கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் அனுசரணையில் உசனில் இயங்கிவரும் பண்டிதர் சரவணமுத்து பொது நூலகத்தில் , சிறுவர்களின் ஆங்கில அறிவை பெருக்கவும் நவீன இலத்திரனியல் உலகை அறிமுகப்பட்டுத்தும் நோக்கில் ,நவீன galaxy tab 3 android வசதியை கனடா உசன் ஐக்கியமக்கள் ஒன்றியம் வழங்கியுள்ளது . அத்துடன் நூலக அங்கத்தவர்களுக்கு இலவச wi-fi இன்டர்நெட் சேவையும் நாளை ஆகஸ்ட் 5 ம் திகதி மாலை 2.30 மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது .
நாளை முதல் உசன் கிராம மக்களும் சிறுவர்களும் சிலவசமாக galaxy tab 3 android வசதியை பயன்படுத்த முடியும். கடந்த மாதம் கனடா ஒன்றிய நிர்வாக உறுப்பினர்கள் நேரடியாக சென்று உசன் மக்களுடன் எதிர்கால நடவடிக்கைகள் தேவைகள் குறித்து கலந்துரையாடி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது .
முதல் கட்டமாக 5 நவீன galaxy tab 3 android உபகரணத்தை சாவகச்சேரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜ் அவர்களின் சகோதரி கனடா வாழ் சட்டத்தரணி வாசுகி தேவதாஸ் அவர்கள் வழங்கியிருந்தார் .
தேவையான உப கணனிகள் வழங்க உசனை சேர்ந்த லண்டன் வாழ் வைத்திய கலாநிதி திரு .பரமநாதன் அவர்கள் உதவி புரிந்தார் .
தொடர்ந்து பொது நூலக அங்கத்தவர்களுக்கு மேலும் சில முக்கிய சேவைகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நவீன தொடர்பாடல் வசதியை ஏற்படுத்தி உசன் சிறுவர்களை ஆங்கில மற்று உலக அறிவியலை அதிகரிக்கும் நோக்கமாக இந்த முயற்சி ஆரம்பிக்கப்படுகிறது .
நாளை மாலை 2.30 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வில் உசன் வாழ் மக்கள் அனைவரையும் கலந்து இந்த நவீன சேவையை இலவசமாக அனுபவிக்குமாறு வேண்டுகிறோம் .
இந்த முயற்சிக்கு அனுசரணை வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
இந்த சேவை முயற்சிக்கு அனுசரணை வழங்கியோர் ..
1.Vasuki Devadas Law Office -Canada
2.Dr. பரமநாதன் - UK
3.அஜந்தன் வெற்றிவேலு -Canada