அனைத்துலக உசன் மக்களின் ஒரே குடில்

Thursday, January 1, 2015

அமரர் துரைசிங்கம் நடராசலிங்கம்

உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணி புரிந்த துரைசிங்கம் நடராசலிங்கம் அவர்கள் 21/11/2014 அன்று அமரத்துவம் அடைந்துவிட்டார். இவர் எழுதுமட்டுவாளைச் சேர்ந்த அமரர் துரைசிங்கம் தம்பதியினரின் மூத்த மகனாவார்.

மாணவனாக இருந்த காலத்திலேயே இவர் கல்வித் துறையில் சிறந்து விளங்கினார். சாதாரணமாக அமைதியாகக் காணப்படும் இவர் சக மாணவர்களுக்கு உதவுவதில் அக்கறை காட்டினார். குடும்பத்தில் மூத்தவரான இவர் தனது சகோதரர்களையும், சகோதரிகளையும் நல்ல முறையிலே நெறிப்படுத்தினார்.

ஒரு ஆளுமை மிக்க, திறமையான ஆசிரியராக இவர் உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் கடமையாற்றியதை சக ஆசிரியர்களும், மாணவர்களும் நன்கு அறிவர். கண்டிப்பான ஓர் ஆசிரியராக இருந்தாலும் மாணவர்களோடு அன்போடு பழகுவார். தமிழ் மொழியில் மட்டுமல்ல ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்று விளங்கினார்.

அமரர் துரைசிங்கம் நடராசலிங்கம் அவர்களுக்கு எமது அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இவரின் பிரிவால் துயருற்றிருக்கும் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து நிற்கிறோம்.

உசன் ஐக்கிய மக்கள் ஒன்றியம் - கனடா