உசன் ஐக்கிய நாணய சங்கம் தங்களின் தேவைக்கென ஒரு கட்டிடம் அமைக்கத் தீர்மானித்துள்ளதென்றும், அதற்கான நிதி உதவிக்கான கோரிக்கையை சங்கத்தின் மூத்த உறுப்பினர்களின் பிள்ளைகளிடம் விடுவதென்றும், இந்த வேண்டுகோளை உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் ஊடகங்களில் பிரசுரித்து உதவுமாறும் அச் சங்கத்தின் சார்பில் திரு.க.பேரம்பலம் அவர்கள் கேட்டிருக்கிறார். அவரின் வேண்டுகோளை இங்கே பிரசுரிக்கிறோம்.
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா
______________________________________________________________________
இச்சங்கத்தின் நோக்கம்: புகையிலைச் செய்கை, நெற்செய்கை போன்ற தொழில்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்குக் குறைந்த வட்டிக்குக் கடன் கொடுத்தல்.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அமரர் மு. சி. சிற்றம்பலம் அவர்களால் 1947 ஆம் ஆண்டு இந்தச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. 68 ஆண்டுகளாகியும் சொந்தக் கட்டிடம் இல்லாத குறையை நிவர்த்தி செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்டிடத்துக்குரிய ஒரு பரப்புக் காணியை உசன் கந்தசாமி கோவில் தர்மகர்த்தா திரு கு. விமலதாஸ் அவர்கள் வழங்கியுள்ளார். இந்தக் கட்டிடத்தைக் கட்டி முடிப்பதற்கு Rs. 12,00,000.00 செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான நிதியை சங்க மூத்த அங்கத்தவர்களின் நினைவாக அவர்தம் பிள்ளைகளின் அன்பளிப்பின் மூலம் பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
பேரன்புடையீர்!
மேற்படி சங்கம் இன்றும் 26 அங்கத்தவர்களுக்குக் குறைந்த வட்டியுடன் தலா Rs. 20,000.00 கடன் கொடுத்துள்ளது. அது மட்டுமல்லாது கடந்த காலங்களில் பல சமூக சேவைகளையும் செய்துள்ளது. யா/ உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் ஒரு கல்வி வளர்ச்சி நிதியத்தை ஆரம்பித்து ஆண்டுதோறும் பரீட்சை பெறுபேறுகளில் முதன்மை காட்டும் மாணவர்களுக்கு நிதியத்தின் வட்டி மூலம் நிதி உதவிகளையும் செய்து வருகிறது.
எனவே இந்த நற்பணி செவ்வனே நிறைவு பெற உங்களின் பேருதவியை நாடி நிற்கிறோம். பின்வரும் வங்கிக் கணக்கில் வைப்பிலிடுவதன் மூலம் உங்களின் நிதி உதவியைச் செய்ய முடியும்.
வங்கியின் பெயர்: National Savings Bank (NSB), Chavakachcheri
கணக்கிலக்கம்: 100730209406
மேலதிக தொடர்புகளுக்கு:
திரு.க.பேரம்பலம் +94213737079 / +9421222404
நன்றி
உசன் ஐக்கிய நாணய சங்கம் சார்பாக திரு.க.பேரம்பலம்