உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் ஏற்பாட்டில் நடைபெறும் கனடா வாழ் உசன் மக்களின் கோடைகால ஒன்றுகூடலுடன் கூடிய பொதுச் சபைக் கூடத்துக்கு இன்னும் இருப்பது ஒரு வாரம் மட்டுமே.
இந்தக் கோடை கால ஒன்றுகூடலும், வருடாந்தப் பொதுச்சபைக் கூட்டமும் ஞாயிற்றுக் கிழமை, August மாதம் 16 ஆம் திகதி இடம்பெற உள்ளது. Scarborough நகரில் Neilson Road மற்றும் Finch Avenue சந்திக்கு அருகாமையில் அமைந்திருக்கும் Neilson Park இல் இந்த நிகழ்வு இடம்பெறும்.
நாள் முழுவதும் சுண்டல் கடலை, கொத்து ரொட்டி, குழைசாதம், BBQ உட்பட்ட பல வகையான உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட உள்ள இந்த நிகழ்வில் அனைத்து வயதினருக்குமான விளையாட்டுப் போட்டியும் இடம்பெறும். விசேட நிகழ்வாக கயிறிழுத்தல் போட்டி இடம்பெற உள்ளது. இதற்கான தரம் வாய்ந்த கயிறு இலங்கையிலிருந்து விசேடமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கயிறிழுத்தல் போட்டி சம்பந்தமாக ஒன்றியத்தின் உப செயலாளர் வெற்றிவேலு அஜந்தன் கருத்துத் தெரிவித்தபோது, "உசன் மக்களுக்கு உற்சாகத்தைக் கொடுப்பதற்காக இந்தக் கயிறு இலங்கையிலிருந்து விசேடமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கையிற்றை முகநூலில் பார்த்த பலரும் என்னை அழைத்து இதை வாடகைக்குத் தர முடியுமா என்று கேட்கின்றனர். இந்தப் புத்தம் புதிய கயிறு இந்த வருட ஒன்றுகூடலில் ஒரு காட்சிப் பொருளாகப் போகிறது" என்று பெருமிதத்தோடு கூறினார். இது தவிர மற்றுமொரு போட்டியாக 10 வயதுக்கு உட்பட்ட சிறுவருக்கான வினோத உடைப் போட்டியும் இடம்பெற உள்ளது.
இந்த வருடாந்த நிகழ்வு குறித்து உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத் தலைவர் திரு. கனகசபை நகுலன் அவர்களிடம் கருத்துக் கேட்டபோது, "வழமை போன்று இந்த வருடமும் இந்த ஒன்றுகூடல் சிறப்பாக அமையும்" என்று நம்பிக்கை தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "ஒரு அமைப்பின் வளர்ச்சி அதன் உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றத்திலேயே தங்கியுள்ளது. எனவே பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார். இந்த நிர்வாகசபையின் காலம் அடுத்த வருட கோடைகால ஒன்றுகூடலுடன் முடிவுக்கு வருகிறது என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.
உழைத்துக் களைத்த உள்ளங்களுக்கு உற்சாகம் தரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு கனடா வாழ் உசன் மக்கள், மற்றும் உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், அயற்கிராம மக்கள் அனைவரையும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு அழைக்கிறது.
இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்குபவர்கள்:
HomeLife Today Realty Ltd. - RAMANAN RAMACHANDRAN BROKER OF RECORD. www.homelife.ca
J.B.N. Auto Sales - Karuna www.jbnautosales.com
White Horse Travel www.whitehorsetravels.com
Debt Free Credit Solution - Keeran www.totaldebtfree.ca
Royal Brokers - Siva Kandiah http://www.royalbrokers.com
Priyalatha Satkunanathan
Oppilamany Vijayaroopan
அனுசரணை வழங்கும் அனைவருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை உங்கள் தேவைகளுக்கு இவர்களை நாடுமாறு உசன் மக்களையும், மற்றும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.