அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Wednesday, August 19, 2015

சிறப்பாக நடைபெற்ற கனடா வாழ் உசன் மக்களின் கோடைகால ஒன்றுகூடல் 2015

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் ஏற்பாட்டில் கனடா வாழ் உசன் மக்களின் கோடைகால ஒன்றுகூடலுடன் கூடிய பொதுச் சபைக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை, August மாதம் 16 ஆம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நாள் முழுவதும் சிறப்பான ஒடியல் கூழ், சுண்டல் கடலை, கொத்து ரொட்டி, குழைசாதம், BBQ உட்பட்ட பல வகையான உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. நிகழ்வில் அனைத்து வயதினருக்குமான விளையாட்டுப் போட்டி இடம்பெற்றது. விசேட நிகழ்வாகக் கயிறிழுத்தல் போட்டியும் உற்சாகமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக உசனைச் சேர்ந்த ஐயாத்துரை தயாபரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். அவர் தனது உரையில் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் செயற்பாடுகளைப் பாராட்டினார். அத்தோடு உசன் மக்களின் பண்பாடு, நேர்மை குறித்தும் பெருமையாகக் கூறினார். சிறப்பு விருந்தினராக உசன் இராமநாதன் மகா வித்தியாலய மாணவியும், ஆசிரியையுமான திருமதி விஜயராணி இளையதம்பி அவர்கள் கலந்து சிறப்புரை வழங்கினார். புலம்பெயர் தேசத்தில் உசன் கிராமமக்களின் ஒற்றுமை, பண்பாடு, வாழ்க்கைமுறை தனக்கு அக மகிழ்ச்சி தருவாதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து கௌரவ விருத்தினராக வருகை தந்த சட்டத்தரணி திருமதி வாசுகி தேவதாஸ் அவர்கள் கனடாவில் இருக்கும் தென்மராட்சி அமைப்புக்களில் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா மிகச் சிறப்பாகச் செயற்படுவதைத் தான் அவதானித்ததாகத் தெரிவித்து தொடந்தும் உசன் மக்களுடன் இணைந்திருக்கத் தான் விரும்புவதாகத் தெரிவித்தார்.

இந்த ஒன்றுகூடலின் சிறப்பு நிகழ்வாக உசனில் வாழ்ந்து தனது பிள்ளைகளைப் பட்டதாரிகளாக்கி, அவர்களில் இரண்டு பிள்ளைகளை ஒரே நேரத்தில் இலங்கையின் சிறந்த ஆசிரியர்கள் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்ட தந்தையான திரு முத்துத்தம்பி ஒப்பிலாமணி அவர்கள் மதிப்பளிக்கப்பட்டார். தன்னையும், தனது பிள்ளைகளையும் சரியாக இனம்கண்டு மதிப்பளித்தமைக்குக் கனடா வாழ் உசன் மக்களுக்கு அவர் நன்றியைத் தெரிவித்து கொண்டார்.
தொடர்ந்து விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய வீரர்களுக்கு வெற்றி கிண்ணமும், Usan Sports Club ஆல் நடாத்தப்பட்ட பூப்பந்தாட்டப் போட்டியில் வெற்றியீட்டிய வீரர்களுக்கும், சர்வதேச பூப்பந்து போட்டியில் பங்குபற்றிய வீரர்களுக்கும் சிறப்பு கேடயங்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியவர்கள்:
HomeLife Today Realty Ltd. - RAMANAN RAMACHANDRAN BROKER OF RECORD. www.homelife.ca
J.B.N. Auto Sales - Karuna www.jbnautosales.com
White Horse Travel www.whitehorsetravels.com
Debt Free Credit Solution - Keeran www.totaldebtfree.ca
Royal Brokers - Siva Kandiah http://www.royalbrokers.com
Vedio Maruty - Vel Kirupa www.facebook.com/VideoMaruty
A. A. V. Party Rentals - Nagulan Ilaiyathampy
Priyalatha Satkunanathan
Oppilamany Vijayaroopan

இவர்களுக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.