அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Tuesday, March 31, 2015

உசனை சேர்ந்த 2 மாணவர்கள் 9A சித்தி பெற்றுள்ளனர்

2014 ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் வந்த நிலையில் எமக்கு கிடைத்த தகவலின் அடிப்படியில் 
உசனை சேர்ந்த இரண்டு மாணவர்கள் 9A சித்தி பெற்றுள்ளனர் 
 திரு .திருமதி விஜயதாசன் சோதி தம்பதிகளின் புதல்வி செல்வி.மதனிகா ஆங்கில பிரிவில் 9 A பெறுபேற்றையும்
அதே போன்று  திரு .திருமதி .மிகுந்தன் துஸ்யந்தி தம்பதிகளின் புதல்வன் செல்வன்,வட்சலன் 9 A பெறுபேற்றையும் பெற்றுள்ளார்கள்
செல்வி.மதனிகாவுக்கும் செல்வன் வட்சலனுக்கும்   உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் சார்பில் எமது வாழ்த்துக்கள் உரித்தாகுக
 உசனை சேர்ந்த  மாணவர்கள் யாரவது உங்கள் பெறுபேற்றை எமக்கு தெரியப்படுத்தினால் அவற்றை பிரசுரிப்போம்
நன்றி 


Monday, March 30, 2015

உசனை சேர்ந்த 2 மாணவர்கள் 9 A சித்தி பெற்றனர்

2014 ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் வந்த நிலையில் எமக்கு கிடைத்த தகவலின் அடிப்படியில் 
உசனை சேர்ந்த இரண்டு மாணவர்கள் 9A சித்தி பெற்றுள்ளனர் 
 திரு .திருமதி விஜயதாசன் சோதி தம்பதிகளின் புதல்வி செல்வி.மதனிகா ஆங்கில பிரிவில் 9 A பெறுபேற்றையும்
அதே போன்று  திரு .திருமதி .மிகுந்தன் துஸ்யந்தி தம்பதிகளின் புதல்வன் செல்வன்,வட்சலன் 9 A பெறுபேற்றையும் பெற்றுள்ளார்கள்
செல்வி.மதனிகாவுக்கும் செல்வன் வட்சலனுக்கும்   உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் சார்பில் எமது வாழ்த்துக்கள் உரித்தாகுக
 உசனை சேர்ந்த  மாணவர்கள் யாரவது உங்கள் பெறுபேற்றை எமக்கு தெரியப்படுத்தினால் அவற்றை பிரசுரிப்போம்
நன்றி 


உலககிண்ண ...சர்வதேச போட்டிக்கு தெரிவாகிய "உசன் வீரர்கள்"

Kokulan Sivakumar
Sivakumar Navaratnam

Umapathy Rajaratnam 
எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 4ம் ,5ம் திகதிகளில் பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் ,உலக கிண்ண சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட சுற்றுபோட்டியில் ,இலங்கை இந்தியா உட்பட 35 க்குமேட்பட்ட நாட்டு வீரர்கள் கலந்துகொள்ள உள்ள நிலையில் , கனடா நாடு சார்பாக 11 போட்டியாளர்கள் ,இந்த உலக கிண்ண போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர் ,
கனடா நாட்டின் சார்பாக தெரிவு செய்யப்பட்ட அணியில் எமது
"Usan Sports Club " ல் இருந்து மூவர் தெரிவாகியுள்ளனர் , எமது கழகத்தின் விளையட்டுதுறை பொறுப்பாளர் திரு.உமாபதி ராஜரத்தினம் ,
பிரதான பயிற்சி ஆசிரியர் .திரு.சிவகுமார் நவரத்தினம் ,
உதவி பயிற்சியாளர் செல்வன் .கோகுலன் சிவகுமார் ஆகியோர்  தெரிவாகியுள்ளனர் ,கடந்த சில வாரங்களுக்கு முன் கனடாவில் நடந்த தெற்காசிய போட்டியில் உமாபதி மற்றும் கோகுலன் ஆகியோர்  திறமையாக விளையாடி வெற்றி பெற்றிருந்தனர் ,இன்னும் சில தினங்களில்  இந்த அணியினர் இங்கிலாந்து செல்ல தயாராகிவருகின்றனர் , எமது உசன் மக்களை பிரதிநிதித்துவபடுத்தி சர்வதேச அரங்கில் விளையாடா போகும் எமது வீரர்களை உற்சாகபடுத்தி அவர்களுக்கு உங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இவர்கள் அபார வெற்றி பெற உற்சாகம் வழங்குமாறு வேண்டுகிறோம் .இந்த போட்டியானது
    The National Badminton Centre
    Bradwell Road, Loughton, Milton Keynes, MK8 9LA
எனற இடத்தில் நடைபெறவுள்ளது ,
மேலதிக விபரங்களை இந்த தளத்தில் பார்வையிடலாம் 
http://wtbf.net/index.php/8-uk2015
கனடா அணியினரும் எமது உசன் வீரர்களும் வெற்றி பெற கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது ,





Wednesday, March 25, 2015

பிரதேச செயலாளராக..உசனை சேர்ந்த திரு.சுசீன் அவர்கள்

உசனை சேர்ந்த முன்னாள் உப அதிபர் /ஆசிரியை ஆகிய திரு திருமதி ஜோன்பிள்ளை அவர்களின் புதல்வனும் , உசன் இராமநாதன் மஹா வித்தியாலய பழைய மாணவனுமாகிய திரு.சுசீந்திரன் அருள்ராஜ் அவர்கள் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக தமது கடமைகளை 18.03.2015 தொடக்கம் பொறுப்பேற்றுக்கொண்டார்.
எமது கிராமத்திலிருந்து முதன் முதலில் பிரதேச செயலாளராக பதவி வகிக்கும் பெருமையை 
திரு.சுசீன் அவர்கள் பெற்றுக்கொளது பெருமை தருகிறது .
திரு.சுசீந்திரன் அருள்ராஜ் மேலும் பதவி உயர்வு பெற உசன் மக்கள் சார்பாகவும் 
கனடா உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் சார்பாகவும் எமது  வாழ்த்துக்கள் .



உசன் கந்தசாமி கோவில் பிரதம குருக்களுடனான சந்திப்பு

கனடாவுக்கு வருகை தந்திருக்கும் உசன் கந்தசாமி கோவில் பிரதம குருக்கள், அருள் வாக்குச் சித்தர் இரத்தின கேதீஸ்வர சுவாமிகளுடனான சந்திப்பு ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இடம்: கனடா ஸ்ரீ செல்வச் சந்நிதி முருகன் ஆலய மண்டபம்
முகவரி: 1 Golden Gate Court, Scarborough, ON M1P 3A4
திகதி: April 4, 2015 சனிக்கிழமை
நேரம்: மாலை 6 மணி

இந்த சந்திப்பு நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா


Sunday, March 15, 2015

அபார வெற்றி பெற்றது "Usan Sports Club"

வரலாற்றில் முதல் தடவையாக வெளிநாடு ஒன்றில் எமது உசன் மைந்தர்கள் நிகழ்த்திய விளையாட்டு சாதனையாக பதிவு பெற்றது இன்றைய  South Asian Badminton Tournament போட்டி  .
மிக குறுகிய காலத்தில் சிறந்த வழி காட்டலுடன் பயிற்சி பெற்ற எமது உசன் வீரர்கள் . மிகவும் சவால் மிக்க அணியினரை தக்க மதி நுட்பத்துடனும் தீரத்ததுடனும் எதிர்கொண்டு வெற்றி பெற்றனர் ,
எமது அணி பங்கு பற்றிய பெரும்பாலான போட்டிகளில் எமது வீரர்களே
வெற்றியை தமதாக்கி Usan Sports Club க்கும் உசன் மக்களுக்கும் பெருமை சேர்த்தனர் . ஆடு தளத்தின் பல பகுதிகளிலும் உசன் வீரர்கள் தமது சீருடையுடன் நின்று விளையாடிது கண்ணுக்கு விருந்தா அமைந்திருந்தது .
எமது அணியினருக்கு Markham நகரசபையின் சிறப்பு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது . எமக்கு அனுசரணை வழங்கிய Royal Brokerage நிறுவன அதிபர் திரு.சிவா கந்தையா அவர்கள் நேரடியாக வருகை தந்து போட்டியாளர்களுக்கு உற்சாகம் வழங்கி பரிசில்களையும் வழங்கினார்  
வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் ஊக்கம் வழங்கிய பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றிகள் .
தொடரவிருக்கும் எமது பயிற்சி அணியில் நீங்களும் உங்கள் பிள்ளைகளையும் இணைத்து அடுத்த போட்டிக்கு தயாராவோம் ..










மேலதிக படங்களை எமது Facebook தளத்தில் :usanpeople


Thursday, March 12, 2015

Usan Sports Club வழங்கி வரும் Badminton பயிற்சி காணொளி

Tamil Canadian Sports Association மற்றும் Elson Badminton Club ஆகிய விளையாட்டு அமைப்புகளால் நடாத்தப்படும் South Asian Badminton Tournament 2015 போட்டிக்கு இன்னும் 
சில நாட்களே இருக்கும் நிலையில் அதில் பங்குபற்றி வெற்றிபெறவேண்டும் என்ற இலக்கில் எமது Usan Sports Club உறுப்பினர்கள் கடும் பயிற்சியில் 
ஈடுபட்டு வருகின்றனர் ,
உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் வழங்கி வரும் 
BADMINTON பயிற்சி காணொளி 
நன்றி : சிவா / உமா 


Usan Sports Club போட்டியிடும் வீர்களின் விபரம்


Tamil Canadian Sports Association மற்றும் Elson Badminton Club ஆகிய விளையாட்டு அமைப்புகளால் நடாத்தப்படும் South Asian Badminton Tournament 2015 எதிர்வரும் சனிக்கிழமை, March மாதம் 14 ஆம் திகதி இடம்பெற உள்ளது.  பல்வேறுபட்ட விளையாட்டு அமைப்புகளும் பங்குபற்றும் இந்தப் போட்டிகளில் உசன் இளையவர்கள் Usan Sports Club என்ற புதிய விளையாட்டு அமைப்பினூடாகக் கலந்து கொள்கின்றனர்.உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவால் பயிற்றுவிக்கப்பட்டு வரும் போட்டியாளர்கள் குறுகிய காலத்திலேயே இப்படியான ஒரு மாபெரும் போட்டியில் தன்னம்பிக்கையோடு களம் இறங்குகின்றார்கள்.  இந்தப் போட்டியாளர்களை ஊக்குவிக்க வேண்டிய கடமை உசன் மக்கள் அனைவருக்கும் உண்டு.  எதிர்வரும் சனிக்கிழமை அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு போட்டி நடைபெறும் இடத்துக்குச் சென்று போட்டியாளர்களை உற்சாகப்படுத்துமாறு உசன் ஐக்கிய  மக்கள் ஒன்றியம் - கனடா உசன் மக்களை அன்போடு கேட்டுக்கொள்கிறது.  உங்களின் கரவொலியும், உற்சாகக் குரலும் எமது போட்டியாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் என்பதில் ஐயமில்லை.  இந்தப் போட்டிகளை முன்னின்று நடத்துபவர்களில் எமது விளையாடுத்துறைப் பொறுப்பாளர் உமாபதியும் அவருடன் இணைந்து சிவகுமார் அவர்களும் பயிற்சி  வழங்கி வருவது  குறிப்பிடத்தக்கது.

எமது போட்டியாளர்களுக்கு Royal Brokerage அதிபர் சிவா கந்தையா அவர்கள் அனுசரணை வழங்குகின்றார்.

ஆண்கள், பெண்கள் இரு பாலாரும் Singles, Doubles Open Doubles என்ற நிலைகளில் விளையாடுகிறார்கள்.

இடம்: Markham Pam Am Center
முகவரி: 16 Main Street Unionville, Unionville, ON  L3R 2E5
திகதி: சனிக்கிழமை, March 14, 2015
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை

திரளாகச் சென்று வெற்றிவாகை சூடி வருவோம்!

மேலதிக தகவலுக்கு www.facebook.com/worldtamilbadminton என்ற தளத்துக்குச் செல்லவும் அல்லது 647-869-2441 என்ற தொலைபேசி இலக்கத்தில் உமாபதியோடு தொடர்பு கொள்ளவும்.



Monday, March 9, 2015

வாழ்த்துகிறோம்!

இலங்கையின் வட மாகாண வைதியசாலைகளுக்கிடையே சேவைகளைச் சிறப்பாக வழங்கும் வைத்தியசாலைக்கு வழங்கப்படும் மாகாண சுகாதார சிறப்பு விருது (Provincial Health Excellence Award) வடமராட்சியில் அமைந்திருக்கும் கரவெட்டி பிரதேச வைத்தியசாலைக்குக் கிடைத்துள்ளது. இந்த வைத்தியசாலையை முன்னின்று வழி நடத்துபவர் உசனைச் சேர்ந்த வைத்திய கலாநிதி சிவபாதம் சுதோகுமார் ஆவார். இந்தச் சிறப்பான செயலால் உசன் மக்களுக்குப் பெருமை தேடித் தந்த அவருக்கு உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.


Sunday, March 8, 2015

உசன் கந்தசாமி கோவில் பிரதம குருக்களை வரவேற்கிறோம்!

தனிப்பட்ட நோக்கமாக Toronto, கனடாவுக்கு வருகை தந்துள்ள உசன் கந்தசாமி கோவில் பிரதமகுருக்கள், அருள் வாக்குச் சித்தர் குகஸ்ரீ இரத்தின கேதீஸ்வர சுவாமிகளை உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா அன்போடு வரவேற்கிறது.

உசன் கந்தசாமி கோவில் இன்றுவரை பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் ஒரு திருத்தலமாக விளங்குவதற்கு குகஸ்ரீ இரத்தின கேதீஸ்வர சுவாமிகளின் பங்கு மிக முக்கியமானது. வருடந்தோறும் நடைபெறும் ஸ்கந்த ஹோமம் இந்த வருடமும் February மாதம் 22 ஆம் திகதி மிகவும் சிறப்பாக நடைபெற்றதை இங்கே நினைவு கூரலாம். வருடாந்த மகோற்சவமும் முறை தவறாது சுவாமிகளின் வழிகாட்டலிலே சிறப்பாக நடைபெற்று வருவது உசன் மக்கள் மட்டுமல்ல அயற்கிராம மக்களும் செய்த பெரும் பாக்கியமே!

உசன் கிராமத்துக்கும், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவுக்கும் பல சேவைகளைச் செய்துவரும் குகஸ்ரீ இரத்தின கேதீஸ்வர சுவாமிகள் நீண்ட ஆயுளோடு, நோயற்ற வாழ்வு வாழ உசன் முருகன் அருள் புரிய வேண்டுமென்று உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா பிரார்த்திக்கிறது. சுவாமிகள் Toronto வில் நிற்கும்போது சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றுக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மேலேயுள்ள படத்திலே சுவாமிகள் தனது குடும்ப நண்பரான தர்மகுலன் (ரவி) கனகசபை அவர்களோடு காணப்படுகிறார்.


Friday, March 6, 2015

உருவாகியது "Usan Sports Club"



கனடாவில் வாழும் உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் அங்கத்தவர்களிடையே விளையாட்டுத் திறமையை வளர்க்குமுகமாக "Usan Sports Club" உருவாக்கம் பெற்றுள்ளது. கடந்த வருடத்திலிருந்து பிரதி செவ்வாய் தோறும் Badminton பயிற்சி நடைபெறுவதை நீங்கள் அறிவீர்கள். அதன் வளர்ச்சியின் ஒருபடியாக March 14 ஆம் திகதி Toronto, கனடாவில் நடைபெறவிருக்கும் South Asian Badminton Tournament இல் எமது விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்த வீரர்களுக்கு கனடாவின் Royal Brokerage நிறுவன அதிபர் திரு. சிவா கந்தையா அவர்கள் அனுசரணை வழங்க முன்வந்துள்ளார்.

கனடா வில் இருக்கும் பல நாட்டு வீரர்கள் இதில் போட்டியிட உள்ள நிலையில், எமது உசன் கிராமத்தை சேர்ந்த இளம் வீர்கள் முதன் முதலில் "Usan Sports Club" சார்பாக களமிறங்கவுள்ளனர். இந்தப் போட்டி நடைபெறவிருக்கும் இடம் மிகவும் முக்கியம் வாய்ந்தது. எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள PAN-AM Game க்காக கட்டப்பட்டுள்ள புதிய Markham PAN AM Center ல் நடைபெறவுள்ளது. இதில் பல்கலாச்சார நாட்டவருடன் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இது குறித்து மேலதிக தகவல்களுக்கு உமாபதி அல்லது சிவகுமார் ஆகியோருடன் தொடர்பு கொள்ளலாம். South Asian Badminton Tournament இல் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டு உசன் விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகமூட்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.



திருமதி.உமையம்மை செல்லையா அவர்களின் மரண அறிவித்தல்


உசனை  சேர்ந்த திரு.ஒப்பிலாமணி வியயரூபன் அவர்களின் மாமியார் 
திருமதி.உமையம்மை செல்லையா அவர்கள் 4.3.2015 அன்று மீசாலையில் 
காலமானார் ,
அன்னார் காலம்சென்றவர்களான  குமாராசாமி சின்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலம்சென்றவர்களான கணபதிப்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதியரின் மருமகளும் ,செல்லையாவின்(கிளி) அன்புமனைவியும் ,
கலாவதனி (கனடா) சுகந்தினி(ஆசிரியர்)கலாநிதி,ஐங்கரன் (பொறியியலாளர் -லண்டன் )காலம்சென்ற யசோதரன் ஆகியோரின் அன்புத்தாயாரும் ,
வியஜரூபன் (உசன்-கனடா ) மதியானந்தன் ,கலாநிதி சிந்துஜா ஆகியோரின் பாசமிகு மாமியும் சஜினி ,அபிசன், கபிஷா,சதுஷிகன் தேனுஷிகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார் ,
அன்னாரின் ஈமைகிரிகைகள் மீசாலையில் நடைபெற்றது ,இவ அறிவித்தலை 
உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு வேண்டுகிறோம் .

தகவல் :மகள் / மருமகன் 
  கலா-ரூபன் (கனடா )      +1 905-532-1355
                                                    +14162711763


உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுகழகம் வழங்கும் கற்றல் உபகரணம்

உசன் ஸ்ரீமுருகன் விளையட்டு கழககத்தின் 55 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கழக  உறுப்பினர்களின் முயற்சியில் ,உசன் இராமநாதன் மகாவித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் ஊக்குவிப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது ,மார்ச் மாதம் 7 திகதி மாலை 3 மணிக்கு
கழகத்தின் தலைவர் திரு.சிவானந்தம் செல்வரூபன் தலைமையில் நடைபெறவிருக்கும் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவஞானம் சிரதரன் அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார் ,
இன் நிகழ்வில் அனத்து உசன் மக்களையும் பாடசாலை பழைய மாணவர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகிறோம் ,



Monday, March 2, 2015

ஸ்ரீ முருகன் விளையாட்டு கழகத்தின் மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுபோட்டி

தமது 55 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகத்தினர் யாழ் மாவட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே மாபெரும் கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்றை நடாத்த உள்ளனர். இந்தப் போட்டி மிகச்சிறப்பாக நடைபெற உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வாழ்த்துக்களைத் தெரிவித்து நிக்கிறது. இந்த நிகழ்வில் வெற்றிபெறும் விளையாட்டுக் கழகங்களுக்கு வழங்கப்படும் வெற்றிக் கிண்ணங்களுக்கான அனுசரணையை உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா வழங்கி, எமது கிராமத்தின் விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க முன்வந்துள்ளது.

அதை விட 55வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கழக வரலாறு, தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்கள், மற்றும் விளையாட்டுக்கள் சம்பந்தப்பட்ட விடையங்கள், தமிழரின் வாழ்வுடன் ஒன்றித்த சம்பிரதாய நிகழ்வுகளின் விதிமுறைகளை உள்ளடக்கியதான நூல் ஒன்றை வெளியிட உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுக் கழகம் உத்தேசித்திருப்பதால் மேற்படி விடயம் சம்பந்தமாக அன்பர்கள், ஆதரவாளர்களிடமிருந்து பெறுமதியான தகவல்கள், அபிப்பிராயங்கள், கருத்துக்களை வேண்டி நிற்கிறார்கள்.

தொடர்புகளுக்கு
தொலைபேசி
0777276189
0776160302
0774004151
அஞ்சல்: நூலாக்கல் பிரிவு,சிறி முருகன் விளையாட்டுக் கழகம், உசன், மிருசுவில்.
மின்னஞ்சல்: Usansrimurugansportsclub@gmail.com