அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Sunday, January 18, 2015

மறக்க முடியா உசன் உறவுகள்

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா மகிழ்வோடு வழங்கிய "உசன் உறவுகள் 2014" மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. திரு. திருமதி முனீஸ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். ஆடல், பாடல், மாய வித்தை, வேடிக்கை நிகழ்ச்சிகள் என்று இந்த நிகழ்வு களைகட்டி இருந்தது. கூடவே அறுசுவை உணவையும் வந்திருந்தோர் உண்டு மகிழ்ந்தனர்.

ஒன்றியத்தின் தலைவர் கனகசபை நகுலன் அவர்கள் பார்வையாளர்களை அன்போடு வரவேற்றார். திருமதி மகாரஞ்சிதம் கணேஷன் தேவாரம் பாடி நிகழ்ச்சியைச் சிறப்பித்தார்.
செல்விகள் பிரவீணா, மீனுசா, ஜனனி ஆகியோர் கனடிய தேசிய கீதம் மற்றும் தமிழ்த் தாய் வாழ்த்தை இசைத்து அவையோரை மகிழ்வித்தனர்.
South Asian Music Academy of Ontario அதிபர், இசைக் கலை மணி திருமதி குலநாயகி விவேகானந்தன் அவர்களின் மாணவிகள் சாரங்கா தயாளன் மற்றும் கனிஷா உதயகுமார் இருவரும் துதிப் பாடல்கள் பாடி வந்திருந்தோரை மகிழ்ச்சிப்படுத்தினர். இவர்கள் இருவரும் தமிழ் இசைக் கலா மன்றம் நடாத்தும் முதல் ஆண்டுப் பரீட்சையில் அதி விசேட சித்தி பெற்றவர்கள். சாரங்கா தயாளன் முன்னாள் அதிபர் திரு. பதஞ்சலி அவர்களின் பூட்டியாவார்.


பாரதி இந்திய சாஸ்திரிய நடனக் கல்லூரி அதிபர், பரத கலா வித்தகர் திருமதி சியாமா தயாளன் அவர்களின் மாணவி மதுமிதா பாஸ்கரனின் நடனம் எல்லோரையும் கவர்ந்தது. 2011 ஆம் ஆண்டு TVI தொலைக் காட்சி நிறுவனத்தால் நடாத்தப்பட்ட நடனத் தாரகை நிகழ்வில் மதுமிதா முதல் இடத்தைப் பெற்று "நாட்டியத் தாரகை" என்ற கௌரவத்தைப் பெற்றுக்கொண்டவர்.

நிஷோ பத்மநாதன், யவீன் சுப்பிரமணியம், பிரதீஸ் சுப்பிரமணியம், திருமதி ரஞ்சி வெற்றிவேலு, ஆரணி சிவநாதன் ஆகியோரின் திரையிசைப் பாடல்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.
விதுரன் கேதீஸ்வரன் மகாகவி பாரதியார் பற்றி உரையாற்றி நிகழ்ச்சிக்குச் சிறப்பூட்டினர். சிறுவர்கள், இளையவர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகியோருக்கான வேடிக்கைப் போட்டி நிகழ்ச்சிகளை ஜனனி, அபிரா ஆகியோர் சிறப்பாக நடத்தினர்.
இந்தப் போட்டி நிகழ்ச்சிகளில் அனைவரும் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்ட மாய வித்தை நிகழ்ச்சி வயது வேறுபாடின்றி அனைவரையும் கவர்ந்தது.
Royal Brokers Corporation அதிபர் சிவா கந்தையா மற்றும் Mortgage Alliance Authority ரகு புவனகாந்தன், ஒன்றியத்தின் பொருளாளர் திருமதி பிரியலதா சற்குணநாதன், திருமதி சரோஜினி இராமநாதர், திரு. ஒப்பிலாமணி விஜயரூபன், திருமதி சரோஜினி தேவபாலன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கினார்கள்.

ஒன்றியத்தின் செயலாளர் சுப்பிரமணியம் பாஸ்கரன் வந்திருந்தவர்களுக்கும், அனுசரணை வழங்கியவர்களுக்கும் நன்றி தெரிவித்தார். இது ஒன்றியத்தின் 15 ஆவது ஆண்டு என்பதை நினைவுபடுத்திய அவர் ஒன்றியத்தின் ஆரம்ப கால நிர்வாகசபைக்கும் நன்றியைத் தெரிவித்தார். அதி காலை 1 மணியளவில் நிகழ்ச்சி இன்னிதே நிறைவெய்தியது.