அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Saturday, February 28, 2015

உசன் கந்தசுவாமி கோவிலில் ஸ்கந்தஹோமம்


உசன் கந்தசுவாமி கோவிலில் வருடாந்தம் நடைபெறும் ஸ்கந்த ஹோமம் கடந்த 22 திகதி மிக சிறப்பாக நடைபெற்றது ,
கந்த சுவாமி கோவில் பிரதம குரு சிவா ஸ்ரீ கேதீஸ்வர குருக்களின் ஏற்றபட்டில் நடைபெற்ற இன் நிகழ்வை சிவா ஸ்ரீ சுந்தரேஸ்வர குருக்கள் தலைமையில் அந்தணர்களின் மந்திர ஒலி முழங்க முருகபெருமானுக்கு
ஸ்கந்தஹோமம் சிறப்பாக நடைபெற்றது .








படங்கள் : பவபிரிய சர்மா 


Tuesday, February 24, 2015

உசன் பொதுமக்கள் நிழல் குடை

உசன் சந்தியில் பொதுமக்கள் நலன் கருதி உசன் ஸ்ரீ முருகன் விளையாட்டுகழகத்தின் திட்டமிடலில் கனடா உசன் ஐக்கிய மக்கள்  ஒன்றியத்தின் அனுசரணையுடன் அமைக்கப்பட்டுவரும் ,"திரு.க.வெற்றிவேலு ஞாபகார்த்த"(இ.பொ.ச. நடத்துனர் ) பொதுமக்கள் நிழல் குடை அமைக்கும் பணி உசன் ஸ்ரீ முருகன் உறுப்பினர்களின் முயற்சியில் துரித கதியில் நடைபெற்று வருகிறது ,
கழகத்தின் தலைவர் திரு.ரூபன் அவர்கள் செயல்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற அயராது உழைத்து வருகிறார் . அவருக்கும் , கழக உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றி










Saturday, February 21, 2015

திருமதி செல்லம்மா செல்லத்துரை

அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், உசனை வாழ்விடமாகவும் கொண்டு இலண்டன், பெரிய பிரித்தானியாவில் வசித்துவந்தவரான திருமதி செல்லம்மா செல்லத்துரை அவர்கள் February 21, 2015 அன்று இலண்டனில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் முன்நாள் அதிபர் காலஞ்சென்ற திரு. செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

சிவாஜினி (இலண்டன்), ஜீவகன் (இலண்டன்), அசோகன் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற நமசிவாயம், கனகசபை (கனடா; முன்னாள் புகையிரத நிலைய அதிபர்; காப்பாளர், உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா), சிவக்கொழுந்து (சிங்கப்பூர்) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.

இவ்வறிவித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தகவல்:
திரு. கனகசபை (சகோதரன்) - +1-416-439-3994 அல்லது +1-905-948-1349


Monday, February 16, 2015

திருமதி.ஜெகதீஸ்வரி கனகரத்தினம் அவர்களின் மரண அறிவித்தல்.


உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடாவின் நிர்வாகசபை உறுப்பினர் திரு.அச்சுதன் அவர்களின் சகோதரி முறையான திருமதி.ஜெகதீஸ்வரி கனகரத்தினம் அவர்கள் 15.2.2015 அன்று உசனில் காலமானார்.

அன்னார் திரு.பொ.கனகரத்தினம் (ஓய்வுபெற்ற அதிபர் யா/விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயம் ) அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை பராசக்தி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலம்சென்ற ஜெகதீஸ்வரன் அவர்களின் அருமை சகோதரியும்,

கார்த்திகா (பிரதேச செயலகம் - தென்மராட்சி ), மதுராகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நவநீதன்(மாவட்ட நீதிமன்றம் - யாழ்ப்பாணம் ) அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் உசனில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் ஈச்சங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு வேண்டுகிறோம்.

தகவல்:
அச்சுதன் (கனடா ): +14164571162
தொடர்புகளுக்கு: +94777030516


Sunday, February 15, 2015

நாகம்மா பஞ்சலிங்கம்

உசனைச் சேர்ந்த ரஜனி (பபி) ராஜேந்திரன் அவர்களின் மாமியார் நாகம்மா பஞ்சலிங்கம் அவர்கள் 11-02-2015 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

இவர் யாழ். கெருடாவில் மயிலியதனையைப் பிறப்பிடமாகவும், கம்பர்மலையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பஞ்சலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரத்தினசபா(கட்டி), காஞ்சனா(கமலா), பங்கையற்செல்வம்(இந்திரா), ராஜேந்திரன்(சிறி), ரஞ்சனா, ரணராஜா(ராஜன்), ரவிகுலதேவி(குஞ்சு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து, தங்கம்மா, மீனாட்சிப்பிள்ளை, பொன்னையா, தங்கராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 17-02-2015 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:30 மணி முதல் 10:30 மணி வரை Highland Funeral Home, Scarborough Chapel 3280, Sheppard Avenue East Scarborough, ON M1T 3K3, Canada என்னும் முகவரியில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

பார்வைக்கு
திங்கட்கிழமை 16/02/2015, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Highland Funeral Home - Scarborough Chapel 3280 Sheppard Avenue East Scarborough, ON M1T 3K3 Canada.

நல்லடக்கம்
செவ்வாய்க்கிழமை 17/02/2015, 12:30 பி.ப
முகவரி: Duffin Meadows Cemetery 2505 Brock Rd Pickering, ON L1V 2P8, Canada. T.P +1 905-427-3385

தொடர்புகளுக்கு:
சிறி(பபி) — கனடா
தொலைபேசி: +14166099229


Sunday, February 1, 2015

பத்மாவதி பாலசுந்தரம்

உசனைச் சேர்ந்த செந்தில்மதி (செந்தா) அவர்களின் மாமியாரும் சனார்த்தனா (சனா) அவர்களின் தாயாருமான பத்மாவதி பாலசுந்தரம் அவர்கள் புதன்கிழமை 28-01-2015 அன்று இலண்டனில் சிவபதம் அடைந்தார்.

இவர் மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சுழிபுரத்தை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டிருந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சீதாத்தப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

வாசுகி(Suki), சனார்த்தனா(Victor), சங்கரன்(Bob), சயந்தன்(Sandy), சாந்தீபன்(Simon) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிறிலாவதி, காலஞ்சென்றவர்களான லீலாவதி, தனபாலன், தருமபாலன், மற்றும் ஜெயபாலன், கமலாவதி, கோபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், மற்றும் செந்தில்மதி, மைதிலி, பாரதி, பிரேமகெளரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சஞ்சீவ் மயூரா, அனுஷ்கா கேஷவா, டிலானி, டிலேஸ், தனுஜன், அஸ்வினி, அங்குஜன், நந்தீஷன், ஆரபி, ஆரபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சிவானியா, அருண், அமரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் புதன்கிழமை, 04-02-2015 அன்று Putney Vale Crematorium, Stag Lane, London SW15 3DZ, United Kingdom என்ற முகவரியில் இடம்பெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

சனார்த்தனா அவர்களின் தந்தையார் திரு. பாலசுந்தரம் அவர்கள் 09-01-2015 அன்று காலமானார் என்பதையும் அறியத் தருகிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
வாசுகி — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447976301053
சங்கரன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447424316309
சயந்தன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447540299916
சாந்தீபன் — பிரித்தானியா செல்லிடப்பேசி: +447846499486
சனார்த்தனா — கனடா செல்லிடப்பேசி: +16477649291