உசனைச் சேர்ந்த ஜெகதீஸ்வரி (சிதம்பரப்பிள்ளை) அவர்களின் அன்புக் கணவர் சிதம்பரப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 27-01-2015 செவ்வாய்க்கிழமை அன்று டென்மார்க்கில் சிவபதம் அடைந்தார்.
இவர் யாழ். தென்மராட்சி வரணி குடமியனைப் பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்டவர்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
துவாரகன், துளசிஹா (டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தெய்வானைப்பிள்ளை, குமாரசாமி, கனகரத்தினம், இராசமலர் (இலங்கை), கமலாம்பிகை, பீட்ரா, புஸ்பராணி, சத்தியா, உஷாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டெனிஷா அவர்களின் அன்பு மாமனாரும்,
ஹரிஷா அவர்களின் அன்புப் பேரனும்,
வேலாயுதம், யோகேஸ்வரி, சிவனேஸ்வரி, ஞானவடிவேல், இராசேஸ்வரி (ராணி), ஜெகதீஸ்வரன் (பெரியாம்பி), யோகநாதன் (சின்னாம்பி), தயாபரன் (தயா), உதயகுமாரன் (உதயன்)), யோகேஸ்வரி (யோகேஸ்), தயாளினி (தயாளி), வரதகுமாரன் (வரதன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அனுஷா, மதன், முகுந்தன், அகிலன், மோகனன், லிகிர்தன், சுபா, யவநீதன், யதுகுலன், யசோதரன், வினுஜா, ஜனோஷன், கிருஷாலினி, சுலக்ஷன், கஜனன், கஜிதா ஆகியோரின் அன்புப் பெரிய தந்தையும்,
சுபாஷினி, சுமதா, சிவறூபன், முரளீதரன், வேல்வேந்தன், நிஷாலினி, சர்மிலன், லக்ஷனா, சிந்துஜன், சிந்துயா, சரணியா, ஜான், ஜானா, யவனா, யசிதா, யனகன், ஆர்த்தி, மயூரா, வர்ஷா, ஆதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கனகரத்தினம், உதயகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் Vestre Kirkegård, Viborgvej 47A, 8210 Aarhus V, Denmark என்ற முகவரியில் ஞாயிற்றுக்கிழமை 01/02/2015, மு.ப 9:30 மணிக்கு நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
துவாரகன் — டென்மார்க்: +4541916035