Clarke Richardson Collegiate மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெறும். மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவிருக்கும் இந்த நிகழ்வில் உங்கள் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் அற்புதமான நடனங்கள் இடம்பெற உள்ளன. இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு திருமதி. சியாமா தயாளன் உசன் மக்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றார்.

மேலதிக தகவல்களுக்கு shiyama.thayaalan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியோடு தொடர்பு கொள்ளவும்.

"பரத சந்த்யா" நடன நிகழ்வு பெரு வெற்றி பெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.