அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Friday, August 28, 2015

மரண அறிவித்தல்


உசனை சேர்ந்தவரும் உசன் கிராம அபிவிருத்திக்கு அளப்பரிய பங்காற்றி வரும் வைத்திய கலாநிதி திரு.இந்திரன் ஆசீர்வாதம் அவர்களின் மாமியார் 
கனடாவில் காலமானார் , அன்னாரின் இறுதி பிரார்த்தனை நாளை சனிக்கிழமை காலை 9 மணிமுதல் 12 மணிவரை 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1 அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் நடைபெற்று நல்லடக்கம் செய்யப்படும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு வேண்டுகிறோம் . அன்னாரின் ஆத்மா சாந்தியடைய உசன் மக்கள் சார்பாக பிரார்த்திக்கிறோம் .....
தகவல் : Dr.இந்திரன் ஆசீர்வாதம் 


உசனில் இலவச ஆங்கில பயிற்சி வகுப்பு தொடங்கியது


கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் அடுத்த செயல் திட்டமாக உசன் கிராமத்து மக்களுக்கும் அதன் அயல் கிராம மக்களுக்கும் அடிப்படை ஆங்கில அறிவை வளர்க்கும் செயல் திட்டம் ஆரம்பமாகியது , தலைவர் திருமதி. மீரா தேவரஞ்சன் தலைமையில் உசன் மக்கள் முன்னிலையில் வகுப்பு தொடங்கிவைக்கப்பட்டது , நிகழ்வில் ஊர் பெரியவர்கள் மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர் 
  







Thursday, August 27, 2015

உசனில் "ஆசீர்வாதம்" அனைவர்க்கும் ஆங்கில அறிவு..... ஆரம்பம்

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் அடுத்த செயல் திட்டமாக உசன் கிராமத்து மக்களுக்கும் அதன் அயல் கிராம மக்களுக்கும் அடிப்படை ஆங்கில அறிவை வளர்க்கும் செயல் திட்டம் வரும் செப்டம்பர் 1 ம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது.. இந்த இலவச பயிற்சி நெறியில் வயது வேறுபாடின்றி யாவரும் கலந்து பயன் பெறமுடியும்.இந்த திட்டம் குறித்த வடிவம் ......விருப்பமானவர்கள் உசன் பண்டிதர் சரவணமுத்து பொது நூலத்தை தொடர்புகொள்ளவும் ,
இடம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது ..பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 

"ஆசீர்வாதம்" அனைவர்க்கும் ஆங்கில அறிவு........பயிற்சி நெறி திட்டம்
-------------------------------------------------------------------------------------------------------------------------------
உசனிலும் அதன் சுற்று கிராமங்களிலும் உள்ள மக்களுக்கு அடிப்படை ஆங்கில அறிவை வளர்க்கும் திட்டம், பாடத்திட்டம் தவிர்த்து ஆங்கில பேச்சு திறன்,எழுத்து திறன்,உரையாடல் ஆகிய துறைகளை இலகு ஆங்கில முறை மூலம் அனைவர்க்கும் பயிற்ருவிக்கும் நோக்கம் கொண்ட இந்த முயற்சி ..

நோக்கம்  
---------------------------
1. உசன் மக்கள் அனைவர்க்கும் அடிப்படை ஆங்கில அறிவை வளர்த்தல்
2.இலவசமாக கற்பித்தல்
3.நவீன ஆங்கில கற்பித்தல் முறையை அறிமுகபடுத்தல்
4.இலகு முறை ஆங்கில கல்வியை ஊக்குவித்தல் .
5.ஆங்கில அறிவு போட்டிகளை நடாத்தி ஊக்குவித்தல்
6.வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து உசன் கிராமமக்களுக்கு ஊக்குவிப்பு சலுககைகளை பெற்றுகொடுத்தல்
7. வகுப்பு தவிர்ந்த , நவீன video, documentry,cartoone, dvd, movies, discovery
 போன்ற அறிவியல் உலகை இலவசமாக காண்பித்தல்


செயல்திட்டம்
---------------------------
1. உசன் பொதுநூலக நிர்வாகசபை நிர்வகிக்கும்
2. பொறுப்பாக திரு.ரொனால்ட் அவர்கள் கடமையாற்றுவார் ,
3. ஆசிரியராக செல்வி.பா.தண்மதி பொறுப்பு வகிப்பார்
4. வாரத்தில் 3 நாட்டகள் 1.1/2 மணி நேரம் வகுப்பு இயங்கும்
5. தற்காலிகமாக உசன் அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் இயங்கும்

நிதி நிர்வாகம்
--------------------------
1. மாதாந்த ஆசிரியர் கொடுப்பனவு 5000 ரூபாய்
2. நவீன Multimedia உபகரணம் தேவை
3. எதிர் காலத்தில் இது வெற்றிகரமாக நடை பெற்றால் பண்டிதர் பொது நூலக வளாகத்தில் சிறிய கட்டிடம் அமைத்தல் .
4. இந்த நிதி பொறுப்புகள் யாவும் அமரர் ஆசீர்வாதம் அவர்களின் நினைவாக
நன்கொடையாக
(வைத்தியர் திரு இந்திரன் ஆசீர்வாதம் அவர்கள்  கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் ஊடாக வழங்குவார் )_
5.  கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் இதனை வழிநடாத்தும் பொறுப்பாக திரு.அஜந்தன் வெற்றிவேலு கடமையாற்றுவார்
6. இந்த முயற்சியில் பங்கேற்றக நன்கொடை வழங்க ,அறிவுரை , மேலதிக திட்டங்களை ஊக்குவிக்க அனைவர்க்கும் சந்தர்ப்பம் உண்டு
7. எந்த விதமான இலாப நோக்க செயல்பாடுகளும் இத் திட்டத்தில் இடம் பெற அனுமதி இல்லை

கட்டுப்பாடு
-------------------
1. உசன் மற்றும் அயல்கிராம மாணவர்கள் , பொதுமக்கள் என வயது வேறுபாடின்றி பலன் பெறலாம்
2. கட்டாயம் உசன் பொது நூலக அங்கத்தவராக இணைய வேண்டும்
3. வகுப்புகளுக்கு ஒழுங்காக வரவேண்டும்,
4. திட்டத்தை தவறான முறையிலோ,உதாசீனமாகவோ , கேளிக்கையாகவோ,
மற்றவரை குழப்பும் வகையிலோ செயல்பட்டால் ..நிர்வாகசபை அவர்களை வெளியேற்ற முழு உரிமையும் உண்டு.
5. நிர்வாகசபையின் கட்டுப்பாட்டுக்கு அமைவாக இருக்க வேண்டும்

6. வகுப்பில் அனைவரும் ஒரே தகுதியாக கணிக்கப்படும் 


Saturday, August 22, 2015

உசன் மக்களின் ஒன்றுகூடல் காணொளி பதிவு

கனடா வாழ் உசன் மக்களின் வருடாந்த கோடை கால ஒன்றுகூடல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது ,இந்த நிகழ்வின் சில காட்சி பதிவுகள்


Wednesday, August 19, 2015

சிறப்பாக நடைபெற்ற கனடா வாழ் உசன் மக்களின் கோடைகால ஒன்றுகூடல் 2015

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் ஏற்பாட்டில் கனடா வாழ் உசன் மக்களின் கோடைகால ஒன்றுகூடலுடன் கூடிய பொதுச் சபைக் கூட்டம் ஞாயிற்றுக் கிழமை, August மாதம் 16 ஆம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நாள் முழுவதும் சிறப்பான ஒடியல் கூழ், சுண்டல் கடலை, கொத்து ரொட்டி, குழைசாதம், BBQ உட்பட்ட பல வகையான உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. நிகழ்வில் அனைத்து வயதினருக்குமான விளையாட்டுப் போட்டி இடம்பெற்றது. விசேட நிகழ்வாகக் கயிறிழுத்தல் போட்டியும் உற்சாகமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக உசனைச் சேர்ந்த ஐயாத்துரை தயாபரன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். அவர் தனது உரையில் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் செயற்பாடுகளைப் பாராட்டினார். அத்தோடு உசன் மக்களின் பண்பாடு, நேர்மை குறித்தும் பெருமையாகக் கூறினார். சிறப்பு விருந்தினராக உசன் இராமநாதன் மகா வித்தியாலய மாணவியும், ஆசிரியையுமான திருமதி விஜயராணி இளையதம்பி அவர்கள் கலந்து சிறப்புரை வழங்கினார். புலம்பெயர் தேசத்தில் உசன் கிராமமக்களின் ஒற்றுமை, பண்பாடு, வாழ்க்கைமுறை தனக்கு அக மகிழ்ச்சி தருவாதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து கௌரவ விருத்தினராக வருகை தந்த சட்டத்தரணி திருமதி வாசுகி தேவதாஸ் அவர்கள் கனடாவில் இருக்கும் தென்மராட்சி அமைப்புக்களில் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் -கனடா மிகச் சிறப்பாகச் செயற்படுவதைத் தான் அவதானித்ததாகத் தெரிவித்து தொடந்தும் உசன் மக்களுடன் இணைந்திருக்கத் தான் விரும்புவதாகத் தெரிவித்தார்.

இந்த ஒன்றுகூடலின் சிறப்பு நிகழ்வாக உசனில் வாழ்ந்து தனது பிள்ளைகளைப் பட்டதாரிகளாக்கி, அவர்களில் இரண்டு பிள்ளைகளை ஒரே நேரத்தில் இலங்கையின் சிறந்த ஆசிரியர்கள் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்ட தந்தையான திரு முத்துத்தம்பி ஒப்பிலாமணி அவர்கள் மதிப்பளிக்கப்பட்டார். தன்னையும், தனது பிள்ளைகளையும் சரியாக இனம்கண்டு மதிப்பளித்தமைக்குக் கனடா வாழ் உசன் மக்களுக்கு அவர் நன்றியைத் தெரிவித்து கொண்டார்.
தொடர்ந்து விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய வீரர்களுக்கு வெற்றி கிண்ணமும், Usan Sports Club ஆல் நடாத்தப்பட்ட பூப்பந்தாட்டப் போட்டியில் வெற்றியீட்டிய வீரர்களுக்கும், சர்வதேச பூப்பந்து போட்டியில் பங்குபற்றிய வீரர்களுக்கும் சிறப்பு கேடயங்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியவர்கள்:
HomeLife Today Realty Ltd. - RAMANAN RAMACHANDRAN BROKER OF RECORD. www.homelife.ca
J.B.N. Auto Sales - Karuna www.jbnautosales.com
White Horse Travel www.whitehorsetravels.com
Debt Free Credit Solution - Keeran www.totaldebtfree.ca
Royal Brokers - Siva Kandiah http://www.royalbrokers.com
Vedio Maruty - Vel Kirupa www.facebook.com/VideoMaruty
A. A. V. Party Rentals - Nagulan Ilaiyathampy
Priyalatha Satkunanathan
Oppilamany Vijayaroopan

இவர்களுக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.


Sunday, August 9, 2015

கனடாவாழ் உசன் மக்களின் கோடை கால ஒன்றுகூடலும், பொதுச் சபைக் கூட்டமும்

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் ஏற்பாட்டில் நடைபெறும் கனடா வாழ் உசன் மக்களின் கோடைகால ஒன்றுகூடலுடன் கூடிய பொதுச் சபைக் கூடத்துக்கு இன்னும் இருப்பது ஒரு வாரம் மட்டுமே.

இந்தக் கோடை கால ஒன்றுகூடலும், வருடாந்தப் பொதுச்சபைக் கூட்டமும் ஞாயிற்றுக் கிழமை, August மாதம் 16 ஆம் திகதி இடம்பெற உள்ளது. Scarborough நகரில் Neilson Road மற்றும் Finch Avenue சந்திக்கு அருகாமையில் அமைந்திருக்கும் Neilson Park இல் இந்த நிகழ்வு இடம்பெறும்.

நாள் முழுவதும் சுண்டல் கடலை, கொத்து ரொட்டி, குழைசாதம், BBQ உட்பட்ட பல வகையான உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட உள்ள இந்த நிகழ்வில் அனைத்து வயதினருக்குமான விளையாட்டுப் போட்டியும் இடம்பெறும். விசேட நிகழ்வாக கயிறிழுத்தல் போட்டி இடம்பெற உள்ளது. இதற்கான தரம் வாய்ந்த கயிறு இலங்கையிலிருந்து விசேடமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கயிறிழுத்தல் போட்டி சம்பந்தமாக ஒன்றியத்தின் உப செயலாளர் வெற்றிவேலு அஜந்தன் கருத்துத் தெரிவித்தபோது, "உசன் மக்களுக்கு உற்சாகத்தைக் கொடுப்பதற்காக இந்தக் கயிறு இலங்கையிலிருந்து விசேடமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கையிற்றை முகநூலில் பார்த்த பலரும் என்னை அழைத்து இதை வாடகைக்குத் தர முடியுமா என்று கேட்கின்றனர். இந்தப் புத்தம் புதிய கயிறு இந்த வருட ஒன்றுகூடலில் ஒரு காட்சிப் பொருளாகப் போகிறது" என்று பெருமிதத்தோடு கூறினார். இது தவிர மற்றுமொரு போட்டியாக 10 வயதுக்கு உட்பட்ட சிறுவருக்கான வினோத உடைப் போட்டியும் இடம்பெற உள்ளது.

இந்த வருடாந்த நிகழ்வு குறித்து உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத் தலைவர் திரு. கனகசபை நகுலன் அவர்களிடம் கருத்துக் கேட்டபோது, "வழமை போன்று இந்த வருடமும் இந்த ஒன்றுகூடல் சிறப்பாக அமையும்" என்று நம்பிக்கை தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "ஒரு அமைப்பின் வளர்ச்சி அதன் உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றத்திலேயே தங்கியுள்ளது. எனவே பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார். இந்த நிர்வாகசபையின் காலம் அடுத்த வருட கோடைகால ஒன்றுகூடலுடன் முடிவுக்கு வருகிறது என்பதையும் அவர் நினைவுபடுத்தினார்.

உழைத்துக் களைத்த உள்ளங்களுக்கு உற்சாகம் தரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு கனடா வாழ் உசன் மக்கள், மற்றும் உசன் இராமநாதன் மகாவித்தியாலய பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், அயற்கிராம மக்கள் அனைவரையும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு அழைக்கிறது.

இந்த நிகழ்வுக்கு அனுசரணை வழங்குபவர்கள்:
HomeLife Today Realty Ltd. - RAMANAN RAMACHANDRAN BROKER OF RECORD. www.homelife.ca
J.B.N. Auto Sales - Karuna www.jbnautosales.com
White Horse Travel www.whitehorsetravels.com
Debt Free Credit Solution - Keeran www.totaldebtfree.ca
Royal Brokers - Siva Kandiah http://www.royalbrokers.com
Priyalatha Satkunanathan
Oppilamany Vijayaroopan

அனுசரணை வழங்கும் அனைவருக்கும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை உங்கள் தேவைகளுக்கு இவர்களை நாடுமாறு உசன் மக்களையும், மற்றும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறது.


Friday, August 7, 2015

திரு சின்னத்தம்பி பொன்னையா

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் உப தலைவர் சரவணமுத்து பத்மகாந்தன் அவர்களின் மாமனார் சின்னத்தம்பி பொன்னையா அவர்கள் August 07, 2015 வெள்ளிக்கிழமை அன்று முருகன் கழலடி சேர்ந்தார்.

இவர் கொடிகாமம் மந்துவில் தாவளை இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், கண்டாவளை பத்தன்மோட்டையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் மாணிக்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

திலகவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஞானம்பலவாணர்(ராசா- சுவிஸ்), சிவசோதி(கனடா), சிவநேசன்(கனடா), ரவிக்குமார்(ரவி- சுவிஸ்), சிவராணி(யசோ) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கணபதிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான சேதுப்பிள்ளை(குஞ்சம்மா), ஆறுமுகம்(இளையதம்பி), மற்றும் சின்னப்பிள்ளை(செல்லம்மா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருப்பூங்கோதை(சுவிஸ்), பத்மகாந்தன்(கனடா), பகீரதி(கனடா), புவனேஸ்வரி(புவனா- சுவிஸ்), சிவராசா(சிறி- கொடிகாமம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஸ்கந்தகுமார் கமலாதேவி அவர்களின் அன்பு மைத்துனரும்,

சுஜீவன் கார்திகாயினி(சுவிஸ்), ரஜீவன் காயத்திரி(சுவிஸ்), மயூரன்(கனடா), மீனுயா(கனடா), ரவீனன்(சுவிஸ்), ரானுஷா(சுவிஸ்), துர்க்கா(கனடா), லதீசன்(கனடா), பிரதீசன்(கனடா), லக்சன்(கனடா), சானுசன், தனுசன், கானுயன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சைலன், லக்ஸ்மன், அஸ்லின், கயலின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் மடத்தடிலேன் கொடிகாமத்திலுள்ள மகள் யசோ அவர்களின் இல்லத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிக்கிரியை ஆகஸ்ட் 09, 2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணி்யளவில் நடைபெற்று பின்னர் கொடிகாமம் கட்டப்பறிச்சான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
மருமகன் பத்மகாந்தன் (பத்மன்)

தொடர்புகளுக்கு:
ஞானம்பலவாணர் — சுவிட்சர்லாந்து+41332217536
ரவிக்குமார் — சுவிட்சர்லாந்து+41315344454
சிவசோதி — கனடா+19058030204
சிவநேசன் — கனடா+16474012538
யசோ — இலங்கை+94773621166
சிறி — இலங்கை+94772784730
வாணர் — இலங்கை+94771133375


கனடா ஒன்றியம் -உசன் பாடசாலையின் இன்றைய நிலை குறித்து கலந்துரையாடல்

கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம், உசன்  கிராமத்தின் ஒரே பாடசாலையாக விளங்கும் ,இராமநாதன் மகா வித்தியாலயத்தின் இன்றைய நிலை குறித்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தது . இதுவரை கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் பாடசாலைக்கு வழங்கிய உதவிகளை நேரில் சென்று பார்வையிட்டதுடன் , எதிர்கால தேவைகள் , மாணவர்களின் எண்ணிக்கயை அதிகரிக்க கூடிய வாய்ப்புக்கள் குறித்து பாடசாலை அதிபருடன் கலந்துரையாடப்பட்டது , மிகவும் இறுக்கமான நிலையிலும் ஒருசில விடையங்களில் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்குள் உசன் இரமாநாதன்  மகா வித்தியாலயம் முன்னிலை வகிப்பது , கவனிக்க கூடியதாக இருந்தது , அவசர தேவையாக பாடசாலையின் நீர்த்தாங்கி திருத்துவதுக்கும் , பாடசாலையின் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதுக்கு ,
ஒலி அமைப்பு சாதனங்களும் தேவைப்படுகிறது .
இதனை அன்பளிப்பு செய்ய உலகில் வாழும் உசன் பாடசாலை பழைய  மாணவர்களை உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் வேண்டி நிக்கிறது.
அன்பளிப்பு செய்ய விரும்பும் உள்ளங்கள் பாடசாலை அதிபரையோ அல்லது உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தியோ தொடர்புகொள்ளுமாறு வேண்டுகிறோம் .


பாடசாலையின் சில காட்சிகள்













பழுதடைந்த நிலையில் உள்ள நீர்த்தாங்கி








விளையாட்டு மைதானம்