யாழ்.உசன் சிறிமுருகன் விளையாட்டுக் கழகத்தின் மைதானத் திறப்பு விழாவும் கழகத்தின் படைப்பான முதுசம் நூல் வெளியீட்டு நிகழ்வும் கடந்த 30ம் திகதி மாலை 5.00 மணிக்கு கழகத் தலைவர் சிவானந்தம் செல்வரூபன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முதல்வர் நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரனும், சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனும், விருந்தினர்களாக விரிவுரையாளர் கு.பாலசண்முகனும் கவிஞர் கு.வீராவும் கலந்து கொண்டனர்.
உசன் கந்தசுவாமி ஆலயத்தில் ஆலயத் தர்மகத்தாவும் கழகப் போசகர்களில் ஒருவருமாகிய கு.விமலதாஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விசேட பூசையில் கலந்து கொண்ட விருந்தினர்களை உசன் இராமநாதன் மகாவித்தியாலய மாணவர்கள் தமிழர் பண்பாட்டு இன்னிசை மரியாதையுடன் அழைத்து வந்தனர்.
தொடர்ந்து பிரதம விருந்தினரால் கழக மைதானம் திறந்து வைக்கப்பட்டது. மங்கள விளக்கேற்றி அகவணக்கத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வுகளை கழகத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் தனபாலன் றொசாந்தன் தொகுத்து வழங்கினார்.