அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, June 23, 2015

கனடா வாழ் விடத்தற்பளை மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு!

எதிர்வரும் ஆடி மாதம் முதலாம் திகதி, புதன் கிழமை, காலை 10.30 மணியில் இருந்து மாலை 7 மணிவரை, 73, Thorncliffe Park Dr, Toronto, M4H 1C4 (Near: Thorncliffe Park Dr & Overlea Blvd) இல் இருக்கும் E.T.Seton park இல் விடத்தற்பளை மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு இடம்பெற இருக்கின்றது. அதற்கு விடத்தற்பளை மக்கள், விடத்தற்பளைக் கமலாசனி மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்கள், மற்றும் விடத்தற்பளையின் அயல் கிராம உறவினர்கள், நண்பர்கள், விடத்தற்பளை நலன் விரும்பிகள் அனைவரையும் வருகை தந்து நிகழ்வினைச் சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறது விடத்தற்பளை மக்கள் ஒன்றியம் - கனடா.

இந்த நிகழ்வில் உசன் மக்களையும் கலந்து சிறப்பிக்குமாறு விடத்தற்பளை மக்கள் ஒன்றியம் - கனடாவின் தலைவர் நடராஜா உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார். விடத்தற்பளை மக்கள் ஒன்றியம் - கனடாவின் அழைப்பை ஏற்று இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்து ஆதரவு வழங்குமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கிறது. இந்த வருடாந்த நிகழ்வு சிறப்புற நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.


Thursday, June 4, 2015

விரைவில் பூரண சுகமடையப் பிரார்த்திக்கிறோம்

உசன் வீதி - கண்டி வீதிக்கு அருகாமையில் உள்ள தொடருந்து கடவையில் கடந்த புதன் கிழமை அன்று விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தொடருந்தில் ஈருளுயில் சென்றுகொண்டிருந்த ஜெபனாமகணேசன் யதுர்சன் மோதுண்டுள்ளார். படுகாயமடைந்த இவர் உடனடியாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுப் பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த யதுர்சன் உசன், கிராம வளர்ச்சியில் அதிக ஈடுபாடுகொண்ட வைத்திய கலாநிதி ஐயாத்துரை ஜெபனாமகணேசன் அவர்களின் மகன் ஆவார்.

ஜெபனாமகணேசன் யதுர்சன் விரைவில் பூரண சுகமடைய உசன் முருகனைப் பிரார்த்திக்கிறோம்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா