Sunday, August 2, 2015
London, UK இல் தென்மராட்சி மக்களின் ஒன்றுகூடல்
தென்மராட்சி கல்லூரிகளின் அனுசரணையோடு தென்மராட்சி அபிவிருத்தி ஒன்றியம் - UK ஏற்பாட்டில் தென்மராட்சி மக்களின் ஒன்றுகூடல் விழா இடம்பெற உள்ளது. மூன்றாவது வருடமாக நடைபெற இருக்கும் இந்த விழாவில் சிறுவர்கள், இளையோர் மற்றும் வயது வந்தவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.
கிளித்தட்டு, கயிறிழுத்தல், வினோத உடைப் போட்டி என்பவற்றோடு Face Painting, Magic Show, Bouncing Castle என்பனவும் உங்களுக்காக ஒழுங்கு செயப்பட்டுள்ளன. சிறப்பு நிகழ்வாக ரவிஷானின் SRS Karaoke நிகழ்ச்சியில் நீங்களும் பாடி மகிழலாம்.
அத்தோடு பல இலங்கைப் பொருள் அங்காடிகளும் அமைந்திருக்கும். கூடவே கரம் சுண்டல், கச்சான் கடலை என்பவற்றோடு சுடச் சுட இலங்கை உணவு வகைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
இடம்: Morden Park (behind South Thames College), London Road, Morden, SM4 5HE (nearest Tube station - Morden)
திகதி: August மாதம் 16 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை
நேரம்: காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை.
உங்கள் உறவுகளையும், நண்பர்களையும் சந்திக்கும் அரிய சந்தர்ப்பத்தைத் தவறவிடாதீர்கள்.
UK வாழ் உசன் மக்களையும் இந்த விழாவில் கலந்து சிறப்பிக்கும்படி அன்போடு அழைக்கிறது தென்மராட்சி அபிவிருத்தி ஒன்றியம் - UK.
தொடர்புகளுக்கு: 07429 145 612, 07984 924 502
முகநூல்: Thenmaradchi Development Association.
Baskaran
|
|