தனிப்பட்ட நோக்கமாக Toronto, கனடாவுக்கு வருகை தந்துள்ள உசன் கந்தசாமி கோவில் பிரதமகுருக்கள், அருள் வாக்குச் சித்தர் குகஸ்ரீ இரத்தின கேதீஸ்வர சுவாமிகளை உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு வரவேற்கிறது.
உசன் கந்தசாமி கோவில் இன்றுவரை பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஒரு திருத்தலமாக விளங்குவதற்கு குகஸ்ரீ இரத்தின கேதீஸ்வர சுவாமிகளின் பங்கு மிக முக்கியமானது. வருடந்தோறும் நடைபெறும் ஸ்கந்த ஹோமம் இந்த வருடமும் February மாதம் 22 ஆம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றதை இங்கே நினைவு கூரலாம். வருடாந்த மகோற்சவமும் முறை தவறாது சுவாமிகளின் வழிகாட்டலிலே சிறப்பாக நடைபெற்று வருவது உசன் மக்கள் மட்டுமல்ல அயற்கிராம மக்களும் செய்த பெரும் பாக்கியமே!
உசன் கிராமத்துக்கும், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவுக்கும் பல சேவைகளைச் செய்துவரும் குகஸ்ரீ இரத்தின கேதீஸ்வர சுவாமிகள் நீண்ட ஆயுளோடு, நோயற்ற வாழ்வு வாழ உசன் முருகன் அருள் புரிய வேண்டுமென்று உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கிறது. சுவாமிகள் Toronto வில் நிற்கும்போது சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றுக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
மேலேயுள்ள படத்திலே சுவாமிகள் தனது குடும்ப நண்பரான தர்மகுலன் (ரவி) கனகசபை அவர்களோடு காணப்படுகிறார்.