அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, May 19, 2015

பொதுக் கூட்டமும், கோடை கால ஒன்றுகூடலும் - 2015

கனடா வாழ் உசன் மக்களை ஒன்று சேர்க்கும், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா நடாத்தும் கோடை கால ஒன்றுகூடலும், வருடாந்தப் பொதுக் கூட்டமும் August மாதம் 16ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இடம்பெற உள்ளது. Scarborough, Canada வில் Neilson Road மற்றும் Finch Avenue சந்திக்கு அருகாமையில் அமைந்திருக்கும் Neilson Park இல் இந்த நிகழ்வு இடம்பெறும்.

அனைத்து வயதினருக்குமான விளையாட்டுப் போட்டிகள் இடம்பெறும் இந்த நிகழ்வில் பல சுவை உணவு வகைகளும் பரிமாறப்படும். இம்முறை சிறுவர்களுக்கான வினோத உடைப் போட்டி மீண்டும் கொண்டுவரப்படுகிறது.

இந்த நிகழ்வில் உங்களின் அன்புக்குரியவர்களின் நினைவாக கேடையங்கள் வழங்க விரும்புபவர்களும், நிகழ்வுக்கு அனுசரணை வழங்க விரும்பும் நிறுவனங்களும் ஒன்றியத்தின் செலயலாளரோடு secretary@usan.ca என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளவும்.

உங்கள் உள்ளங்களில் புத்துணர்வைக் கொண்டுவரும் இந்த வருடாந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு அழைக்கின்றது.


Sunday, May 17, 2015

கனடாவில் உசன் வீரர்களுக்கு மதிப்பளிப்பு


கடந்த April மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற சர்வதேச தமிழர் பூபந்தாட்டப் போட்டியில் கனடா அணி சார்பில் கலந்து கொண்ட வீரர்களுக்குக் கனடா வாழ் விளையாட்டுக் கழகங்களும், மார்க்கம் தமிழர் அமைப்பும் இணைந்து மதிப்பளித்து அவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் முகமாக ஊடக சந்திப்பு ஒன்றை May மாதம் 9 ம் திகதி நடாத்தின. இந்த நிகழ்வில் Usan Sports Club ஐ சேர்ந்த மூன்று வீர்களும் கௌரவிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் அவர்களின் திறமை குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

பூபந்தாட்ட விளையாட்டு அபிமானிகள் மற்றும் ஊடகத்துறையினரின் கவனைத்தை ஈர்த்த இந்த நிகழ்வில் உசனைச் சேர்ந்த திரு. உமாபதி, திரு. சிவகுமார், செல்வன் கோகுலன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டது உசன் மண்ணுக்குப் பெருமை சேர்க்கும் விடயமாக இருந்தது. இந்த நிகழ்வில் இளையோர் தரப்பு சார்பாக செல்வன் கோகுலன் சிவகுமார் நிகழ்த்திய உரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இந்த வீர்களின் திறமைக்கு இன்னும் வெற்றி கேடயங்கள் கிடைக்க வாழ்த்துகிறோம்.















































Tuesday, May 12, 2015

சர்வதேச போட்டியில் வென்று வந்த உசன் வீரர்கள்


கடந்த மே மாதம் பிரித்தானியாவில் நடைபெற்ற சர்வதேச தமிழர் பூபந்தாட்ட போட்டியில் கனடா அணிசார்பில் கலந்து கொண்ட வீரர்களில் ,Usan Sports Club அணி வீரர்கள் மூன்று பேர் தெரிவுசெய்யப்பட்டு ,போட்டியில் கலந்து கொண்டதுடன் , போட்டியில் வெற்றியும் பெற்று நாடு திரும்பினர் , இவர்களின் அபார விளையாட்டால் கனடாவும் கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியமும் பெருமைகொள்கிறது ,
இந்த போட்டியில் கலந்து கொண்ட வீரர்களான திரு.சிவகுமார் ,திரு,உமாபதி
செல்வன் .கோகுலன் ஆகியோருக்கு எமது வாழ்த்துகளும் பாராட்டுகளும் .
கனடா அணி சார்பில் பங்குபற்றிய அனைத்து வீரர்களுக்கும் ,இதை ஒழுங்கு படுத்திய அமைப்பினருக்கும் எமது நன்றிகள் ,
தொடர்ந்து எதிர்வரும் 2016 ம் ஆண்டுக்கான போட்டி போட்டி கேர்மனியில் நடைபெறவுள்ளது .






Thursday, May 7, 2015

உசன் மக்களுடன் வடக்கு முதல்வர் கலந்துகொண்ட நிகழ்வு

யாழ்.உசன் சிறிமுருகன் விளையாட்டுக் கழகத்தின் மைதானத் திறப்பு விழாவும் கழகத்தின் படைப்பான முதுசம் நூல் வெளியீட்டு நிகழ்வும் கடந்த 30ம் திகதி மாலை 5.00 மணிக்கு கழகத் தலைவர் சிவானந்தம் செல்வரூபன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடக்கு மாகாண முதல்வர் நீதியரசர் க.வி.விக்கினேஸ்வரனும், சிறப்பு விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர்  சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் கேசவன் சயந்தனும், விருந்தினர்களாக விரிவுரையாளர் கு.பாலசண்முகனும் கவிஞர் கு.வீராவும் கலந்து கொண்டனர்.
உசன் கந்தசுவாமி ஆலயத்தில் ஆலயத் தர்மகத்தாவும் கழகப் போசகர்களில் ஒருவருமாகிய கு.விமலதாஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற விசேட பூசையில் கலந்து கொண்ட விருந்தினர்களை உசன் இராமநாதன் மகாவித்தியாலய மாணவர்கள் தமிழர் பண்பாட்டு இன்னிசை மரியாதையுடன் அழைத்து வந்தனர்.
தொடர்ந்து பிரதம விருந்தினரால் கழக மைதானம் திறந்து வைக்கப்பட்டது. மங்கள விளக்கேற்றி அகவணக்கத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட நிகழ்வுகளை கழகத்தின் மத்திய செயற்குழு உறுப்பினர் தனபாலன் றொசாந்தன் தொகுத்து வழங்கினார்.